அதிமுக பொதுக்குழு இபிஎஸ்-ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
செயற்குழு கூட்டம் முடிந்தவுடன் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
அதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
இபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையில் தேர்தல் வியூகங்கள் குறித்து முடிவெடுக்கப்படுகிறது.
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டங்கள்.
பொதுக்குழு கூட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
அதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டுள்ள வானகரம்.
கூட்டணி, தொகுதிப் பங்கீடு தொடர்பாக பொதுக்குழுவில் விவாதிக்கப்பட வாய்ப்பு.
அதிமுக வழிகாட்டுதல் குழுவுக்கு பொதுக்குழுவின் ஒப்புதல் பெறப்படும் என தகவல்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்:
முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏகமனதாக ஏற்று தீர்மானம் நிறைவேற்றம்.
ஜெயலலிதா நினைவிடத்தை உலக புகழ் பெற்றதாக உருவாக்கும் அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.
கூட்டணி குறித்து முடிவெடுக்க ஓபிஎஸ் - ஈபிஎஸ்க்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம்.
கொரோனா தடுப்பூசி இலவசம் என்று அறிவித்த முதலமைச்சர், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.
அரசு பணிகளில் 20% இட ஒதுக்கீட்டை முறைப்படுத்திய தமிழக அரசு நன்றி தெரிவித்து தீர்மானம்.
தமிழக அரசை விமர்சித்து வரும் ஸ்டாலிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
தீய சக்திகள் தலைதூக்குவதை முறியடித்து, ஒரே குடும்பத்தின் ஏகபோக, வாரிசு அரசியலை வீழ்த்தி உண்மையான ஜனநாயகம் தழைக்க உழைப்போம்.
உலக முதலீட்டாளர்களை பெருமளவில் ஈர்த்து, வேலை வாய்ப்பை அதிகரித்த தமிழக அரசுக்கு பாராட்டு.
புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம் அளித்த தமிழக அரசுக்கு பாராட்டு.
மாகாண கவுன்சில் முறை ரத்து செய்யப்படுவதை தடுக்க, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி தீர்மானம்.
நகர்புற வீட்டுவசதி திட்டத்தில் தமிழகத்தை இணைத்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி.
டிஜிட்டல் இந்தியா விருது பெற்ற தமிழக அரசுக்கு பாராட்டு.
தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் திறக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு.
தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை; அவர்கள் அதிமுக அல்லது திமுக முதுகில் எறிதான் பயணம் செய்ய முடியும்- அதிமுக பொதுக்குழுவில் கே.பி.முனுசாமி பேச்சு.
தேர்தலில் திமுக -அதிமுக இடையேதான் நேரடி போட்டி - அதிமுக பொதுக்குழுவில் கே.பி.முனுசாமி பேச்சு.
ஜனநாயக அரசியலுக்கும், வாரிசு அரசியலுக்கும் தான் போட்டி - கே.பி.முனுசாமி.
அதிமுகவில் ஸ்லீப்பர் செல் என்பது இனிமேல் இல்லை; யார் வெளியே வந்தாலும், அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது - பொதுக்குழுவில் கே.பி.முனுசாமி பேச்சு.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு:
இனிவரும் காலங்களில் சிறப்பாக பணியாற்ற உறுதி ஏற்போம்.
ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றினால் தான் வெற்றியை அடைய முடியும்.
உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறி அதிமுகவை வீழ்த்த முடியாது.
ஏப்ரல்,மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு.
திட்டம் போட்டு தேர்தலை சந்தித்தால் வெற்றி உறுதி - முதலமைச்சர்.
ஏப்ரல், மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு.
திமுக முன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீது ஊழல் வழக்குகள் உள்ளன.
ஊழல் குற்றச்சாட்டு குறித்து ஸ்டாலினுடன் நேரடியாக விவாதிக்க தயார் - இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி.
என்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்த கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நன்றி.
அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமை மிக்க தலைவர் நான் இல்லை- பழனிசாமி.
4 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை கொடுத்ததாக நான் நம்புகிறேன்.
நான் இரவு, பகல் பாராமல் உழைக்க தயாராக உள்ளேன்;
சட்டமன்ற தேர்தலில் மிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் - அதிமுக பொதுக்குழுவில் முதல்வர் பழனிசாமி பேச்சு
அதிமுக பொதுக்குழு, செயற்குழு
ஆலோசனை கூட்டம் - பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உரை.
ஜெயலலிதாவின் பல திட்டங்கள் மூலம் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்.
மக்களின் ஆதரவை அதிமுகவை நோக்கி திருப்ப வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்.
சட்டசபையில் அதிமுகவிற்கு எதிர்கட்சிகளே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.
அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருப்பதே பெருமை.
சட்டமன்ற தேர்தலுக்காக ஓடி, ஓடி உழைக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது - பன்னீர்செல்வம்.
இங்கு யார், யாருக்கும் அடிமை இல்லை; யாரும், யாரையும் கட்டுப்படுத்த முடியாது.
No comments:
Post a Comment