அக்னிப்புரட்சி இன்றைய (03.01.2021) முக்கிய செய்திகள்.
* முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
பாண்டிகோவில் அருகே துவாரகா பேலசில் மாலை 4 மணிக்கு ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி ஆலோசனை நடத்துகிறார்.
* சென்னையில் பெட்ரோல்- டீசல் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
* 💥வாரிசுகள் நியமனம்
காங்கிரஸ் கட்சி பொது செயலாளர்களாக மறைந்த கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினர் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த், தங்கபாலுவின் மகன் கார்த்தி தங்கபாலு, EVKS இளங்கோவனனின் மகன் திருமகன் ஈவேரா உள்ளிட்டோர் நியமனம்
விஜய் வசந்த் நாளிதழ்களில் தன்னை காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளராக நியமனம் செய்தமைக்கு நன்றி தெரிவித்து கொடுத்திருக்கும் விளம்பரத்தில் ப.சிதம்பரம் புகைப்படம் இடம்பெறவில்லை...!
* தூத்துக்குடி மாவட்டத்தில் முதலமைச்சர் தேர்தல் பரப்புரை:
கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் பருத்தி விவசாயிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், விவசாயிகளுக்குத் தேவையான நீரைச் சேமிப்பதற்காகக் குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவித்தார். விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களைக் கொள்முதல் செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டத்தை எதிர்காலத்தில் அரசு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
* பாஜக தலைவர் முருகன் மீது வழக்குப்பதிவு:
திருப்பத்தூர்: பாஜக தலைவர் முருகன், கே.டி.ராகவன் உள்ளிட்டோர் மீது ஆம்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு.
ஆம்பூர் ஆலங்குப்பத்தில் பாஜக சார்பில் நடந்த மாநாட்டில் 144 தடையை மீறி கூட்டம் கூடியதாக 3 பிரிவில் வழக்கு.
* இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி - இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம்.
சென்னையில் 25 நட்சத்திர ஹோட்டல்களில் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை.
ஐடிசி சோழா ஹோட்டலில் பணிபுரியும் 85 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்த நிலையில் சென்னை மாநகராட்சி முடிவு.
* முன்களப் பணியாளர்களுக்கு நன்றி': பிரதமர் மோடி.
மருத்துவர்கள், போலீசார், தூய்மை பணியாளர்கள் கொரோனா முன்களப் பணியாளர்களுக்கும் நன்றி.
பல உயிர்களைக் காப்பாற்றிய அவர்களுக்கு நாம் என்றும் நன்றி உணர்வுடன் இருப்போம்- பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்.
* ஐடிசியை தொடர்ந்து லீலா பேலஸ் ஊழியர்கள் 16 பேருக்கு கொராணோ தொற்று உறுதியானது!
* சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்:
கூடுதல் கட்டண வசூலை எதிர்த்து சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்.
கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கைவிடக்கோரி 26ஆவது நாளாக மாணவர்கள் தொடர் போராட்டம்.
* திமுக ஆட்சி அமைந்தவுடன் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் - திமுக தலைவர் ஸ்டாலின்.
* நெசவாளர்களுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.150 கோடியில் இருந்து ரூ.300 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.
இந்தியாவிலேயே நெசவாளர்களுக்குப் பசுமை வீடுகள் கட்டி தந்தது அதிமுக அரசுதான்- முதல்வர் பழனிசாமி.
* கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளித்தது மக்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது.
தமிழகத்தில் முதற்கட்டமாக 2.5 கோடி மருந்துகளை சேமித்து வைப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
* உ.பி.யில் மயானத்தின் மேற்கூறை இடிந்ததால் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 16 பேர் உயிரிழப்பு.
மழை பெய்ததால் மயான கட்டடத்தில் ஒதுங்கியபோது விபத்து ஏற்பட்டது.
மயானத்தின் மேற்கூறை இடிந்ததால் பலர் படுகாயம். தொடர்ந்து மீட்பு பணி நடக்கிறது.
No comments:
Post a Comment