அக்னிப்புரட்சி இன்றைய (23.12.2020) முக்கிய செய்திகள்
* தயாநிதி மாறன் கார் மீது பாமகவினர் கல்வீசி தாக்குதல், சேலத்தில் பரபரப்பு..!
பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் கொடுக்கும் அளவுக்கு திமுகவிடம் பணம் இல்லை என்று தயாநிதி மாறன் கூறியிருந்தார்.
இதுதான் பாமக தரப்பினருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டது.. ஓமலூரை அடுத்த சிக்கம்பட்டி, தொளசம்பட்டி, ஓமலூர், பொட்டிபுரம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் பேசிமுடித்துவிட்டு, பூசாரிப்பட்டி நோக்கி தயாநிதிமாறன் செல்லும் பொழுது அங்கு நூற்றுக்கு மேற்பட்ட பாமகவினர் திரண்டு விட்டனர்.
டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி பற்றியும் அவதூறாக பேசியதாக கூறி கருப்பு கொடி காட்டினர்.
அதற்குள் இந்த விவகாரம் தெரிந்து திமுகவினரும் அங்கு கூடிவிட்டனர்.
இதனால் திமுக - பாமக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பில் முடிந்தது..
இந்த மோதலில் தயாநிதி மாறனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
காரின் முன் பகுதியில் உள்ள விளக்கும் நொறுங்கியது. இதையடுத்து அந்த பகுதியே பரபரப்பாகிவிட்டது.
உடனே இருதரப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதற்குள் போலீசார் குவிக்கப்பட்டு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாதவண்ணம், பாதுகாப்புகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
* சென்னையில் பெட்ரோல்- டீசல் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
* இன்று முதல் திமுக சார்பில் கிராம சபை கூட்டங்கள் தொடக்கம்.
காஞ்சிபுரம் அருகே தொடங்கி வைக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
மின் தடைகளை சரி செய்ய வரும் பணியாளர்கள் பணம் கேட்டால் கொடுக்க வேண்டாம் மின் வாரியம் திடீர் அறிவிப்பு
💥TNPSC தேர்வுகளை எழுத ஆதார் எண் கட்டாயம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
ஒரு முறை பதிவில் சென்று ஆதார் எண்ணை இணைத்திட வேண்டும் என அறிவுறுத்தல்
மேலும் 03.01.2021 அன்று நடைபெறவுள்ள தொகுதி 1 (Group 1) தேர்வு மற்றும் 10.01.2021 அன்று நடைபெறவுள்ள உதவி இயக்குநர் (தொழில் & வணிகம்) ஆகிய தேர்வுகளுக்கு விண்ணப்பித் துள்ளவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வெளியீடு.
* ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவம் 9ம் நாள்:
ஸ்ரீ நம்பெருமாள், சாய்கொண்டையுடன் முத்துக்குறி அலங்காரத்தில்
மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
* மறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுவையிலுள்ள புகழ்பெற்ற "ZUKA சாக்லேட்" நிறுவனம் 5.8 அடி உயரமும், 339 கிலோ எடையும் கொண்ட சிலையை வடிவமைத்துள்ளது.
டிசம்பர் 23 முதல் ஜனவரி 3-ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.
* தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
* வன்னியர்களுக்கு 20 % இட ஒதுக்கீட்டை அறிவித்து அதற்கான அரசாணையை கையில் கொடுக்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி என்பதில் மருத்துவர் இராமதாசு மிக உறுதியாக இருப்பார்…
அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி ஆகியோர் நேற்று தைலாபுரம் தோட்டம் சென்றது குறித்து முரசொலி விமர்சனம்
* படிப்படியான மது விலக்கு கொள்கையின் அடிப்படையில் மதுக்கடைகளின் எண்ணிக்கையையும் நேரத்தையும் குறைப்பது குறித்து தமிழக அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என தகவல்.
