ஆங்கிலப் புத்தாண்டில் ஆனந்தம் பெருகட்டும்; அன்பு தழைக்கட்டும்! - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி - Agnipuratchi

ஆங்கிலப் புத்தாண்டில் ஆனந்தம் பெருகட்டும்; அன்பு தழைக்கட்டும்! - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி

Share This

ஆங்கிலப் புத்தாண்டில் ஆனந்தம் பெருகட்டும்; அன்பு தழைக்கட்டும்! -  மருத்துவர் அன்புமணி இராமதாஸ் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் கொண்டாடும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும்  இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தாண்டு பிறப்பு என்பது ஆண்டுக்கு ஒரு முறை வழக்கமாக வந்து போகும் நிகழ்வல்ல. ஒவ்வொரு ஆண்டும் மனிதகுலத்தின் மனதில் புத்துணர்வையும், புது நம்பிக்கையையும் விதைப்பதற்கான உன்னத திருநாள் ஆங்கிலப் புத்தாண்டு ஆகும். ஓராண்டில் ஆயிரமாயிரம் ஏமாற்றங்கள், வருத்தங்கள், கவலைகள் இருந்தாலும், அவை அனைத்தையும் நாட்காட்டியுடன் சேர்த்து ஒதுக்கி வைத்து விட்டு, புதிதாக பிறக்கப் போகும் ஆண்டில் எத்தனை சவால்கள் வந்தாலும் அவற்றை துணிச்சலுடன் எதிர்த்து நின்று வீழ்த்தும் நம்பிக்கையையும், உத்வேகத்தையும் நமக்கு அளிப்பது புத்தாண்டு தான். அதை எவரும் மறுக்க முடியாது.

2020&ஆம் ஆண்டு ஒட்டுமொத்த உலகத்தையும் நிலைகுலைய வைத்த ஆண்டு. கொரோனா வைரஸ் அனைவரின் மகிழ்ச்சி, நிம்மதி, வாழ்வாதாரம் ஆகியவற்றை பறித்த ஆண்டு. கடந்த ஆண்டில் ஏற்பட்ட அனைத்து பின்னடைவுகளையும் உதறித் தள்ளிவிட்டு புதிய உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் புத்தாண்டில் பயணித்தாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்; புத்தாண்டு நிச்சயமாக அனைத்து துறைகளிலும் நாம் எதிர்பார்த்த நன்மைகளையும், வெற்றிகளையும் நிச்சயமாக நமக்கு வழங்கும்.

அரசியலிலும் நாம் விரும்பும் வெற்றிகள் நமக்கு கிடைக்கும். அரசியலில் கடந்த ஆண்டுகளில் நாம் விதைத்து, உழைத்த உழைப்புக்கு வெற்றியை அறுவடை செய்வதற்கான காலம் தான் 2021 ஆகும். வெற்றியை அறுவடை செய்யும் வரை, மிதப்பில் ஆழ்ந்து விடாமல் கடுமையாக உழைக்க வேண்டும்.

ஆங்கிலப் புத்தாண்டில் தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும், ஆனந்தம், வளர்ச்சி, அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அமைத்தும் கிடைக்க வேண்டும் என்று கூறி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை  புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages