அக்னிப்புரட்சி இன்றைய (30.12.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (30.12.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (30.12.2020) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல்- டீசல் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் தமிழகம் தரை தட்டி நிற்கிறது

ஆனால், வெற்றிநடை போடும் தமிழகம் என்ற போலி விளம்பரத்தைக் கொடுத்து பொய் வேடம் போடத் தொடங்கியிருக்கிறார் - முரசொலி

* இறப்பு என்னை தழுவும் வரை இனி அரசியலில் ஈடுபட மாட்டேன்

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் ஆலோசகர் தமிழருவி மணியன்.

பொறுக்கிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து சமூக வலைத்தளங்களில் என்னை கொச்சை படுத்துகின்றனர்.
அரசியலில் இருந்து விடை பெறுவதாக அறிவித்தார் - தமிழருவி மணியன்

* எல்லையில் நாமும் படைகளை குறைக்கப் போவதில்லை; சீனாவும் படைகளை குறைக்காது.

நமது நிலத்தை ஆக்கிரமிக்க வேறு ஒரு நாடு முயன்றால் அதை தடுப்பதற்கான பலம் நமக்கு உள்ளது - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

* நியூஸிலாந்து - பாகிஸ்தான் முதல் டெஸ்ட் (பாக்ஸிங் டே டெஸ்ட்): 101 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி.

2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என நியூஸிலாந்து முன்னிலை.

நியூஸி., முதல் இன்னிங்ஸ்&2வது இன்னிங்ஸ் ஸ்கோர்: 431&180/5d
பாக்., முதல் இன்னிங்ஸ்&2வது இன்னிங்ஸ் ஸ்கோர்: 231&279

* பொங்கல் பரிசு ரூ.2,500க்கு அதிமுகவினர் டோக்கன் வழங்குவதாக கூறி உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு.

அதிமுகவினர் டோக்கன் விநியோகிப்பதை தடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் திமுக வலியுறுத்தல்.

* பிரிட்டன் விமானங்கள் இந்தியா வர விதிக்கப்பட்ட தடை ஜனவரி 7ஆம் தேதி வரை நீட்டிப்பு - மத்திய அரசு.

ஃபைசர் தடுப்பூசியை தொடர்ந்து ஆக்ஸ்போர்டின்  தடுப்பூசிக்கும் ஒப்புதல் வழங்கியது பிரிட்டன் அரசு.

உருமாறிய கொரோனா வேகமாக பரவும் சூழலில் 2ஆவது தடுப்பூசிக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல்.

* மு.க.ஸ்டாலினுக்கு பொய் கூட ஒழுங்காக சொல்லத் தெரியவில்லை, பொய்யை சொன்னாலும் பொருத்தமாக சொல்ல வேண்டும் - முதலமைச்சர்.

2 நாள் தேர்தல் பிரசார பயணமாக திருச்சி மாவட்டத்திற்கு சென்றுள்ள முதலமைச்சர் தொட்டியம் பகுதியில் நடைபெற்று வரும் கூட்டத்தில் உரையாற்றினார்.

அதிமுகவை உடைக்க நடைபெற்ற முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.
அதிமுக ஆட்சியை கவிழ்க்க நடைபெற்ற முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

தற்போது அதிமுகவிற்குள் குழப்பத்தை ஏற்படுத்த நடைபெறும் முயற்சியும் வெற்றி பெறாது.

அதிமுக தற்போது வலிமையான கட்சியாக உருவெடுத்துள்ளது.
வலிமையான கட்சியான அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது.

கலைஞரின் மகன் என்கிற ஒரே காரணத்திற்காக திமுக தலைவராக்கப்பட்டவர் மு.க.ஸ்டாலின்.
தான் கடுமையாக உழைத்து படிப்படியாக முதலமைச்சர் பதவி வரை உயர்ந்துள்ளேன்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பொய்யை கூட ஒழுங்காக சொல்லத் தெரியவில்லை. பொய்யை சொன்னாலும் பொருத்தமாக சொல்ல வேண்டும் என்கிற வார்த்தை ஸ்டாலினுக்குத்தான் பொருந்தும்.

திமுக தேர்தலுக்காக வெளி மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் கூறுவதை கேட்டு செயல்படுகிறது.

* தமிழகத்தில் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு சீருடை வழங்கப்படும்.

நியாய விலைக் கடை ஊழியர்கள் சீருடை அணியாமல் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்-அமைச்சர் செல்லூர் ராஜூ.

* எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கான" சென்னையிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அ.தி.மு.க அரசு தொடர்ந்த 6 அவதூறு வழக்குகளில் மு.க.ஸ்டாலின் ஆஜர்.

உயர்நீதிமன்றம் ஏற்கனவே பல அவதூறு வழக்குகளை ரத்து செய்து அ.தி.மு.க. அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. ஆனாலும் இந்த அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. - ஸ்டாலின்

ஆளும்கட்சியின் தவறுகளை - ஊழல்களை விமர்சிப்பது ஒரு எதிர்க்கட்சியின் முக்கியக் கடமை. அதுதான் ஆரோக்கியமான ஜனநாயகம்!

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் சில பத்திரிகைகள் ஆளும்கட்சியின் தவறுகளை எழுதுகின்றன. சில பத்திரிகைகள் எழுதுவதில்லை. ஆகவே பிரதான எதிர்க்கட்சியாக தி.மு.க. விமர்சனம் செய்கிறது. - ஸ்டாலின்

இதுமாதிரி அவதூறு வழக்குகள் போட்டு தி.மு.க.வின் ஜனநாயக கடமையைத் தடுக்கவும் முடியாது; மிரட்டவும் முடியாது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சுரிமையை, எத்தனை வழக்குகள் போட்டாலும் திரு. பழனிசாமியால் தடுக்க முடியாது.

அவதூறு வழக்குகளைச் சட்டரீதியாகச் சந்திப்பேன். அ.தி.மு.க.வின் ஊழல்களை ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று அம்பலப்படுத்துவோம் - ஸ்டாலின்

* பாஜகவில் இணைந்தார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லக்‌ஷ்மன் சிவராமகிருஷ்ணன்.

* ரஜினிகாந்தை நேரில் சந்தித்து மநீமவுக்கு ஆதரவு கேட்பேன்: நடிகர் கமல்ஹாசன்.

ஆன்மிகத்திற்கும் எனக்கும் விரோதம் கிடையாது. திராவிடம் யாருக்கும் சொந்தமில்லை- நானும் திராவிடன்

பகுத்தறிவை ஏற்றுக்கொள்ளுமாறு நான் யாரையும் நிர்பந்திக்க முடியாது- புதுக்கோட்டையில் கமல்ஹாசன்.

* சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி முதல்வரின் தனிப்பிரிவில் தாயார் மனு.

கோட்டாட்சியரின் விசாரணை அறிக்கை காவல்துறையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தாயார் விஜயா கோரிக்கை.

* வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறதா? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.

மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

பிரிட்டனில் இருந்து வருபவர்களை மட்டும் பரிசோதனை செய்வதாக வழக்கு.

அனைத்து நாடுகளில் இருந்து வருபவர்களையும் பரிசோதிக்க நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு.

* அமெரிக்க எம்பியாக தேர்வான லெட்லோ கொரோனாவுக்கு பலி:

குடியரசு கட்சியை சேர்ந்தவரும், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவருமான லெட்லோ கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

லூசியானாவில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு தேர்வான அவருக்கு 18ஆம் தேதி கொரோனா உறுதியாகியிருந்தது.

அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், நேற்று மாலை பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவுக்கு லூசியானா மாகாண ஆளுநர் ஜான் பெல் எட்வர்ட்ஸ், பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

* ஸ்ரீரங்கம் அரங்கநாத அவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழா இராப்பத்து 6ம் நாள்
ஸ்ரீ நம்பெருமாள் கிருஷ்ணர் கொண்டை, இரத்தின காது காப்பு, வைர அபயஹஸ்தம், மஹாலக்ஷ்மி பதக்கம், காசு மாலை மற்றும் திருஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

* சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிப்பு.

சரக்கு விமானங்களின் சேவை வழக்கம் போல் தொடரும். - விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு.

* நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா;

கடலூர்: சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தரிசனம் விமர்சையாக நடைபெற்றது.

நடராஜரும் - சிவகாமசுந்தரி அம்பாளும் திருநடனம் புரிந்த காட்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

* அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்கப்படும் -சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம்.

அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு என நாளை மாலை 5 மணிக்குள் சுற்றறிக்கை வெளியிட வேண்டும் - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் துறை வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்படும் எனவும் தமிழக அரசு உறுதி.

* எதை செய்தாவது ஜெயிக்க வேண்டுமென நினைப்பவர்கள் நாடு பிடிக்க நடிக்கிறார்கள்: கமல்.

எதையாவது செய்ய ஜெயித்தாக வேண்டுமென துடிப்பவர்கள் நாடு காக்க துணிகிறார்கள்: கமல்.

முன்னது வெறி, பின்னது வீரம்:  நீங்கள் யார் பக்கம்? - கமல்ஹாசன் கேள்வி.

* ரஜினியுடன் இணக்கமாகப் பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய அரசியல் ஆவல்:

2021 ஆண்டையும் அதற்குப் பிறகு, 2024ஆம் ஆண்டையும் நான் எதிர்நோக்குகிறேன்- முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.

ரஜினி ஒரு தார்மீக சக்தியாக விளங்கியவர், விளங்குபவர், விளங்குவார் என்பதில் எனக்கு ஐயமில்லை.

1996ஆம் ஆண்டைப் பல முறை நினைத்துப் பார்த்து நான் மகிழ்ச்சியடைபவன்-ப.சிதம்பரம்.

* "நம்மாழ்வார்" விருதுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வு

தமிழக பாரம்பரிய விவசாயிகள் ( உழவர்கள் ) பாதுகாப்பு சங்கம் மற்றும் ஐந்திணை வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து நடத்தும் பாரம்பரிய வேளாண் திருவிழாவில் வழங்கப்படும் நம்மாழ்வார் விருதுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வு

💥அமைதிக் குலைந்த பகுதியாக அறிவித்து நாகலாந்து மாநிலத்தை அடுத்த 6 மாதங்களுக்கு ஆயுதப் படைகளின் கட்டுப்பாட்டில் நடுவண் அரசு ஒப்படைத்து ஆணை.

💥NDA கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்?!

🌷தமிழக சட்டப்பேரவை  தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தேசிய சனநாயக கூட்டணி சார்பில் கூட்டம் நடைபெற்று முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார்: தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் இரவி

🌱எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்பது வேதவாக்கு இதற்கு இடையில் யார் வந்தாலும் வீணாய் போய்விடுவார்கள் ஒதுக்கி வைத்துவிடுவோம். - அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி

* டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளுடனான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நிறைவு:

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை.

பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் இரு கோரிக்கைகள் ஏற்பு என மத்திய வேளாண் அமைச்சர் தகவல்.

குறைந்த பட்ச ஆதார விலை தொடர்பாக ஆராய குழு அமைக்க மத்திய அரசு ஒப்புதல். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 4 ஆம் தேதி நடைபெறுமென அறிவிப்பு.

* மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

மண்டல பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி திறக்கப்பட்டது.

41 நாட்கள் சிறப்பு வழிபாடுகளுக்கு பிறகு கடந்த 26-ந் தேதி நடை அடைக்கப்பட்டது.

இந்தநிலையில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் சாமி தரிசனத்திற்கு பக்தர்ளுக்கு அனுமதி கிடையாது.

நாளை முதல் தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ந் தேதி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 19-ந் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப் படுவார்கள்.

* தமது சொந்த ஊரான, பரமக்குடியில் மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம்:

ஏழ்மைக்கு எதிரான குரல் என்னுடையது அந்த குரல் உங்களுடன் இணையும்.

மக்கள் நீதி மய்யத்தின் ஆயுதமான நேர்மையை கையில் எடுத்தால் எதிரில் நின்று பேச யாரும் இருக்கமாட்டார்கள் - கமல்.

* அரசுக்கு எதிராக அவதூறு பரப்பி ஆதாயம் தேட முயற்சிப்பதாக ஸ்டாலின் மீது முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு.

உண்மை தான் வெல்லும், ஸ்டாலினின் பொய் அறிக்கை எடுபடாது அதிமுகவில் சாமானியர் கூட முதல்வராக முடியும்.
புயலை விட வேகமாக செயல்பட்டு, சாதித்து காட்டியது அதிமுக அரசு.

தமிழகம் முழுவதும் சென்று ஆய்வு பணி மேற்கொண்டதால் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது -திருச்சி அதிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு.

* இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் நீட்டிப்பு:

இஸ்ரோ தலைவர் சிவனின் பதவி காலம் மேலும் ஓராண்டு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
2022 ஜனவரி 14-ம் தேதி வரை பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த கே.சிவன் கடந்த 2018 ஜனவரி 15-ம் தேதி நியமிக்கப்பட்டார்.

* தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு:

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று தேரோட்டம் முடிந்தபோது சாமி சிலைகள் மீது பூக்கள் வீசிய பூக்கடை உரிமையாளர் பாலசுப்பிரமணியன் மீது தீட்சிதர்கள் தாக்குதல் - புகாரை அடுத்து 4 தீட்சிதர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages