அக்னிப்புரட்சி இன்றைய (08.01.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (08.01.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (08.01.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் விட்டர் ரூ.86.96 க்கு விற்பனை; டீசல் லிட்டர் ரூ.79.72 க்கு விற்பனை.

* தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் 190 இடங்களில் ஒத்திகை நடைபெறுகிறது.

சென்னையில் நடைபெறும் ஒத்திகையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு செய்கிறார்.

* நாமக்கல் பண்ணைகளில் ஒரு கிலோ கறிக்கோழி விலை ரூ.14 குறைந்து ரூ.78க்கு விற்பனை.

பறவைக்காய்ச்சல் பீதியால் கேரளாவுக்கு ஏற்றுமதி குறைந்ததையடுத்து கறிக்கோழி விலை சரிவு.

* சென்னையில் நடைபெற்றுவரும் தடுப்பூசி ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் ஆய்வு.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்திய விதம் பாராட்டக்குரியது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு நன்றி.

கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. - மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.

* இந்தியாவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்களுக்கு ஆல் அவுட்.

ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 131 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இந்திய அணியில் ஜடேஜா 4, பும்ரா, சைனி தலா 2, சிராஜ் 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

* அதிமுக நாளை மாலை ஆலோசனை:

சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நாளை அதிமுக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆலோசனை.

அதிமுக செயற்குழு - பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பிறகு மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடக்கிறது.

மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்களும் தேர்தல் குறித்த ஆலோசனையில் கலந்து கொள்கின்றனர்.

* கோயிலுக்குள் பாலியல் வன்கொடுமை : நாகையில் கொடூரம்.

நாகையில் கட்டட வேலை செய்யும் பெண்ணை வழிமறித்து கோயிலுக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை.

பாதிக்கப்பட்ட பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.
கைது செய்யப்பட்ட அருண்ராஜ், ஆனந்த் ஆகிய இருவரிடம் போலீஸ் விசாரணை.

* சேலம் - சென்னை இடையே எட்டு வழிச்சாலை திட்டம், உச்சநீதிமன்றத்தில் புதிய மனு:

உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல்.
சேலம் அயோத்தியபட்டினத்தை சேர்ந்த யுவராஜ்  மறுஆய்வு மனு.

ஏற்கெனவே சென்னை- சேலம் இடையே உள்ள 3 நெடுஞ்சாலைகளில் ஒன்றை விரிவாக்கம் செய்யலாம்.

புதிதாக விலை கொடுத்து நிலம் கையகப்படுத்த தேவையில்லை, புதிய திட்டம் தேவையில்லை.

* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மத்திய அரசு பிரதிநிதியாக பாஸ்கர் ராமமூர்த்தி நியமனம் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு.

பாஸ்கர் ராமமூர்த்தி தற்போது, சென்னை ஐஐடியின் இயக்குனராக உள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராகவும், சென்னை ஐஐடி இயக்குனராகவும் செயல்படுவார்.

* திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு எதிராக வழக்கு:

11ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.

தமிழக அரசு பதிலளிக்காவிட்டால் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்-உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை.

100% இருக்கைகள் உடன் செயல்பட மத்திய அரசு கடும் எதிர்ப்பு.

* கொரோனா தடுப்பூசியை பிரதமர் மோடி செலுத்திக் கொண்ட பிறகு நாங்கள் செலுத்திக் கொள்கிறோம் - ராஷ்டிரிய ஜனதா தலைவர் தேஜ் பிரதாப் யாதவ்.

* ‘மாஸ்டர்’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

சட்டவிரோதமாக 400 இணையதளங்களிலும், 9 கேபிள் டிவிகளிலும் வெளியிட தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

9 மாதம் கடந்து வெளியாகவுள்ள திரைப்படம் இணையத்தில் வெளியானால் பெரு நஷ்டம் ஏற்படும் - தயாரிப்பு நிறுவனம்.

* முதல்வருடன் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சந்திப்பு:

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சந்திப்பு. கொரோனா தடுப்பூசி ஒத்திகை, மருந்து கிடங்கை ஆய்வு செய்த நிலையில் முதல்வருடன் ஹர்ஷ்வர்தன் சந்திப்பு.

* பொங்கல் பரிசு வழங்கும் ரேஷன் கடைகள் அருகில் பேனர்கள் வைக்க கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்.

ரேஷன் கடைகளுக்குள் விளம்பர துண்டு பிரசுரங்களை விநியோகிக்க கூடாது - உயர்நீதிமன்றம்.

பொங்கல் பரிசு தொகுப்பு பைகளில் முதல்வர், முன்னாள் முதல்வரின் படங்கள் இடம் பெறலாம் - உயர்நீதிமன்றம்.

* திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்க முடியாது - சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அதிரடி.

பள்ளிகள் மூடியிருக்கும்போது தியேட்டர்களில் 100% அனுமதியா? - உயர்நீதிமன்றம் கேள்வி.

பள்ளிகள் மூடியிருக்கும்போது தியேட்டர்களில் 100% ரசிகர்களை அனுமதிப்பது நல்லதல்ல-சென்னை உயர்நீதிமன்றம்.

* நாகை மாவட்டம் நாகத்தோப்பு பகுதியில் கோயிலுக்குள் வைத்து இளம்பெண், இரு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இந்த செயலை செய்த மனித மிருகங்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் - பாமக நிறுவனர் இராமதாஸ்.

* வேளாண் சட்டங்களை எதிர்த்து 44வத நாளாக விவசாய சங்கங்கள் போராடி வரும் நிலையில் விவசாயிகள், மத்திய அரசு இடையே 8வது முறையாக பேச்சுவார்த்தை தொடங்கியது.

அமைச்சர்கள் பியூஷ்கோயல், நரேந்திர சிங் தோமர் மற்றும் விவசாய பிரதிநிதிகள் பங்கேற்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages