அக்னிப்புரட்சி இன்றைய (11.01.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் விட்டர் ரூ.86.96 க்கு விற்பனை; டீசல் லிட்டர் ரூ.79.72 க்கு விற்பனை.
* அரசியலுக்கு வரமாட்டேன்; என்னை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் - நடிகர் ரஜினிகாந்த்.
அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன்!.
நான் அரசியலுக்கு வர வேண்டுமென யாரும் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்குள்ளாக்க வேண்டாம் - ரஜினிகாந்த் அறிக்கை.
* சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ.37,296க்கு விற்பனை. ஒரு கிராம் ஆபரணத் தங்கம், ரூ.4662-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
* தமிழகம் முழுவதும் ஒன்பது மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-வானிலை மையம்
தென் தமிழகமான தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
ராமநாதபுரம்,விருதுநகர்,நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு.
அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை, திருச்சி, திருவாரூரில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும்- வானிலை மையம்.
* மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி:
விவசாயிகள் போராடிவரும் நிலையில் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்காதது ஏமாற்றம் தருகிறது - தலைமை நீதிபதி.
விவசாயிகளுக்காக வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கலாமா? -மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி.
வேளாண் திருத்த சட்டங்களை நிறுத்தி வைக்க முடியுமா என சொல்லுங்கள்; இல்லையேல் நாங்கள் நிறுத்தி வைக்கிறோம்- உச்சநீதிமன்றம் காட்டம்.
* வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட தடை இல்லை:
விவசாயிகள் தொடர்ந்து போராடலாம் -உச்சநீதிமன்றம் அனுமதி.
போராட்டக்களத்தில் யாரும் ரத்தம் சிந்தக் கூடாது. போராட்டத்தில் ஏதாவது தவறு நேர்ந்தால் அனைவரும் பொறுப்பாக வேண்டும்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் கடும் குளிரில் வாடுகின்றனர்.
விவசாயிகள் விவகாரத்தில் மத்திய அரசு கையாளும் முறையால் ஏமாற்றம்-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே அமர்வு கருத்து.
மத்திய அரசு விவசாயிகள் இடையே என்ன பேச்சுவார்த்தை நடக்கிறது- நீதிபதிகள் கேள்வி.
சுமுகத்தீர்வு ஏற்படும் வரையில், சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என உறுதி அளிக்க முடியுமா?
* ஆஸி.,க்கு எதிரான 3வது டெஸ்ட்: டிரா செய்தது இந்தியா.
சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை இந்திய அணி போராடி டிரா செய்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
* விவசாயிகளின் போராட்டத்துக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையில் பேச்சுவார்த்தை குழு"-மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு.
இந்த வழக்கில் ஒரு பகுதி உத்தரவு இன்றும், மறு பகுதி உத்தரவு நாளையும் பிறப்பிக்கப்படும்.
வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்டறிந்த பிறகு, உச்சநீதிமன்றம் உத்தரவு. ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பெயரை பரிந்துரைக்க மத்திய அரசுக்கு ஆணை.
வழக்கு தொடர்பான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
* ஓடும் காரில் தீ ஒருவர் உயிரிழப்பு:
கடலூர்: விருத்தாசலம் புறவழிச் சாலையில் மணவாநல்லூர் என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்த கார் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் காரை ஓட்டி வந்த நபர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை.
* நிபந்தனைகளுடன் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு:
பிளக்ஸ், பேனர்கள் வைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து உத்தரவு.
விழா கமிட்டியினர் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது - நீதிபதிகள்.
ஜல்லிக்கட்டு போட்டிகளை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடத்த வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் விருப்பம்.
* கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
* வன்னியர் இடஒதுக்கீடு குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது, கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவில்லை - பாமக நிறுவனர் இராமதாசு அய்யா.
பாமக நிறுவனர் இராமதாசு அவர்களை அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி சந்தித்த நிலையில் தகவல்.
* ஜன. 18ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் - தமிழக அரசு.
ஜன.13ஆம் தேதி வரை கடைசிநாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பை பெற அவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு.
* கர்நாடகாவில், கார் விபத்தில் மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக் படுகாயம்.
மத்திய அமைச்சரின் மனைவி மற்றும் பணியாளர் விபத்தில் உயிரிழப்பு.
காயமடைந்த மத்திய அமைச்சர், சிகிச்சைக்காக கோவா கொண்டு செல்லப்படுகிறார்.
* இணையத்தில் வெளியானது மாஸ்டர் படக் காட்சிகள்:
திரையரங்கிற்கு வருவதற்கு முன்பே இணையத்தில் வெளியானது மாஸ்டர் திரைப்பட காட்சிகள்.
இதனால் படக்குழுவினர் மற்றும் விஜயின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment