5 பேருக்கு பா.ம.க செயல்வீரர் விருதுகள்! - பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காக சிறப்பாக களப்பணியாற்றுபவர்களை அங்கீகரிக்கும் வகையிலும், அவர்களைப் போன்று தீவிரமாக களப்பணியாற்ற மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பாட்டாளி மக்கள் கட்சி சிறந்த செயல்வீரர்கள் விருது வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 2020-ஆம் ஆண்டில் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் 5 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கடந்த திசம்பர் 11-ஆம் தேதி அறிவித்து இருந்தார்கள்.
அதன்படி 2020-ஆம் ஆண்டுக்கான பாட்டாளி மக்கள் கட்சி சிறந்த செயல் வீரர் விருதுகளைப் பெறுவதற்கான 5 செயல்வீரர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
அவர்களின் விவரம் வருமாறு:
1. முனைவர் ச.சிவப்பிரகாசம், தலைவர், சமூக முன்னேற்ற சங்கம்
2. திரு. மீ.கா. செல்வக்குமார், அமைப்பு செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி
3. திரு. திருத்துறைப்பூண்டி டி.எஸ்.ஆர்.எம். சுப்பிரமணிய அய்யர், மாநில துணைத்தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி
4. திருமதி. நிர்மலா ராசா, மாநில செயலாளர், பா.ம.க. மகளிர் அணி
5. திரு. பி.வி. செந்தில், மாநில செயலாளர், பா.ம.க. இளைஞரணி
பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளின் களப்பணி, தலைமையால் வழங்கப்படும் பணிகளை சிறப்பாக செய்தல், கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுதல் உள்ளிட்ட பணிகளை அளவீடு செய்து அவற்றின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள் பாராட்டுப் பத்திரம் மற்றும் ஒரு சவரன் தங்கக் காசு கொண்டதாக இருக்கும். வரும் 31.12.2020 வியாழக்கிழமை காலை நடைபெறவுள்ள‘‘2020-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்... 2021-ஆம் ஆண்டை வரவேற்போம்’’ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இவை வழங்கப்படும்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் பா.ம.க. சிறந்த செயல்வீரர் விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.
விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் பா.ம.க. தலைமை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. 2021-ஆம் ஆண்டில் பா.ம.க. செயல்வீரர் விருதுகளைப் பெறுவதற்காக அனைத்து நிலை நிர்வாகிகளும் கட்சி வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜி.கே.மணி தலைவர் பா.ம.க அறிவித்துள்ளார்.
💐விருதுபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்💐
No comments:
Post a Comment