சமூகநீதி என்றால் என்ன? என்பதை இன்னும் புரிந்துகொள்ளாதவர்கள் கவனத்திற்காக! - மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் பதிவுகள் - Agnipuratchi

சமூகநீதி என்றால் என்ன? என்பதை இன்னும் புரிந்துகொள்ளாதவர்கள் கவனத்திற்காக! - மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் பதிவுகள்

Share This

சமூகநீதி என்றால் என்ன? என்பதை இன்னும் புரிந்துகொள்ளாதவர்கள் கவனத்திற்காக! - மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் பதிவுகள்

இட ஒதுக்கீடு என்பது எப்போதும் ஒரே திடமாக மாறாமல் இருப்பது சமூகநீதி அல்ல. இதை கேரளம் சரியாக புரிந்து கொண்டு அவ்வப்போது இட ஒதுக்கீட்டில் மாற்றங்களை செய்து வருகிறது. அதன்மூலம் அங்கு உண்மையான சமூகநீதி மலர்கிறது.

கேரளத்தில் 1950-ஆம் ஆண்டில் இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது 45%  வழங்கப்பட்டது. 1957-ஆம் ஆண்டில் அது 50% ஆக உயர்த்தப்பட்டது. பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 40% இட ஒதுக்கீடு ஒரே பிரிவாக வழங்கப்பட்டது. ஆனால், அந்த வகுப்பில் உள்ள பல சாதிகளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதைத் தொடர்ந்து 1966-ஆம் ஆண்டில் குமாரபிள்ளை ஆணையத்தின் அறிக்கைப்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 40% இட ஒதுக்கீடு 5 பிரிவுகளாக பிரித்து வழங்கப்பட்டது.

அதிலும் பல சாதிகளுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்று தெரியவந்ததை அடுத்து 1990-களின் தொடக்கத்தில்  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 40% இட ஒதுக்கீட்டில் மேலும் 3 புதிய பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு மொத்தம்  8 பிரிவுகளாக  அதிகரிக்கப்பட்டது. 

ஈழவர்களுக்கு 14%, இஸ்லாமியர்களுக்கு 12%, லத்தீன் கிறித்தவர்களுக்கு 4%, நாடார்களுக்கு 2%, கிறித்தவ மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு 1%, தீரவர்களுக்கு 1%, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3%, விஸ்வகர்மாக்களுக்கு 3% என இடப்பங்கீடு செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தில் ஏதேனும் ஒரு சாதியின் மக்கள்தொகை இரு விழுக்காட்டுக்கும் கூடுதலாக இருந்தால் அவர்களுக்கு தனிப் பிரிவாக இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதற்கும் குறைவாக மக்கள்தொகை கொண்ட சாதிகளை மட்டும் இணைத்து 3% ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

கேரளத்தில் இந்த 8 பிரிவு இட ஒதுக்கீடுகளும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கானது தான். பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு  தனியாக 10% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதனால் தான் கேரளத்தில்  அனைத்து சாதிகளுக்கும் முழுமையான சமூகநீதி கிடைக்கிறது.

ஆக, இன்றைய சூழலில் சமூகநீதியின் சொர்க்கம் கேரளம் தான். அனைவருக்கும் பயனளிக்கும் வகையில்  இட ஒதுக்கீட்டின் மூலம் சமூகநீதியை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை கேரளத்தைப் பார்த்து மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages