அக்னிப்புரட்சி இன்றைய (21.12.202) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (21.12.202) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (21.12.202) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல்- டீசல் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

* சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. மகளிரணி இன்று ஆர்ப்பாட்டம்

* டெல்லியில் கடும் குளிரில் விவசாயிகளின் அனல் கிளப்பும் போராட்டம் - இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில்  போராடும் விவசாயிகள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்.

டெல்லியிலும் மாநில எல்லைகளிலும் கடந்த 25 நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தை இன்று முதல் தீவிரப்படுத்தப்போவதாக  விவசாயிகள் அறிவிப்பு.

* ஹரியானாவில் உள்ள நெடுஞ்சாலைகளில் 25ஆம் தேதி முதல் டோல்கேட் வசூலை தடுத்து நிறுத்தும் போராட்டம்.

விவசாய சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு மீண்டும் அழைப்பு.

* ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவம் 7ம் நாள்:

ஸ்ரீ நம்பெருமாள், முத்து கிரீடம், புஜகீர்த்தி, மகரகண்டிகை, ரத்தின அபயஹஸ்தம், மார்பில் லட்சுமி பதக்கம், காசு மாலை உள்ளிட்ட திருவாபரணங்களுடன்
மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

* இந்தியாவில் ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் - மத்திய  சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன்  தகவல்.

30 கோடி மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்படும் - மத்திய அமைச்சர்.

* ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனுக்கு, முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து.

மக்களுக்கு பணியாற்றிட நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் - முதலமைச்சர் பழனிசாமி.

* கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நடராஜர் சந்நிதிக்கு எதிர்புறம் உள்ள பிரம்மாண்டமான கொடிமரத்தில் உற்சவ கொடியை உற்சவ ஆச்சாரியார் சர்வேஸ்வர தீட்சிதர் ஏற்றி வைத்தார்.

தேர் திருவிழா இம்மாதம் 29ஆம் தேதியும் சிறப்பு மிக்க ஆருத்ரா தரிசன விழா 30ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

* இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றுவதே நோக்கம் - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

வறுமைக் கோடு இல்லாமல் செழுமைக் கோடு அமைப்பதே நோக்கம்.

இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் திட்டம் கொண்டு வரப்படும்.

சிறு தொழில் முனைவோருக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் - கமல்ஹாசன்.

* சென்னை தலைமைச் செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி.

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி 2019 - 2020 ஆண்டில் சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கினார் முதல்வர்.

* சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்ந்து ரூ.38,224-க்கு விற்பனை.

* வரும் 23ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம்.

குன்னம் கிராமத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

நாளை மறுநாள் முதல் ஜனவரி 10-ஆம் தேதி வரை திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடத்த திட்டம்.

* தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்துக்கு விசாரணை ஆணையம் சம்மன்.

வரும் ஜனவரி 19ம் தேதி விசாரணை ஆணையம் முன்பு ஆஜராக உத்தரவு.

* தமிழகத்தில் அவுட்சோர்சிங் முறையில் மின்வாரிய ஊழியர்கள் தேர்வு தொடர்பான அரசாணை திரும்பப் பெறப்படுகிறது - அமைச்சர் தங்கமணி.

மின்வாரிய ஊழியர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை.

தொழிற்சங்கங்கள் வழக்கை வாபஸ் பெற்றால், 10 ஆயிரம் பேர் உடனடியாக பணி நியமனம் செய்யப்படுவர் - அமைச்சர்.

* ஜனவரி 9ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடும் என அறிவிப்பு:

அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் வானகரம் வெங்கடாசலபதி பேலஸில் பொதுக்குழு கூடும்.

செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்
கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி கலந்து கொள்ள அறிவுறுத்தல்.

முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக அறிவிப்பு.

டிச.27ல் அதிமுக தேர்தல் பிரசார தொடக்க பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும்.

* பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு டிச.31 வரை தடை.

இங்கிலாந்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு உத்தரவு.

நாராயணசாமி நாயுடு பெயரில் விவசாயிகளுக்கு விருது - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு.

அதிக நெல் மகசூல் பெற்றமைக்காக
வழங்கப்படும் விருது, நாராயணசாமி நாயுடு பெயரில் வழங்கப்படும்.

* மின்வாரியத்திற்கு தனியார் மூலம் 30 ஆயிரம் பணியாளர்களை நியமிக்கும் அரசின் உத்தரவு ரத்து - மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி.

தமிழகம் முழுக்க மின்சார வாரிய ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திவரும் நிலையில், தனியார் மூலம் பணி நியமனம் செய்யும் உத்தரவை ரத்து செய்வதாக அமைச்சர் தங்கமணி அறவிப்பு.

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.பி கனிமொழி பங்கேற்பு.

மதுரை ஜவுளிக்கடை தீவிபத்து மீட்பு பணியின்போது உயிரிழந்த சிவராஜின் மனைவி அங்கயற்கண்ணி தூக்கிட்டு தற்கொலை.

சிவராஜ் உயிரிழப்புக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.25 லட்சம் இழப்பீட்டை பிரிப்பதில் குடும்பத்தில் தகராறு என தகவல்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்து கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 6 பெண் பக்தர்கள் பலியானார்கள்.

* தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.

அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.2500 மற்றும் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.

* தமிழகம் முழுவதும் டிச.31 இரவில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை.

கடற்கரைகள், சாலைகளில் புத்தாண்டு
கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை.

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு நடவடிக்கை.
டிச.31, ஜனவரி -1ம் தேதி பொதுமக்கள்
கடற்கரையில் கூட அனுமதி இல்லை.

💥Metro நகரங்களில் புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்த 07 நாட்களில் மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்

குறித்த காலகெடுவுக்குள் விண்ணபித்தவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை என்றால் மின்  வழங்கல் நிறுவனங்கள் நுகர்வோருக்கு அபராதம் செலுத்த வேண்டும். புதிய விதிகளை வெளியிட்டது நடுவண் அரசு...

* தமிழகத்தில் தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு தேவை இல்லை என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.அரசியல் பிரமுகர்கள் விழா மேடைகளில் சாதி குறித்து பேசுவதை தவிர்க்க வேண்டும். ரஜினி எப்போதும் பாஜகவின் பி டீமாக செயல்படமாட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

*சென்னை: ஜெருசலேத்திற்கு புனித பயணம் செல்ல அரசு வழங்கும் நிதி ரூ.20,000-ல் இருந்து ரூ.37,000 ஆக உயர்த்தப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னையில் அதிமுக சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் அறிவித்துள்ளார். கூட்டணி வேறு, கொள்கை வேறு; கொள்கை படிதான் நாங்கள் செயல்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

*அடுத்த 4 நாட்களில் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக் கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

தென் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவக்காற்று காரணமாகத் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வடதமிழகத்தில் வறண்ட வானிலையும் நிலவும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது. 

*மெரினா கடற்கரை அருகே பிரேக் பிடிக்காத மாநகர பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்து

சென்னை மெரினா கடற்கரை அருகே பிரேக் பிடிக்காத மாநகர பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

அண்ணா சதுக்கத்தில் இருந்து கே.கே. நகர் நோக்கி சென்ற மாநகர பேருந்தில் சரிவர பிரேக் பிடிக்காததால் சாலையின் நடுவே பழுதாகி நின்றது.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் ஓட்டுநர் பேருந்தை உட்புற சாலையில் நிறுத்திவிடலாம் என எண்ணி பேருந்தை இயக்கிய நிலையில், முழுவதுமாக பிரேக் செயலிழந்து 3 இருசக்கர வாகனங்களின் மீது மோதியவாறு தடுப்புச்சுவரில் மோதி நின்றது.

*அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள்... பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்று சிறப்புரை

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

இந்த பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் நாளை நடைபெறுகிறது.

இதில் பிரதமர் மோடி காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார்.

மேலும் நிகழ்ச்சியின் போது ஒரு தபால் தலையையும் அவர் வெளியிடுகிறார்.

பல்கலைக்கழகத்தின் வேந்தர் சையேத்னா முஃபதல் சைபுதீன் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

இந்த பல்கலைக்கழக விழாவில் 1964ஆம் ஆண்டுக்கு பிறகு கலந்து கொள்ளும் முதல் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. 

* இந்தியாவில் வரும் ஜனவரி மாதம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்.

* மேற்குவங்கத்தை தங்க வங்கம் ஆக்குவோம்: அமைச்சர் அமித் ஷா

மேற்கு வங்கத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி திரும்பினார்.

2 நாள் பயணமாகச் சென்ற அவர், பிர்பூம் மாவட்டம் போல்பூரில் சுற்றுப்பயணம் செய்தார்.

மதியம் அங்குள்ள பாடகர் ஒருவரின் இல்லத்தில் அமித் ஷா மூத்த தலைவர்களுடன் சேர்ந்து உணவருந்தினார்.

இதையடுத்து திறந்த வாகனத்தில் அமித் ஷா பேரணியாக சென்றார்.

இந்த பேரணியில் பாஜக தொண்டர்கள் லட்சணக்கானோர் கலந்து கொண்டதால், எங்கு பார்த்தாலும் கூட்டம் அதிகமிருந்தது.

இதைத் தொடர்ந்து அந்த வாகனத்தில் இருந்தபடி பேசிய அமித் ஷா, மேற்குவங்க மக்கள், மாநிலத்தில் மாற்றத்தை விரும்புவதாக கூறிய அவர், மாநிலத்தில் மாற்றத்தை ஏற்படுத்த பிரதமர் மோடிக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் எனவும், அப்படி தந்தால் மேற்குவங்கத்தை 5 ஆண்டுகளில் தங்க வங்கமாக மாற்றி கட்டுவோம் எனவும் தெரிவித்தார்.

*3 நாட்களில் 40 மீனவர்கள் கைது

ராமேஸ்வரம்-கொரோனா பாதிப்பு குறைந்த சூழலில், இலங்கை கடற்படையினர்,

மூன்று நாட்களில், 40 பேரை கைது செய்துள்ளது, மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

*குஜராத் கடற்பகுதியில், நேற்று முன்தினம் எல்லைப் பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் இருந்தனர்.

அப்போது, நம் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் மீன்பிடி படகினை, அவர்கள் சுற்றி வளைத்தனர்.

பாக்.,கின் சிந்து மாகாண மீனவர் காலித் உசேன், 35, கைதானதுடன், அவரது படகு, 'மொபைல் போன்' உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
                       ‌‌

*முன்விரோதத்தில் விவசாயி கொலை

ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த தொட்டூரைச் சேர்ந்தவர் ராஜப்பா, 55; விவசாயி.

நேற்று முன்தினம் காலை, பைக்கில், சூளகிரி - கும்பளம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள், அவரை மறித்து, கத்தியால் குத்தி கொன்று, தப்பினர்.

*முதியவரிடம் பிக்பாக்கெட்: இருவர் சிறையிலடைப்பு

கோவை காந்திபுரம் நேரு வீதியை சேர்ந்தவர் தங்கஜான், 60. இவர் காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட்டிற்கு வந்தார்.

அங்கு நின்றிருந்த மர்மநபர்கள் இருவர், தங்கஜானிடம் இருந்து ரூ.2,500 ஐ பிக்பாக்கெட் செய்து தப்பினர்.

தங்கஜானின் சத்தம் கேட்டு, அருகிலிருந்தவர்கள் மர்மநபர்களை பிடித்து, காட்டூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவர்கள் செல்வபுரத்தை சேர்ந்த சரவணக்குமார், 40, வடகோவையை சேர்ந்த தனசேகர், 28 என தெரிந்தது.

இவர்கள் இருவரும், ஏற்கனவே பல்வேறு வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவர்கள் எனத் தெரிந்தது.

இருவரையும் கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.

*சிலி நாட்டில் முக கவசம் அணியாமல் செல்பி எடுத்த அதிபருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்

சிலி நாட்டில் முக கவசம் அணியாமல் செல்பி எடுத்த அதிபருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம்  விதிக்கப்பட்டு உள்ளது.

சிலியில் பொதுவெளியில் முக கவசம் தொடர்பான விதிமுறையை மீறிய நபர்களுக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கும் சட்டம் அமலில் உள்ளது.

கடந்த மாத இறுதியில் அதிபர் Sebastian Pinera தனது சொந்த ஊரான Cachagua நகரில் உள்ள கடற்கரைக்கு சென்றபோது, அங்கிருந்த ஒரு பெண்ணின் விருப்பத்துக்காக அவருடன் செல்பி படம் எடுத்துக்கொண்டார்.

அப்போது அதிபர் முக கவசம் அணியாமல் இருந்தது தெரிய வந்ததை அடுத்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

*லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை மோசமடைகிறது... சிறுநீரகம் 25 சதவீதம் மட்டுமே செயல்படுவதாக மருத்துவக் குழு தகவல்

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் சிறுநீரகம் 25 சதவீதம் மட்டும் செயல்படுவதாக மருத்துவக் குழு தகவல் அளித்துள்ளது.

கால்நடை தீவன வழக்கில் தண்டனை பெற்றுள்ள இவர் உடல்நலக் குறைவு காரணமாக  பல மாதங்களாக ராஞ்சியின் ரிம்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் அந்த மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், லாலுவின் சிறுநீரகம் 25 சதவீதம் மட்டுமே செயல்படுவதால் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

*போலி செயலிகள் மூலம் பண மோசடி.. டெல்லி, பெங்களூரு விரைந்த தனிப்படைகள்

கடன் பெற்றுத் தருவதாக கூறி போலி செயலிகள் மூலம் பணம் கறக்கும் மோசடி கும்பலைப் பிடிக்க ஹைதரபாத் சைபர் கிரைம் போலீசார் டெல்லிக்கும் பெங்களூருக்கும் விரைந்தனர்.

சமூக ஊடகங்களில் கடன் பெற்றுத் தருவதாக ஆசைகாட்டி மோசம் செய்யும் கும்பலின் மூளையாகக் கருதப்படும் முக்கிய நபர்கள் மற்றும் அவர்களின் கால் சென்ட்டர்கள் டெல்லி மற்றும் பெங்களூரில் இருப்பதைக் கண்டறிந்த சைபர் குற்றப்பிரிவினர் இரண்டு தனிப்படைகளை அமைத்துள்ளனர்.

மக்கள் இது போன்ற  மோசடி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

*குடும்பத்துக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்ற முதல்வர் அறிவிப்புக்கு பாஜக துணை தலைவர் கடும் எதிர்ப்பு

குடும்பத்துக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்ற முதல்வர் அறிவிப்புக்கு பாஜக துணை தலைவர் அண்ணாமலை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மக்களிடம் கொள்ளையடித்த பணத்தைதான் தேர்தல் நேரத்தில் தலா ரூ.2,500 ஆக கொடுப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

2,500 ரூபாயை நம்பி 5 ஆண்டுகளை அடகு வைத்துவிடாதீர்கள் என்று அதிமுகவுக்கு எதிராக அண்ணாமலை பிரச்சாரம் செய்துள்ளார்.

*ஓசூர் அருகே போதையில் தகராறு செய்த வடமாநில இளைஞர்கள் 2 பேர் கத்தியால் குத்திக்கொலை

ஓசூர் அருகே போதையில் தகராறு செய்த வடமாநில இளைஞர்கள் 2 பேர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நஞ்சாபுரத்தில் பணிசெய்து வந்த ம.பி.யை சேர்ந்தவர்களுக்கும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மோதலில் வடமாநில இளைஞர்கள் பீஜேஸ்(22), பீர்ஜே சிங்(26) கொலை செய்யப்பட்டனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

*சென்னை காசிமேட்டில் மீன்பிடிக்கச் சென்ற போது ஏற்பட்ட தீவிபத்தில் ரூ. 80 லட்சம் மதிப்பிலான விசைப்படகுகள் எரிந்து நாசம்

சென்னை காசிமேட்டில் மீன்பிடிக்கச் சென்ற போது ஏற்பட்ட தீவிபத்தில் ரூ. 80 லட்சம் மதிப்பிலான விசைப்படகுகள் எரிந்து நாசமாகியுள்ளது.

பூஜை செய்தபோது கற்பூரம் தவறி விசைப்படகில் விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கூறப்படுகிறது.

6,000 லிட்டர் டீசலுடன் மீன்பிடிக்க செல்ல இருந்த நிலையில் விசைப்படகில் தீ விபத்து ஏற்பட்டதால் துறைமுகத்தில் பரபரப்பு நிலவியது.

*மதுரை அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆயுள்தண்டனை கைதி உயிரிழப்பு

மதுரை அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பீகாரை சேர்ந்த ஆயுள்தண்டனை கைதி ராஜேந்திரசவுத்ரி உயிரிழந்தார்.

கொலை வழக்கில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இறந்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages