அக்னிப்புரட்சி இன்றைய (27.12.2020) முக்கிய செய்திகள்.
* இன்று சனிப் பெயர்ச்சி!
திருநள்ளாறில் பக்தர்கள் திரண்டனர்!
சென்னையில் அதிகாலையிலேயே கோயில்களில் பக்தர்கள் வருகை!
காலை 5.22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனீஸ்வர பகவான் பிரவேசித்தார்!
* புதுச்சேரி: காரைக்கால் அருகே பிரசித்தி பெற்ற திருநள்ளாறு கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.
கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதால் நள, பிரம்ம தீர்த்தங்களில் புனித நீராட பக்தர்களுக்கு தடை.
* சென்னையில் தொடர்ந்து விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.51க்கும், டீசல் ரூ.79.21க்கும் விற்பனை
* புதுச்சேரியில் அரசு பேருந்துகளை இன்று முதல் இயக்க மாட்டோம் என தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு.
அரசு பேருந்துகளை தனியார் வசம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் அறிவிப்பு.
* மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று 3-ம் கட்ட பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
இன்று பிற்பகல் திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கும் கமல் 30-ம் தேதி வரை பரப்புரை செய்கிறார்.
* தமிழகத்தின் 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி துவக்கி வைக்கிறார்.
சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி தொடக்கி வைக்கிறார்.
* தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா(75) உடல்நலக்குறைவு காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் காலமானார்.
யசோதா ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக 4 முறை தேர்வு செய்யப்பட்டவர்.
* அதிமுகவின் தேர்தல் பரப்புரை பணிகளை தொடங்கி வைக்கும் பொதுக்கூட்டம் தொடங்கியது.
ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் பங்கேற்பு.
அமைச்சர்கள், அதிமுக மாவட்டச் செயலர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்: தற்காலிக கேப்டன் ரஹானே சதம் அடித்து அசத்தல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன்களை எடுத்துள்ளது.
* ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழா இராப்பத்து 3ம் நாள்:
ஸ்ரீ நம்பெருமாள் முத்துசாய் கொண்டை, ரத்தின அபயஹஸ்தம், விமானபதக்கம் மற்றும் திரு ஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
* ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் ஒளிபரப்பில் காவி உடையில் திருவள்ளுவர்.
கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால் மீண்டும் சர்ச்சை.
திருவள்ளுவரின் உடையில் காவி சாயம் - முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்.
“எவராயிருப்பினும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" - தங்கம் தென்னரசு.
இத்தகைய செயல்கள் வருங்காலங்களில் நடைபெறாது தடுக்க தமிழக அரசு முன் வர வேண்டும். தமிழ்ப் பற்று மிக்க எவராலும் எக்காலத்திலும் இதை ஏற்க முடியாது.
* கடந்த 10 ஆண்டின் சிறந்த வீரர்களை கொண்ட ஐசிசி டி 20 அணி அறிவிப்பு:
கடந்த 10 ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் அணி - தோனி கேப்டன்.
இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா, கோலி, பும்ரா, தோனி இடம்பெற்றுள்ளனர்.
கெயில், ஆரோன் பின்ச், ஏபி டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல், பொல்லார்ட்.
மலிங்கா, ரஷீத் கான் ஆகியோர் ஐசிசிக்கான சிறந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.
* ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ்: மருத்துவமனை.
ஒரு வாரத்துக்கு முழு ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்: இன்று மாலை சென்னை திரும்புகிறார்.
ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ட
* பெண் குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையும், கவனமும் செலுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால், பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தனி நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையொன்றில் அவர் உறுதி அளித்துள்ளார்.
சென்னை வண்ணாரப் பேட்டை 13 வயது சிறுமி, அயனாவரம் 11 வயது சிறுமி உள்ளிட் டோருக்கு நிகழ்ந்துள்ள பாதிப்புகளை பட்டியலிட்டு உள்ள மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையிடம் தைரியமாகப் புகார் கொடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் ரகசியப் பிரிவு ஒன்று மாநில அளவில் உருவாக்கப்படும் என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
* டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் அடுத்தாண்டு (2021) மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதை கருத்தில் கொண்டு, டிரைவிங் லைசென்ஸ், பதிவு சான்றிதழ்கள், பெர்மிட்கள் ஆகியவை செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 வரை செல்லும் என கருத வேண்டும். பிப்.,2020 முதல் காலாவதியான சான்றிதழ்களுக்கு இது பொருந்தும். சமூக இடைவெளியை பின்பற்றும் இந்த நேரத்தில், இது பொது மக்களுக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
* சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவில் பிற மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி-சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
கொரோனா அறிகுறி இல்லாதவர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டுமென அறிவுறுத்தல்.
கொரோனா பரிசோதனை சான்று கட்டாயமில்லை என்றும் நீதிபதிகள் உத்தரவு.
* ஊர்திகளில் 'சாதி பெயர்கள்' எழுதப் பட்டிருந்தால் பறிமுதல் செய்யப்படும் என உத்திரப் பிரதேச அரசு அதிரடி அறிவிப்பு !
* தென் சீனக் கடலில் இந்தியா மற்றும் வியட்நாம் நாடுகளின் கடற்படையினர் பயிற்சி ! இந்திய கடற்படையின் 'INS கில்டன்' கப்பல் இதில் பங்கேற்பு
* இடஒதுக்கீடு, சமூகநீதியை மொத்தமாக எடுத்துவிட வேண்டும் என்பது தான் பாஜகவின் கொள்கை - நெல்லை சமூக நீதி மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு.
திராவிட இயக்கக் கொள்கைகளை எதிர்ப்பவர்கள், சமூகநீதியின் எதிரியாகதான் இருக்க வேண்டும் - ஸ்டாலின்.
பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரைப் பார்த்து இன்னமும் சிலருக்கு பயம் இருக்கிறது; உண்மையை அழுத்தமாக பேசியதால்தான் திராவிடத்தை அழிக்க முடியவில்லை!” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
No comments:
Post a Comment