* இங்கிலாந்தில் இருந்து பரவி வரும் புதுவகை கொரோனா வெருவி தொடர்பாகவும், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாகவும் வரும் 28 ஆம் தேதி தமிழக அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி கலந்தாய்வு மேற்கொள்ள உள்ளார்
* 80 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் நடைமுறையை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு... இன்று வழக்கு விசாரணை
* இன்று தேசிய உழவர் திருநாள்
உலகத்திற்கே படியளக்கும் உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன்.- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
* புரெவி புயல் பாதிப்பை பார்வையிட 28 ஆம் தேதி தமிழகம் வர உள்ள நடுவண் குழுவிடம் பாதிப்புகளை சீரமைக்க ₹1514 கோடி நிதியுதவி கோர தமிழக அரசு முடிவு செய்துள்ளது
* பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் வழக்கை வாபஸ் பெறுவதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவிப்பு: ஸ்டூடியோ இடத்தில் உரிமை கோர மாட்டேன் - இளையராஜா.
ஸ்டூடியோவில் உள்ள தமது பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா கோரிக்கை.
பிரசாத் ஸ்டூடியோவில் தியானம் செய்ய மட்டும் இளையராஜா அனுமதி கோரியிருந்தார்.
* புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கியதற்கு துணைநிலை ஆளுநர் கிரண் பேடி எதிர்ப்பு
* மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிப்பு
கொரோனா உறுதியான முதலாமாண்டு மாணவருக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை
ஏற்கனவே முதலாமாண்டு, 4ஆம் ஆண்டு மாணவருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிப்பு 3ஆக உயர்வு
* பச்சை துண்டு போட்டுக் கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி...
காஞ்சிபுரம் மாவட்டம் குன்னம் ஊராட்சியில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
* ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.
ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் 300 மாடுபிடி வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி - தமிழக அரசு.
மாடுபிடி வீரர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் - தமிழக அரசு.
பார்வையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் - தமிழக அரசு.
* வரும் 28 ஆம் தேதி மருத்துவக்குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை.
இங்கிலாந்திலிருந்து புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் முக்கிய ஆலோசனை.
தமிழகத்தில் நோய் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை.
மதுரையில் 21 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த தொழிலதிபர் கைது - மத்திய ஜிஎஸ்டி ஆணையரகம் தகவல்:
மதுரை அழகப்பா நகரை சேர்ந்த தொழிலதிபர் கனக ரத்தினம், போலி ரசீதுகளை சமர்ப்பித்து மோசடி.
போலியான ரசீதுகளை சமர்ப்பித்து ஜிஎஸ்டி செலுத்தாமல் ரூ. 21 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக புகார்.
குற்றம் உறுதியானதால் தொழிலதிபர் கனகரத்தினம் கைது - மத்திய ஜிஎஸ்டி ஆணையரகம்.
மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைப்பு.
* தமிழக அரசியல் வரலாற்றில் உயர்ந்த இடத்தை பெற்ற கக்கன் அவர்களது நினைவுநாளில் அவரது தன்னலமற்ற சேவையை நினைவுகூர்வோம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்.
அவரைப் போற்றி அவ்வழியினை நாமும் பின்பற்றிடுவோம் - பன்னீர்செல்வம்.
" ரஜினி, கமலை அடிக்கிற அடியில் விஜய் மட்டும் அல்ல, இனி எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வரும் எண்ணமே வரக்கூடாது...- சீமான்
* Loan அப்ளிகேசன்கள் மூலம் கடன் பெற்று அதற்கு அளவுக்கதிகமாக பணம் திருப்பி செலுத்துமாறு தொலைபேசி மூலம் மிரட்டப்பட்டால் உடன் சைபர்கிரைம் பிரிவை அணுகி புகார் அளிக்கலாம்.மேலும் இத்தகைய அங்கிகரிக்கபடாத App மூலம் கடன் பெறுவதை முற்றிலும் தவிர்க்கவும்.
Adyar Cybercrime help line 7305542902
* கேரளாவில் கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில், இரட்டை ஆயுள் தண்டனை:
பாதிரியார் தாமஸ்-க்கு இரட்டை ஆயுள் தண்டனை, ரூ. 6.5 லட்சம் அபராதம்.
2-வது குற்றவாளியான கன்னியாஸ்திரி செபி-க்கு ஆயுள் தண்டனை- ரூ. 5 லட்சம் அபராதம்.
28 ஆண்டுகளுக்கு பிறகு, கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்.
திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் பரபரப்பு.
நேற்று குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் இன்று தண்டனை விவரம் வெளியீடு.
* கர்நாடகாவில் இன்று முதல் ஜன.2 வரை இரவு நேர ஊரடங்கு மீண்டும் அமல்.
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என எடியூரப்பா அறிவிப்பு.
பிரசாத் ஸ்டூடியோவுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றதால் ஸ்டூடொயோவுக்குள் செல்ல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பிரசாத் ஸ்டூடியோவுக்குள் இளையராஜா இருக்கலாம்.
பிரசாத் ஸ்டூடியோவுடன் ஆலோசித்து இசைக்கருவிகளை எடுக்கும் தேதியை இளையராஜா முடிவெடுக்கலாம்- உயர்நீதிமன்றம் உத்தரவு.
* எடப்பாடியார் தமிழர். அவர் ஆட்சி நன்றாக இல்லை என்றால் நாங்கள் வந்து நல்லாட்சி தருகிறோம். அதற்காக மற்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது
- நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
* அண்ணாத்த திரைப்பட குழுவில் 8 பேருக்கு கொரோனா உறுதியானதால் ஐதராபாத் படப்பிடிப்பு ரத்து
நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் ஏதும் இல்லை.
அண்ணாத்த படப்பிடிப்பின்போது 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
நடிகர் ரஜினிகாந்த், ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்புகிறார்.
படப்பிடிப்பில் பங்கேற்ற மற்ற நடிகர், நடிகைகள் உள்ளிட்டோருக்கு பரிசோதனை தொடர்கிறது.
* ஆப் மூலமாக கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - ரிசர்வ் வங்கி.
குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாக கருதி அங்கீகாரம் இல்லாத மொபைல் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம்.
ஆப் மூலமாக சில நிறுவனங்கள் அதிக வட்டி, மறைமுக கட்டணம் என கடன் வழங்குவதில் முறைகேடு செய்வதாக தகவல் வந்துள்ளது.
கடனை வசூலிக்கவும் ஆப் நிறுவனங்கள் மோசமான நடைமுறைகளை பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது - ரிசர்வ் வங்கி.
அதிக வட்டி, மறைமுக கட்டணத்துடன் கடன் வழங்கும் ஆப்கள் குறித்து உடனடியாக காவல்துறையில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
கடன் வழங்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் தொடர்பான விவரங்களை ரிசர்வ் வங்கி இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்- ரிசர்வ் வங்கி.
* இலவசப் பட்டாக்கள் நடைமுறையில் முறைகேடுகள் நிகழ்ந்திருக்கலாம் என ஐயம் எழுந்திருப்பதால், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
இதுதொடர்பான வழக்கில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்திர அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
ஏழை மக்கள் பயன்பறும் வகையில் வழங்கப்படும் இலவசப் பட்டாக்கள் நடைமுறையில், பல முறைகேடுகள் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகம் எழுவதாக, நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
ஆகவே, தமிழ்நாட்டில் வழங்கப்பட்ட, இலவசப் பட்டாக்கள் குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், அதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது தெரியவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டனர்.
* காவல்துறை சார்பு ஆய்வாளர் பணிக்கான உத்தேச தேர்வு பட்டியலுக்கு இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை.
தமிழ் வழியில் படித்தவர்களுக்காக இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவது தொடர்பாக பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க உத்தரவு.
* நீதிமன்ற உத்தரவை மதிக்காத மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரை கைது செய்ய அதிகாரம் உள்ளது - உயர்நீதிமன்ற மதுரை கிளை.
நிலத்தடி நீர் தொடர்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்பி, வரும் 4ஆம் தேதி ஆஜராக உத்தரவு.
* சிவகங்கையில் நடைபெறும் 'தமிழகம் மீட்போம்' பொதுக்கூட்டத்தில் காணொலி மூலம் ஸ்டாலின் பங்கேற்பு.
சொந்த தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையே முதலமைச்சர் இன்னும் நிறைவேற்றவில்லை - ஸ்டாலின்.
சிறுபான்மையினருக்கு எதிரான அனைத்து சட்டத்திற்கும் அதிமுக ஆதரவு அளித்தது.
தேர்தல் வர இருப்பதால் சிறுபான்மையினரை ஏமாற்ற முதலமைச்சர் பழனிச்சாமி திட்டமிட்டுள்ளார் - ஸ்டாலின்.
No comments:
Post a Comment