மழைக் காலம் : வீடுகளுக்குள் பாம்புகள் வராமல் தடுப்பது எப்படி... வந்தால் என்ன செய்ய வேண்டும்?
மழைக்காலம் என்பதால் வீடுகளுக்குள் பாம்பு, தேள், பூரான் ஆகியவை புகுந்து விடும் வாய்ப்பு அதிகம்.
எனவே, இந்த சமயத்தில் சற்று ஜாக்கிரதையாக இருப்பது அவசியமாகிறது.
பொதுவாக பாம்புகள் உணவு, உறைவிடம் தேடித்தான் வீடுகளுக்குள் நுழைகின்றன.
பாம்புகளின் முக்கிய உணவாக இருப்பது எலிகள்.
எனவே, வீட்டைச் சுற்றி எலிகள் நடமாட்டம் இல்லாத மாதிரி பார்த்து கொள்ள வேண்டும்.
வீட்டுக்குள், வீட்டின் சுற்றுப்புறத்தை குப்பை கூளங்கள் தேங்காத வகையில் சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
வீட்டில் எங்காவது ஓட்டைகள் இருந்தால் நன்றாக அடைத்து விடுங்கள்.
பெரும்பாலும் ஓட்டைகள் வழியாகவே பாம்புகள் வீடுகளுக்குள் நுழைகின்றன.
இரு சக்கர வாகனங்களை நன்றாக பரிசோதித்த பிறகே எடுக்க வேண்டும்.
ஷூ போன்றவற்றை அணியும் போது ஜாக்கிரதையாக இருங்கள்.
அவற்றை நன்கு உயரமான சுத்தமான இடத்தில் வைத்திருங்கள்.
பத்திரமாக பாதுகாத்து வரும பழைய பொருள்கள், பழைய மர சாமான்கள், உடைந்த கற்கள், மணல் மூட்டை, விறகுகள் போன்ற நாம் கவனிக்காமல் சேர்த்து வைக்கும் இடமே பாம்புகள் குடியேறும் இடம்.
இவைகளை தேவை இல்லை என்றால் தேவையான நபர்களுக்குக் கொடுத்து விடலாம்.
வீட்டை சுற்றி உள்ள தோட்டத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும்.
அப்படி செய்தால், வீட்டுக்குள் பாம்புகள் மற்றும் மற்ற ஆபத்தை விளைவிக்கும் தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துகள் வராமல் தவிர்க்க முடியும்.
வீட்டுக்குள் பாம்புகள் இருப்பதைக் கண்டால், பதறாதீர்கள்.
உடனடியாக , தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்துவிட்டு அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி விடுங்கள்.
எந்த காரணத்தை கொண்டும் பாம்பை அடித்து கொல்ல முயல வேண்டாம்.
ஏனென்றால், எலிகள் போன்றவற்றை சாப்பிட்டு உயிர்ச்சங்கிலிக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது பாம்புகளே.
No comments:
Post a Comment