இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைப்பு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு - Agnipuratchi

இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைப்பு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

Share This

இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைப்பு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இணைப்பு கல்லூரிகள், அதன் உறுப்பு கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் இந்த மாதம் 15ஆம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது இளங்கலை இறுதி ஆண்டு மாணவர்கள் வருகின்ற 7ம் தேதி முதலும், முதுகலை இரண்டாமாண்டு மாணவர்கள் டிசம்பர் 2ஆம் தேதி முதலும் கல்லூரிகளுக்கு நேரடியாக வரலாம் என தமிழக அரசு அறிவித்தது . 

இதனை தொடர்ந்து இறுதி செமஸ்டர் தேர்வுகள் தற்போது ஒத்தி வைக்கப்படுவதாகவும் , தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பொறியியல் பயிலக் கூடிய இறுதியாண்டு தவிர்த்த  இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடத்தி முடிக்கப்பட வேண்டும் எனவும் , ஒரு பகுதி பாடங்கள் அவர்களுக்கு வைக்கப்படும் அக மதிப்பீட்டு தேர்வுகளின் அடிப்படையில் நடத்தப்பட்டதாக கணக்கில் கொள்ளப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages