தினமும் ஓர் அதிகாரம் திருக்குறள் படிப்போம்! - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

தினமும் ஓர் அதிகாரம் திருக்குறள் படிப்போம்! - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

தினமும் ஓர் அதிகாரம் திருக்குறள் படிப்போம்! - மருத்துவர் இராமதாசு அய்யா

திருக்குறள் ஓர் உலகப் பொதுமறை. அந்த நூலில் இல்லாத, சொல்லப்படாத விஷயங்களே இல்லை. அந்த அளவுக்கு வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் திருக்குறளில் உள்ளன. ஓர் அதிகாரத்திற்கு 10 குறள்கள் வீதம் மொத்தம் 133 அதிகாரங்களில் 1330 குறள்களை திருவள்ளுவர் படைத்துள்ளார். மிகப்பெரிய வாழ்க்கைப் பாடங்களைக் கூட ஒன்றே முக்கால் அடியில்  7 வார்த்தைகளில் கற்பித்திருக்கிறார்.

அதனால் தான் ’’கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்’’ என்று திருக்குறள் குறித்து ஔவையார் பாராட்டியுள்ளார். திருவள்ளுவர் தீட்டிய பாடங்கள் அனைவருக்கும் பொருந்தும் என்பதால் தான் கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளிலும், அனைத்து மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு படைப்பை வழங்கியதால் நமது தமிழ்நாட்டுக்கும் பெருமை. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாரதியார் பாராட்டுகிறார்.

இத்தகைய சிறப்புகளைக் கொண்ட திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு ஓர் அதிகாரம் என்ற அளவில் திருக்குறளை படிக்க வேண்டும் என்று ஏற்கனவே நான் அறிவுறுத்தியுள்ளேன். அதையேற்று பெரும்பான்மையினர்  திருக்குறளை படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அவ்வாறு படித்தவர்களும், இதுவரை திருக்குறளை படிக்காதவர்களும் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தினமும் ஓர் அதிகாரத்தைப் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

திருக்குறளுக்கு மு.வரதராசனார் எழுதிய உரை மிகவும் எளிமையாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது.

திருக்குறள் படித்தால் அறிவு வளரும்; வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ளலாம்; நெருக்கடிகளை சமாளிக்கலாம்; பக்குவம் கிடைக்கும்; அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும்; திருக்குறள் படிப்பு மனிதனை முழுமையாக்கும்.

எனவே புத்தாண்டில் புதுமுயற்சியைத் தொடங்குவோம்... புதிய மனிதராய் மாறுவோம்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages