அக்னிப்புரட்சி இன்றைய (31.12.2020) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (31.12.2020) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (31.12.2020) முக்கிய செய்திகள்.

* சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு தேதி -இன்று மாலை அறிவிப்பு வெளியாகிறது:

சிபிஎஸ்இ தேர்வை ஆன்லைனில்  நடத்துவது குறித்து தற்போது பரிசீலிக்கவில்லை.

சிபிஎஸ்இ பொது தேர்வு குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.

சென்னையில் பெட்ரோல்- டீசல் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

* 💥சன் தொலைக்காட்சியில் அதிமுகவின் விளம்பரம் ஒளிபரப்பு செய்வதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மரு.செந்தில்குமார் விமர்சனம்

சேற்றில்/ஆற்றில் கால் சன் டிவி பெரிய வணிக சாம்ராஜ்யமாக இருக்கலாம்

ஆனால் கலைஞரின் உடன்பிறப்புகள் மற்றும் நம் தளபதியின் லட்சக்கணக்கான அடிமட்ட தொண்டன் இவற்றை லேசாக எடுத்துக் கொள்வதில்லை

அதிமுக விளம்பரங்களைச் சுமந்து பணம் சம்பாதியுங்கள் அல்லது

திமுக தொண்டனுக்கு விசுவாசமாக இருங்கள் - மருத்துவர் செந்தில்குமார், தருமபுரி நா. உறுப்பினர்

* வொண்டர் வுமென் திரைப்படம் மூலம் உலகறியப்பட்ட பிரபல ஹாலிவுட் நடிகை Gal Gadot இந்த ஆண்டில் தனக்கு பிடித்த 10 வொண்டர் வுமென்களின் படங்களை வெளியிட்டு சிறப்பு செய்துள்ளார்

இதில் இந்தியாவைச் சேர்ந்த 82 வயதான bilkis Dadi -வின் படமும் இடம் பெற்றுள்ளது. இவர் இந்தாண்டில் நடைபெற்ற CAA விற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதோடு தற்போது நடந்து வரும் உழவர்கள் போராட்டத்திலும் பங்கேற்று அரசுக்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

* வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற கோரி கேரள சட்டமன்றத்தில் தீர்மானம்.

விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு முழுமையாக கேட்க வேண்டும் எனவும் தீர்மானம்.

டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் 36 வது நாளாக போராட்டம்.

ஏற்கனவே பஞ்சாப், டெல்லி சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் ஒருவருக்கு மட்டுமே உருமாறிய கொரோனா.

பிரிட்டனில் இருந்து மதுரை வந்த நபருக்கு உருமாறிய கொரோனா தொற்று இல்லை.

உருமாறிய கொரோனா பாதித்தோருக்கான சிகிச்சையில் மாற்றம் தேவையில்லை - சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

* வாகனங்களில் பாஸ்டேக் பொருத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு:

நாளை முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்டேக் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவகாசம் நீட்டிப்பு.

வாகனங்களில் பாஸ்டேக் பொருத்துவதற்கான அவகாசம் பிப்ரவரி 15ந் தேதி வரை நீட்டிப்பு.

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறையிலேயே கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் பிப்ரவரி 15ந் தேதி வரை நீட்டிப்பு.

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ஒரே ஒரு வரிசையில் ரொக்கம் செலுத்தி வாகனங்கள் பயணிக்க பிப்ரவரி 15 வரை அனுமதி.

* தமிழகத்தில் முன்கூட்டியே சட்டமன்ற தேர்தல் நடத்த வாய்ப்பில்லை:

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்.

கூடுதல் வாக்குச்சாவடி மையங்களை அடையாளம்காண வேண்டி உள்ளதால் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பில்லை.

67 ஆயிரமாக இருந்த வாக்குசாவடி மையங்களை, 95 ஆயிரமாக அதிகரிக்க திட்டம்.

ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரம் பேர் மட்டுமே வாக்களிக்க ஏற்பாடு - சத்யபிரதா சாகு.

* தமிழகத்தில் ஜனவரி முதல் வாரத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை-தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்.

ஆந்திரா உள்பட 4 மாநிலங்களில் ஏற்கனவே தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது.

ஜனவரி 2 ஆம் தேதி முதல் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி ஒத்திகை நடத்த மத்திய அரசு ஏற்பாடு.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை சேமித்து, பதப்படுத்தி வைப்பதற்கான ஏற்பாடுகள் தயார்.

* 2020-க்கு விடை கொடுப்போம்!  2021-ஐ வரவேற்போம் !! என்ற புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு-வில் அரசியல் தீர்மானங்களை பாமக சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக-வின் நிலைப்பாடு குறித்து 16 தீர்மானங்கள் மூலம் பாமக தெரிவித்துள்ளது.

தீர்மானம் 1: தமிழ்நாட்டில் கல்வி- வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு உடனடியாக வழங்க வேண்டும்.

தீர்மானம் 2: கடலூர், காவிரிப் பாசன மாவட்டங்களில் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

தீர்மானம் 3: புயல் பாதிப்பு - தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

தீர்மானம் 4: உழவர்கள் போராட்டத்திற்கு சுமூக தீர்வு காணப்பட வேண்டும்.

தீர்மானம் 5: தமிழ்நாட்டில் அரசுப் பணிகள் தமிழர்களுக்கே; தனியார் வேலைவாய்ப்புகளில் 80% தமிழர்களுக்கே வழங்க சட்டம் இயற்ற வேண்டும்.

தீர்மானம் 6: மாவட்ட நீதிபதிகள் தேர்வு முறையில் மாற்றம் செய்யவேண்டும்.

தீர்மானம் 7: தேர்தல் கருத்துக்கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

தீர்மானம் 8: சென்னை - சேலம் இடையிலான 8 வழிச் சாலைத் திட்டத்தை கைவிட வேண்டும்.

தீர்மானம் 9: காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

தீர்மானம் 10: மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27% இடஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

தீர்மானம் 11: ஆன்லைன் கந்துவட்டி செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

தீர்மானம் 12: பேரறிவாளன் விடுதலைக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்கவேண்டும்.

தீர்மானம் 13: தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தீர்மானம் 14: பா.ம.க சிறந்த செயல் வீரர் விருதுபெறும் சொந்தங்களுக்கு வாழ்த்துகள்.

தீர்மானம் 15: 2021-ஆம் ஆண்டு பா.ம.க. வெற்றிகளை குவிக்கும் ஆண்டாக அமைய உறுதி ஏற்போம்.

தீர்மானம் 16: புதுவை மாநிலத்தில் துணை நிலை ஆளுனருக்கும், முதலமைச்சருக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வந்து மக்கள் நலப் பணிகளை உறுதி செய்ய வேண்டும்.

இந்த 16 தீர்மானங்களையும் பாமக பொதுக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 16 தீர்மானங்களுக்கு விரிவான விளக்கத்தையும் பாமக வெளியிட்டுள்ளது

* தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு:

தமிழகத்தில் தளர்வுகளுடன் அமலில் உள்ள பொதுமுடக்கம் ஜனவரி 31ந் தேதி வரை நீட்டிப்பு.

ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் ஜனவரி 31 வரை பொதுமுடக்கம் அமலில் இருக்கும்.

புதிய வகை கொரோனா பரவுவதால் காணும் பொங்கலுக்கு பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வருவதற்கு தடை.

அரசியல், பொழுதுபோக்கு, மதம் சார்ந்த கூட்டங்களை உள் அரங்கங்களில் 50 சதவிகித இருக்கைகளில் மட்டும் ஆட்களை அனுமதித்து நடத்தலாம்.

திரைப்பட, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு முழு அளவில் தொழிலாளர்களை பயன்படுத்த அனுமதி.

நேர கட்டுப்பாடுகள் இன்றி வழிபாட்டுத் தலங்களில் வழக்கமான நேர நடைமுறைகளின் படி பொதுமக்களை அனுமதிக்க அனுமதி.

புதிய கொரோனா பரவுவதை தடுக்க ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ பதிவு கட்டாயம்.

* உலகிலேயே முதலாவது நாடாக நியூசிலாந்தில் 2021 புத்தாண்டு பிறந்தது:

உலகின் முதல் நாடாக 2021 புத்தாண்டை வரவேற்றது நியூசிலாந்து - வானவேடிக்கைகளுடன் கோலாகல கொண்டாட்டம்.

உலகிலேயே முதலாவது நாடாக நியூசிலாந்தில் 2021 புத்தாண்டு பிறந்தது:

உலகின் முதல் நாடாக 2021 புத்தாண்டை வரவேற்றது நியூசிலாந்து - வானவேடிக்கைகளுடன் கோலாகல கொண்டாட்டம்.

* ஸ்ரீரங்கம் அரங்கநாத அவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழா இராப்பத்து 8-ம் திருநாள்:

ஸ்ரீ நம்பெருமாள் "கைத்தல சேவை"யில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

* சென்னை உயர்நீதி மன்றத்தின் 50- வது நீதிபதியாக சஞ்ஜீப் பானர்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது.

தலைமை நீதிபதியாக சஞ்ஜீப் பானர்ஜியை நியமித்து குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

* 💥சென்னை உயர் நீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதியரசராக  சஞ்சீவ் பானர்ஜியை நியமித்து குடியரசு தலைவர் ஆணை பிறப்பிப்பு.

* சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 10ஆம் தேதி வரை நடைபெறும் - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.

தேர்வு முடிவுகள் ஜூலை 15ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிப்பு.

* அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் - முதலமைச்சர் பழனிசாமி.

கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிமுக கூட்டணியில் ஏற்கனவே உள்ள கட்சிகள் தற்போதும் நீடிக்கிறது.

ஆளுநரிடம் திமுக அளித்த புகாரில் எந்த உண்மையும் இல்லை - முதலமைச்சர் பழனிசாமி.

* அனைத்து ’நெட்வொர்க்’களுக்கும் இலவசமாக பேசலாம்: ஜியோ.

நாளை ஜனவரி 1 ஆம் தேதி முதல் அனைத்து நெட்வொர்க்களுக்கும் இலவசமாக பேசலாம் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்றுவரும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில் அம்பானி மற்றும் அதானி நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிப்பதாக விவசாயிகள் அறிவித்தனர்.

இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஜியோ சிம்மை புறக்கணித்து வருகின்றனர், பஞ்சாப், ஹரியானாவில் நூற்றுக்கணக்கான ஜியோ டவர்களையும் விவசாயிகள் சேதப்படுத்தியுள்ளதாக ஜியோ புகார் அளித்துள்ளது.

விவசாயிகளின் எதிர்ப்பும் இந்த பிற நெட்வொர்க்கள் கட்டண நீக்க அறிவிப்பின் பின்னால் இருக்குமோ என்ற கருத்துக்களும் எழுந்துள்ளன.

* 💥அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும், அதை ஏற்பவர்களே கூட்டணியில் இருப்பார்கள் - முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டம்

* 💥புதுவகை மோசடி: அரசு விழிப்பறிக்கை

கொரோனோ வெருவிப் பரவலுக்கு தடுப்பூசி போட உங்கள் ஆதார் எண்ணையும், அதனுடன் இணைந்த செல்பேசி எண்ணுக்கு வரும் OTP ஐயும் கேட்டு யாராவது கேட்டால் நம்ப வேண்டாம். தடுப்பூசி பெற முன்பதிவு செய்ய  அரசின் சார்பில் ஏதும்  அறிவிப்பு விடுக்கவில்லை என விழிப்பறிக்கை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages