அக்னிப்புரட்சி இன்றைய (22.12.2020) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல்- டீசல் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
* ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவம் 8ம் நாள்:
ஸ்ரீ நம்பெருமாள், முத்து சவுரி கொண்டை, வைர அபய ஹஸ்தம், பவள மாலை, முத்துச்சரம் , அடுக்கு பதக்கம், தாயார் பதக்கம், வைர அட்டிகை உள்ளிட்ட திருவாபரணங்களுடன்
மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
* பிரிட்டனிலிருந்து சென்னை திரும்பியவருக்கு
கொரோனா தொற்று உறுதி - மருத்துவமனை கண்காணிப்பில்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை
செயலாளர் தகவல்.
பிரிட்டனில் புதிய வகை கொரானா வைரஸ் பரவி வரும் நிலையில் விமான நிலையத்தில் தீவிர பரிசோதனை.
* பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு தமிழக அரசின் பங்களிப்புத் தொகை அதிகரிப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
புதிய வீடுகள் கட்டுவோருக்கான நிதி உதவி ரூ.2.75 லட்சமாக உயர்வு - முதலமைச்சர்.
கூடுதல் நிதிக்காக தமிழக அரசு சார்பில் ரூ.1,805.48 கோடி ஒதுக்கீடு
* தமிழகம் மற்றும் புதுவையில் ஜன. 18 முதல் அனைத்து கீழமை நீதிமன்றங்களும் இயங்கும் - சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம்.
* தமிழகம் மற்றும் புதுவையில் ஜன. 18 முதல் அனைத்து கீழமை நீதிமன்றங்களும் இயங்கும் - சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம்.
* நேற்று இரவு லண்டனில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் பயணம் செய்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
5 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு
தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
பிரிட்டனில் புதிய மாறுபட்ட கொரோனா வைரஸ் வேகமெடுக்கும் நிலையில் கண்காணிப்பு தீவிரம்.
* தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித்திடம், முதலமைச்சர் திரு.பழனிச்சாமி தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை மீது 97 பக்க ஊழல் புகார்கள் அடங்கிய மனுவை அளித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க, சுற்றுச்சூழல் அனுமதி அவசியமில்லை என்ற உத்தரவை எதிர்த்து வழக்கு.
மத்திய சுற்றுச்சூழல் துறை பதிலளிக்க தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு.
* 2018-ஆம் ஆண்டில் விருதுநகரை சேர்ந்த பெண்ணுக்கு கவனக்குறைவாக எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் : பாதிக்கப்பட்ட பெண் ஊட்டச்சத்தான உணவை உட்கொள்ள மாதம் தோறும் ரூ.7500 வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
* 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு - இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா.
பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடமாடும் வாகனங்கள் மூலம் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் - உமேஷ் சின்ஹா.
* தமிழகத்தில் தேர்தல் தேதி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
பணப்பட்டுவாடாவை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கான பொறுப்பு மக்களிடம் தான் உள்ளது.
உடல்நலக்குறைவு இருப்போருக்கும் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி அளிக்கப்படும்.
ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் தெரிவிக்கப்படும்.
வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதி செய்யப்படும்.
* புதுச்சேரியில் சமூக இடைவெளியுடன் புத்தாண்டை கொண்டாட அனுமதி - முதலமைச்சர் நாராயணசாமி.
கடற்கரை சாலையில் பொதுமக்கள் முக கவசம் அனிந்து புத்தாண்டை கொண்டாடலாம் - நாராயணசாமி.
* இசையமைப்பாளர் இளையராஜாவை நிபந்தனைகளுடன் பிரசாத் ஸ்டூடியோவுக்குள் அனுமதிக்க தயார் -சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் தகவல்.
சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு தொடர்ந்த வழக்கு மற்றும் கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
பிரசாத் ஸ்டூடியோவுக்கு சொந்தமான நிலத்தை உரிமை கோர கூடாது - நிபந்தனை.
ஒரு உதவியாளர், ஒரு இசைக்கலைஞர் மற்றும் வழக்கறிஞர் மட்டுமே உடன் வர வேண்டும்.
நிபந்தனைகளை ஏற்று இன்று மாலைக்குள் மனு தாக்கல் செய்யப்படும் - இளையராஜா தரப்பு.
* கொரோனா பாதித்தவர்கள் குறித்து ரங்கராஜன் குழு அளித்த அறிக்கையை அரசு பரிசீலித்தது-ஊழல் புகார் குற்றச்சாட்டு- ஸ்டாலினுக்கு பதில்.
குழுவின் அறிக்கைபடியே பொங்கல் தொகுப்பாக ரூ.2500 வழங்கப்படுகிறது.
புதிய தொழிற்சாலைகள் உருவாக்க வேண்டும் எனவும் குழு பரிந்துரை செய்தது.
தொழில் துவங்க யார் முன்வந்தாலும் அவர்களுக்கு அரசு தேவையான உதவிகள் செய்யும்.
இ-டெண்டர் முறையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை.
இ-டெண்டர் முறையில் தவறு நடக்க வாய்ப்பே இல்லை - ஊழல் புகார் குற்றச்சாட்டு- ஸ்டாலினுக்கு பதில்.
* இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவலை தான் அதிகரித்துள்ளது:
உருமாற்றம் காரணமாக நோயுடைய தீவிரத்தன்மையோ அல்லது இறப்பு விகிதமோ அதிகரிக்கவில்லை.
நிதி ஆயோக்கின் சுகாதாரத்துறை உறுப்பினர் வி.கே. பால் தகவல்.
இங்கிலாந்தில் பரவிய புதிய வைரஸ் இதுவரை இந்தியாவில் பரவவில்லை - வி.கே.பால்.
* உருமாற்றம் பெற்று பரவும் கொரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.
புதிய கொரோனாவால் மோசமான விளைவுகளை தடுக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* இலக்கும்-நோக்கும் 200" எனும் தலைப்பில் திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்:
மக்கள் நம் பக்கம், ஆட்சி மாற்றம் நிச்சயம். 200 தொகுதிகளில் வென்றெடுப்பதே லட்சியம், அதை வென்றெடுப்போம்- தமிழகத்தை மீட்டெடுப்போம் - மு.க.ஸ்டாலின்.
தேர்தலில் நாம் தான் வெற்றியடைய போகிறோம். அதற்கு தடுப்பு-தடைகளை ஆட்சியாளர்கள் ஏற்படுத்த நினைப்பார்கள். அதை எதிர்கொள்ள உள்ள ஆயுதத்தின் பெயர் தான் திராவிடம் - ஸ்டாலின்.
தமிழகத்தில் 77 கழக மாவட்டங்கள் உள்ளன. இவையே தேர்தல் களத்தை எதிர்கொள்வதற்கான மாவட்டங்கள் ஆகும்.
இந்த மாவட்டங்கள் அனைத்திலும் கிராம சபை மற்றும் வார்டு கூட்டங்களை நடத்த வேண்டும். 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற பதாகையை ஏந்திக் கொண்டு, திமுக ஆட்சியின் சாதனைகள், இந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியின் ஊழல்கள் பற்றிய துண்டறிக்கைகளை ஒவ்வொரு வாக்களர்களுக்கும் அளிக்க வேண்டும்.
பதாகைகள், சுவரொட்டிகள் அனைத்திலும் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் தவிர வேறு படங்கள் இருக்கக் கூடாது.
10 நாட்கள் நடைபெறும் கிராமசபை மற்றும் வார்டு கூட்டங்களில் 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற தீர்மானத்தை பலத்த குரலுடன் நிறைவேற்ற வேண்டும்.
* வரும் டிசம்பர் 31-ஆம் தேதி பாமக சிறப்பு பொதுக்குழு - பாமக தலைவர் ஜி.கே.மணி.
இணைய வழியே நடைபெறும் இக்கூட்டத்தில் வரும் 2021 சட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் -பாமக தலைவர் ஜி.கே.மணி.
* ஜனவரி, பிப்ரவரியில் சிபிஎஸ்சி தேர்வு நடத்தப்படாது - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.
தேர்வு எப்போதும் நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் - ரமேஷ் பொக்ரியால்.
* தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்திற்கு நேரில் சென்று மறைந்த வன்னியர் சங்க தலைவர் குருவின் திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.
காடுவெட்டி குருவின் தாயாரிடம் உடல்நலனையும் விசாரித்தார்.
* புறநகர் மின்சார ரயில்களில் அனைவரும் பயணிக்கலாம்:
நெரிசல் நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் அனைத்து பயணிகளும் பயணம் செய்ய அனுமதி - ரயில்வே நிர்வாகம்.
காலை 7 மணி முதல் 10 மணி வரை, பிற்பகல் 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை நெரிசல் நேரம்.
இந்த நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் பயணிகள் பயணிக்கலாம்- ரயில்வே நிர்வாகம்.
* டிச.26 முதல் 30-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம்:
ரேஷன் கடை ஊழியர்கள் வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்க வேண்டும் - தமிழக அரசு.
பொங்கல் பரிசுத்தொகுப்பு, ரூ.2500 ரொக்கம் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும்.
எந்த காரணத்தைக் கொண்டும் ரூ.2500யை உறையில் வைத்து வழங்கக்கூடாது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை ஜன.4-ம் தேதி முதல் 12-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
விடுபட்ட, அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு ஜன.13-ம் தேதியில் பரிசுத்தொகுப்பு, ரொக்கத்தொகை வழங்க வேண்டும் - தமிழக அரசு.
No comments:
Post a Comment