அக்னிப்புரட்சி இன்றைய (06.01.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் விலை 24 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 86.75 ரூபாய்க்கும், டீசல் விலை 25 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 79.46 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
* பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட மேலும் 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது- இவ்வழக்கில் ஏற்கெனவே 5 பேர் கைது.
வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மேலும் 3 பேர் கைதாகியுள்ளனர்.
* 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்காகப் பள்ளிகளைத் திறப்பது பற்றி இன்று முதல் ஜன.8 வரை கருத்துக் கேட்புக் கூட்டம்.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாள் ஒன்றுக்கு 100 பெற்றோர்களிடம் எழுத்துப்பூர்வமாகக் கருத்துக் கேட்பு- பள்ளிக் கல்வித்துறை.
பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பெற்றோரை அழைத்து கருத்துக் கேட்க வேண்டும்- பள்ளிக் கல்வித்துறை.
* பறவை காய்ச்சல் நிலவரம் குறித்து வாரம் ஒருமுறை அறிக்கை அளிக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்.
பறவை காய்ச்சல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் முறையாக பின்பற்ற வேண்டும்.
மர்மமான முறையில் உயிரிழக்கும் பறவைகளின் மாதிரிகளை உடனுக்குடன் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் - மத்திய அரசு.
* பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்களுக்கு தொடர்புள்ளது என்ற திமுகவின் கூற்று உண்மையாகியுள்ளது.
அதிமுக அரசிடம் வழக்கு விசாரணை தொடர்ந்திருந்தால் இந்த கைதுகள் நடந்திருக்குமா? - கனிமொழி, எம்.பி
* பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம் விதிக்க புதிய சட்டம்.
புகைப்பிடிப்பதற்கான வயதை 18-ல் இருந்து 21 வயதாக உயர்த்த மத்திய அரசு திட்டம்.
* தமிழகத்தில் வரும் 8-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி ஒத்திகை.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடுவதற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் 51 இடங்களில் ராட்சத தடுப்பூசி சேமிப்பு அறைகள் அமைப்பு - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்.
* பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம் கட்சியில் இருந்து நீக்கம்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அருளானந்தம் கைது செய்யப்பட்ட நிலையில் அதிமுக தலைமை நடவடிக்கை.
* சட்ட விரோதமாக செயல்படும் கடன் வழங்கும் செயலிகளை தடை செய்யக் கோரிய வழக்கு:
ரிசர்வ் வங்கி ஆளுநர், கூகுள் நிறுவனம் மற்றும் மத்திய - மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
கடன் பெறுவோர் ஆன் லைன் ஆப் மூலமாக தகவல்கள் பகிர்வதால் சமூக விரோத சக்திகள் ஊடுருவ வாய்ப்புள்ளது - நீதிபதிகள்.
கடன் வழங்கும் நிறுவனங்கள், கடன் வசூலிப்பதில் தங்களுக்கு தாங்களே அதிகாரங்களை வகுத்து கொள்கின்றனர், இது சட்டவிரோதம் - நீதிபதிகள்.
* உணவுத்துறை அமைச்சர் காமராஜ்-க்கு கொரோனா தொற்று பாதிப்பு - மணப்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அமைச்சர் காமராஜ் அனுமதி.
அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, தேனி மற்றும் நாகை மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் 21 செ.மீ., சென்னை அண்ணா பல்கலை., தாம்பரம் தலா 16 செ.மீ. மழை பதிவு. - வானிலை மையம்.
* பவானி தேர்தல் பிரசார கூட்டத்தில்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.
வேளாண் பணி சிறந்து விளங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தி.மு.க-வின் மக்கள் கிராம சபை
கூட்டத்தால் பலனில்லை.
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்பட வில்லை.
கிராம சபை கூட்டத்தின் மூலம் மக்களை ஏமாற்றி வருகிறார்.
அரசு, முதலமைச்சரை குறை சொல்வதே ஸ்டாலினின் வாடிக்கை.
* “இந்தியாவில், மனிதர்களுக்கு
பறவைக்காய்ச்சல் பரவவில்லை" - மத்திய கால்நடை துறை இணை அமைச்சர் சஞ்சீவ் பாலியான் விளக்கம்.
இமாச்சலப் பிரதேசம்,அரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம்,கேரளா ஆகிய மாநிலங்களில் பரவும் பறவைக்காய்ச்சல்.
பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்.
* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியல் வெளியீடு:
காயத்திலிருந்து குணமடைந்த ரோகித் சர்மா, டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக சேர்ப்பு, தமிழக வீரர் நடராஜன் இடம் பெற வில்லை.
ரஹானே தலைமையிலான இந்திய அணியில் ரோகித், கில், புஜாரா, விஹாரி, ரிசப் பண்ட், ஜடேஜா, அஸ்வின், பும்ரா, சிராஜ், சைனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
* ஒருதாய் வயிற்றில் பிறந்த அண்ணணுக்கே தூரோகம் இழைக்கும் ஸ்டாலின், மக்களை எவ்வாறு பாதுகாப்பார்?.
துண்டு சீட்டு இல்லாமல், கருத்து மோதலில் நேருக்கு நேர் மோதி பார்ப்போம். - முதலமைச்சர் பழனிசாமி.
* அரசுப்பணியில் இருந்து சகாயம் ஐஏஎஸ் விடுவிப்பு:
விருப்ப ஓய்வு கடிதம் அளித்திருந்த சகாயம் ஐஏஎஸ் விடுவிக்கப்பட்டார்.
அக்டோபர் 2 ஆம் தேதி அரசுக்கு விருப்ப ஓய்வு கடிதம் அளித்திருந்தார் சகாயம் ஐஏஎஸ்.
* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 உயர்ந்து, ரூ.39,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,885-க்கு விற்பனை ஆகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.75.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* கன்னியாகுமரி மாவட்ட உதவி ஆய்வாளராக இருந்த வில்சன் கொலை வழக்கு - மற்றொரு தீவிரவாதி கைது.
தீவிரவாதிகளுக்கு உதவி செய்த மற்றொரு தீவிரவாதியை என்.ஐ.ஏ. கைது செய்தது.
சென்னை விமானநிலையத்தில் கைதான ஷிகாபுதீன் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் என தகவல்.
களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த ஆண்டு ஜன.8ஆம் தேதி வில்சன் சுட்டுக்கொலை.
* 4ஜி அலைக்கற்றைகளின் ஏலத்தை மார்ச் 1 ஆம் தேதி நடத்த மத்திய அரசு முடிவு:
ஏலத்தில் பங்கேற்க விரும்பும் டெலிகாம் ஆபரேட்டர்கள் பிப்ரவரி 5 ஆம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் - மத்திய அரசு.
* திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதித்திருப்பது விதி மீறல்- தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்.
கொரோனா தடுப்புக்கான மத்திய அரசின் வழிகாட்டு விதிகளுக்கு ஏற்ப புதிய உத்தரவை பிறப்பிக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா கடிதம்.
* மதுரை மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
ஜனவரி 14ல் அவனியாபுரம், 15ல் பாலமேடு, 16ல் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை பிறப்பிப்பு.
* மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான அமித் ஷாவின், தமிழ்நாட்டு வருகை திடீரென ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த நவம்பர் மாதம் 21ஆம் தேதி சென்னை வந்த அமித் ஷா, அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்றார்.
இந்நிலையில், பொங்கலன்று அமித் ஷா சென்னை வர இருப்பதாகவும், அப்போது தொகுதி பங்கீடு குறித்து பேசக்கூடும் என்றும், ரஜினியை சந்திப்பார் என்றும் தகவல்கள் பரவியிருந்தன.
இந்தச்சூழலில், அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
* ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைத்து போராட்டம் செய்வது அவரை மேலும் நோகடிக்கும் செயல்
ரஜினிகாந்த் மீது அன்பும் நலனில் அக்கறையும் கொண்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் மற்றும் ரசிகர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது: சுதாகர்
No comments:
Post a Comment