அக்னிப்புரட்சி இன்றைய (09.01.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (09.01.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (09.01.2021) முக்கிய செய்திகள்.

* மகாராஷ்டிராவில் பண்டாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு. தீ விபத்தில் சிக்கிக்கொண்ட மேலும் 7 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல்.

* சென்னையில் பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் விட்டர் ரூ.86.96 க்கு விற்பனை; டீசல் லிட்டர் ரூ.79.72 க்கு விற்பனை.

* யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இடிப்பு:

மாணவர்களும், இலங்கைத் தமிழக மக்களும் ஆர்வலர்களும் விடிய விடிய போராட்டம்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பகுதியில் பதற்றநிலை.
காவல்துறையினரும், ராணுவமும் பல்கலைக்கழக வளாகத்தில் குவிப்பு.

* அமெரிக்க அதிபர் டிரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்.

வன்முறையை தூண்டும் வித‌த்தில் கருத்துகளை வெளியிட்டதால்  நடவடிக்கை.

டிரம்ப் கணக்கை நிரந்தரமாக நீக்குவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவிப்பு.

பேச்சு சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் மீது டிரம்ப் கடும் தாக்கு.

டுவிட்டருக்கு மாற்றாக புதிய தளத்தை உருவாக்க ஆராய்ந்து வருகிறோம் - டிரம்ப்.

* நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் குறைந்து ரூ.4.60ஆக நிர்ணயம்.

* மராட்டிய மாநிலம் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட  தீ விபத்தில் உயிரிழந்த 10 குழந்தைகளின் குடும்பத்தாருக்கு தால ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க மராட்டிய அரசு உத்தரவு.

* மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்திலும் மெகா ஊழல் நடந்துள்ளதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு:

தரமற்ற மடிக்கணினியை வழங்கிய சீன நிறுவனத்தை பிளாக் லிஸ்டில் சேர்க்க வேண்டும் - ஸ்டாலின்.

நிலுவைத் தொகையை நிறுத்தி வைப்பதோடு, அபாரதமும் வசூலிக்க வேண்டும் - ஸ்டாலின்.

* யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு துணை தலைவர் ஓ.பி.எஸ். கண்டனம்.

இலங்கைப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூண் நேற்று நள்ளிரவில் இடித்து தகர்க்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழர்களின் உணர்வை மேலும் ரணப்படுத்தும், இனவெறியினரின் இழிசெயல் கடும் கண்டனத்திற்குரியது என ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.

* யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதை கண்டித்து ஜனவரி 11ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என வைகோ அறிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.

போராட்டத்தில் தமிழ் உணர்வாளர்கள், ஈழத் தமிழ் உணர்வாளர்கள், மதிமுகவினர் பங்கேற்க வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

* தங்கம் விலை சவரனுக்கு ரூ.432 குறைந்து ரூ.37,600-க்கு விற்பனை.
ஒரு கிராம் தங்கம் ரூ.4,700-க்கு விற்பனை.

* முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டதற்கு முதல்வர் பழனிச்சாமி கண்டனம்.

இரவோடு இரவாக நினைவு தூண் இடிக்கப்பட்ட செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது -முதல்வர்.

* தமிழினத்தின் விடுதலைப் போராட்ட வீரச்சுவடுகளை முற்றாகச் சிதைக்கும்
சிங்கள ஆதிக்கத்தைத் தகர்ப்போம். தமிழர் அடையாளம் காப்போம்- விசிக தலைவர் திருமாவளவன் ட்வீட்

* ஆஸி. டெஸ்ட் தொடர் : ரிஷப் பண்டை தொடர்ந்து, ஜடேஜாவும் காயத்தால் வெளியேறினார். பேட்டிங்கின் போது ரவீந்திர ஜடேஜாவின் இடது கட்டைவிரலில் பந்து தாக்கி காயம்.

* ஈழத் தமிழர்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பல ஏற்கனவே சிதைக்கப்பட்டு  அழிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, தற்போது யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூணும் இடிக்கப்பட்டுள்ளது, மிகுந்த கவலைக்கும், கடும் கண்டனத்திற்கும் உரியதாகும் - மு.க.ஸ்டாலின்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை சென்று திரும்பியவுடன், இந்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்திருப்பதை பிரதமர் மோடி அவர்கள் கருத்தில் கொண்டு, கண்டனம் தெரிவித்திட முன்வர வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு ஆகும் - ஸ்டாலின்.

* புதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு எதிராக 2-வது நாளாக தர்ணா போராட்டம்: கிரண்பேடியை மாற்றும் வரை போராட்டம் தொடரும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.

* காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை.
காணும் பொங்கல் நாளில் மெரீனா கடற்கரையில்  2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு.

14, 15, 17 ஆகிய தேதிகளில் மெரினா கடற்கரையில் இரவு 10 மணிவரை பொதுமக்கள் அனுமதி.
கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் முககவசம் அணிவது அவசியம்.

* ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி- மத்திய அரசு.

நாட்டில் ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும். நாடு முழுவதும் சுமார் 3 கோடி பேருக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்.

மருத்துவப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்களுக்கு முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசி.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை.

நாட்டில் ஜனவரி 16ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும்.

* இந்தோனேசியாவில் 182 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தை காணவில்லை என தகவல்.

10000 அடி உயரத்துக்கு மேல் சென்றுகொண்டிருந்த விமானம் மாயமானது.

'ஶ்ரீ விஜயா ஏர்' என்ற நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல்.

* சிறையில் உள்ள கைதிகளை வரும் 14ஆம் தேதி முதல் நேரில் சந்தித்து பேசலாம்- சிறைத்துறை.

கொரோனா அச்சுறுத்தலால் சிறை கைதிகளை உறவினர்கள் நேரில் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

கொரோனா தாக்கம் குறைந்து வருவதால்,  14ஆம் தேதி முதல் கைதிகளை நேரில் சந்திக்க அனுமதி - சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் உத்தரவு.

* நில மோசடி வழக்கு - திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் வரும்11-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் - நீதிமன்றம் நோட்டீஸ்.

அடையாறில் இருந்த மன்னர் குடும்பத்திற்கு சொந்தமான  சொத்துகளின் ஒரு பகுதியை  சிங்கார வேலன் என்பவர் வாங்கியுள்ளார்.

தனது நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் வேறு நபருக்கு விற்றதாக சிங்காரவேலன் போலீசில்  புகார் - வழக்கு.

வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம்,மன்னர் குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு நோட்டீஸ்.

* சென்னை தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஆலோசனை.

அமைச்சர்கள்,மண்டல மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பு -அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை தொடர்ந்து ஆலோசனை.

* இந்தோனேசியாவில் காணாமல் போன பயணிகளின் விமான பாகங்கள் கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் காணாமல் போனதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில், ஜகார்த்தா விரிகுடாவில் விமானத்தின் பாகங்களை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages