நடிகை ஓவியா திறந்து வைத்த கடையில் நஷ்டம்: குடும்பத்துடன் தற்கொலை முயற்சி
திருச்சி, நகை வியாபாரத்தில், 15 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால், கடை உரிமையாளர், மனைவி, மகள், பெற்றோருடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது, பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர், தாராபுரம் பெரியகடை வீதியில், எஸ்.வி.ஆர்., என்ற பெயரில் பலராமன், 75, என்பவரும், அவரது மகன் ஹரி, 38, என்பவரும் நகை கடை நடத்தி வருகின்றனர்.
கடையை நடிகை ஓவியா திறந்து வைத்தார்.
மிகவும் ஆடம்பரமாக திறக்கப்பட்ட நகைக்கடையில் எதிர்பார்த்த வருமானம் இல்லை.
15 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும், நகைச்சீட்டு கட்டியவர்களுக்கு, நகை கொடுக்க முடியாமல் திணறினர்.
சீட்டு கட்டி ஏமாந்த மக்கள், கடந்த, 18ம் தேதி இரவு, கடையை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment