அர்னாப் கோஸ்வாமி நிகழ்ச்சிக்கு ரூ.20 லட்சம் அபராதம்: - பிரிட்டன் அரசு உத்தரவு! - Agnipuratchi

அர்னாப் கோஸ்வாமி நிகழ்ச்சிக்கு ரூ.20 லட்சம் அபராதம்: - பிரிட்டன் அரசு உத்தரவு!

Share This

அர்னாப் கோஸ்வாமி நிகழ்ச்சிக்கு ரூ.20 லட்சம் அபராதம்: - பிரிட்டன் அரசு உத்தரவு!

விவாத நிகழ்ச்சியில் 'நாம் விஞ்ஞானிகளை உருவாக்குகிறோம்; பாகிஸ்தானில் தீவிரவாதிகளை உருவாக்குகின்றனர்' என பேசியதற்காக அர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவிக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்து பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019 செப்டம்பர் 6 ஆம் தேதி ரிபப்ளிக் டிவியின் ஒரு செய்தி நிகழ்ச்சி பிரிட்டனில் ஒளிபரப்பானது.  இந்நிகழ்ச்சியில் நிலவுக்குச் சென்ற சந்திரயான்-2 விண்கலம் குறித்து அர்னாப் கோஸ்வாமியுடன் சில பிரபலங்கள் பேசியது ஒளிபரப்பானது.  இதில் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மற்றும் தொழில்நுட்ப சாதனைகளை பாகிஸ்தான் நாட்டுடன் ஒப்பிட்டு இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்துப் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த அர்னாப் கோஸ்வாமி மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு சிலர் பாகிஸ்தானைப் பற்றியும் அந்நாட்டு மக்களைப் பற்றியும் தகாத வார்த்தைகள் கூறியதாக தெரிகிறது. அவர்கள், ”பாகிஸ்தானில் உள்ள விஞ்ஞானிகள், மருத்துவர்கள், தலைவர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் தீவிரவாதிகள். அங்கு பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தீவிரவாதிகள்” என வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக விமர்சித்துள்ளதாக பிரிட்டன் அரசின் ஒளிபரப்பு ஒழுங்குத் துறை புகார் பதிவு செய்துள்ளது. மேலும் அர்னாப் கோஸ்வாமி, “நாம் விஞ்ஞானிகளை உருவாக்குகிறோம்.  அவர்கள் தீவிரவாதிகளை உருவாக்குகின்றனர்.’ எனக் கூறியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதையொட்டி பிரிட்டனில் ரிபப்ளிக் டிவி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் ஓர்ல்ட் வைட் மீடியா நெட் ஒர்க் லிமிடெட்(worldwide media network limited) நிறுவனத்துக்கு பிரிட்டன் அரசின் ஒளிபரப்பு ஒழுங்குத் துறை 20 ஆயிரம் பவுண்டுகள்(ரூ.20 லட்சம்) அபராதம் விதித்துள்ளது.  அத்துடன் இது குறித்து ரிபப்ளிக் டிவி நிபந்தனைய்ற்ற மன்னிப்பு கோர வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages