வன்னியர்கள் 20% தனி இட ஒதுக்கீட்டுக்காக குரல் கொடுத்த சிறுமி தணிகைச்செல்வியிடம் - மருத்துவர் இராமதாசு அய்யா பேசி வாழ்த்தினார்!
தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி காணொலி பதிவு வெளியிடுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டம் சூ.பாலப்பட்டியைச் சேர்ந்த சிறுமி ஏ. தணிகைச்செல்வியை இன்று மாலை தொலைபேசியில் காணொலி அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு பேசினேன்.
சிறுமி தணிகைச் செல்வியின் தந்தை ஏழுமலை எனக்கு நன்கு அறிமுகமான தொண்டர் தான். பா.ம.க. இளைஞரணியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். தந்தையைப் போல் மகளுக்கும் இனப்பற்று அதிகம். வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்கான தேவைகளையும், நியாயத்தையும் அச்சிறுமி அறிந்து வைத்திருக்கிறாள்.
தணிகைச் செல்வியிடம் படித்து என்னவாக விரும்புகிறாய்? என்று கேட்டேன். மருத்துவம் படிக்க விரும்புவதாகக் கூறினாள். சிறுமியின் விருப்பம் நிறைவேற வாழ்த்தினேன். தணிகைச்செல்வி போன்ற ஏழைச்சிறுமிகளின் மருத்துவக்கல்வி கனவுகள் நிறைவேற வேண்டும். அதற்கு 20% தனி இட ஒதுக்கீட்டை நாம் வென்றெடுத்தே தீர வேண்டும்.
No comments:
Post a Comment