மதுரை கூட்டத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் மு.க.அழகிரி: - Agnipuratchi

மதுரை கூட்டத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் மு.க.அழகிரி:

Share This

மதுரை கூட்டத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் மு.க.அழகிரி:

நான் எனது முடிவை விரைவில் அறிவிப்பேன்.

நான் எந்த முடிவை அறிவித்தாலும், நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஆதரவாளர்களுக்கு அழைப்பு - மு.க.அழகிரி.

திருமங்கலம் இடைத்தேர்தல் வெற்றியை இந்தியாவே உற்றுநோக்கியது.

திருமங்கலம் இடைத்தேர்தலில் முதலில் பணி செய்ய விரும்பவில்லை; கலைஞர் வலியுறுத்தலால் தேர்தல் பணி செய்தோம்.

திருமங்கலம் இடைத்தேர்தல் பார்முலா என்கிறார்கள்; அப்படியொரு பார்முலா கிடையாது: மு.க.அழகிரி.

திமுகவில் தொண்டனாக இருக்கவே விரும்பினேன்; ஒருபோதும் பதவியை விரும்பியதில்லை.

தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை கலைஞர் வலியுறுத்தி கொடுத்ததால் ஏற்றுக் கொண்டேன்.

பிறந்த நாளுக்காக பொதுக்குழுவே வருக என கட்சியினர் போஸ்டர் அடித்ததில் என்ன தவறு?

ஸ்டாலினுக்கு கூட வருங்கால முதல்வரே வருக என போஸ்டர் அடிக்கிறார்கள்

ஸ்டாலின் எப்போதுமே முதலமைச்சராக முடியாது. ஸ்டாலின் ஏன் எனக்கு துரோகம் செய்தார் என்று தெரியவில்லை.

ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியை என்னிடம் கேட்டுத்தான் கருணாநிதி அளித்தார்.

கருணாநிதியிடம் நான் எம்பி பதவியோ, அமைச்சர் பதவியோ கேட்கவில்லை, அவராக கொடுத்தது.

ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவி வழங்கப்போகிறேன் என்றார்கள் நான் ஒப்புதல் தந்தேன்.

கருணாநிதியிடம் என்னை பற்றி பொய்களை கூறி கட்சியைவிட்டு நீக்கினர்.

விரைவில் முடிவை அறிவிப்பேன், என்ன முடிவு எடுத்தாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எதையும் சந்திக்க தயாராக இருங்கள் - ஆதரவாளர்கள் மத்தியில் மு.க‌.அழகிரி பேச்சு.

உடல்நிலை சரியில்லாத கருணாநிதியை கட்டாயப்படுத்தி திருவாரூரில் போட்டியிட செய்தனர்.

2016 தேர்தலில் கருணாநிதி முதல்வரானால் தான் முதல்வராகி விடலாம் என ஸ்டாலின் கருதினார் -மு.க.அழகிரி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages