அக்னிப்புரட்சி இன்றைய (12.01.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (12.01.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (12.01.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் விட்டர் ரூ.86.96 க்கு விற்பனை; டீசல் லிட்டர் ரூ.79.72 க்கு விற்பனை.

* தமிழகத்திற்கான தடுப்பூசி இன்று காலை 11 மணிக்கு வருகின்றது.
5.56 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து வரவிருப்பதாக தகவல்.

புனேவில் இருந்து விமானம் மூலம் தடுப்பூசிகள் அனுப்பிவைப்பு.

* விஜய்யின் மாஸ்டர் பட காட்சிகளை இணையதளத்தில் லீக் செய்தது சோனி டிஜிட்டல் சினிமாஸ் நிறுவன ஊழியர் என கண்டுபிடிப்பு.

காட்சிகள் லீக் தொடர்பாக தனியார் நிறுவனம், ஊழியர் மீது புகாரளிக்க தயாரிப்பாளர் லலித்குமார் முடிவு.

* தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

தமிழகத்தில் ஜனவரி 19 முதல் 10, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும். ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படலாம்.

பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதி- தமிழக அரசு.

கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க கோரியதால் தமிழக அரசு முடிவு.

* ஆஸி.க்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து உடல்நிலை பாதிப்பு காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகல்.

ஏற்கெனவே ஜடேஜா, விஹாரி ஆகியோர் 4ஆவது டெஸ்டில் இருந்து விலகிய நிலையில் பும்ராவும் விலகல்.

* புனேவில் இருந்து அனுப்பப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து தமிழகம் வந்தது:

மத்திய தொகுப்பில் இருந்து முதற்கட்டமாக 5.56 லட்சம் தடுப்பு மருந்து டோஸ் ஒதுக்கீடு. வரும் 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்த தயாராகும் தமிழகம்.

கோவிஷீல்டு மருந்து 5.36 லட்சம் டோஸ்- கோவாக்சின் 20,000 டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்துகளை மாநில சுகாதாரத்துறை கிடங்குக்கு கொண்டு செல்ல திட்டம்.

* பெண்ணிடம் ஆபாச பேட்டி: யூடியூப் சேனல் குழுவினர் மூன்று பேர் கைது.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் இளம்பெண்களிடம் ஆபாசமாகப் பேசி பேட்டி எடுத்த யூடியூப் சேனல் குழுவினர் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பெண்ணிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்ததாக சென்னை டாக் யூடியூப் சேனலின் தொகுப்பாளர் 23 வயதுடைய அசென் பாட்ஷா, கேமராமேன் 24 வயதுடைய அஜய் பாபு மற்றும் சேனல் உரிமையாளர் தினேஷ் குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

* ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் ஒரு லட்சத்து 8 வடை மாலையில் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு எண்ணைய், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், பால், தயிர் மற்றும் சந்தன அபிஷேகம் செய்யப்பட்டது.

ஆஞ்சநேயர் அதிகாலை காவிபட்டு உடுத்தி ராஜ அலங்காரத்திலும், ஒரு லட்சத்து 8 வடை மாலை அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

* 2 நாள் பயணமாக வரும் 18ஆம் தேதி டெல்லி செல்கிறார் முதல்வர் பழனிசாமி.

பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்.

* ஜன.14 ஆம் தேதி அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண தமிழகம் வருகிறார் காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி.

பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா சென்னை வரும் அதே நாளில் ராகுல் காந்தியும் தமிழகம் வருகை.

* வாட்ஸ்-அப் பயன்படுத்துவோரின் விபரங்கள் முகநூல் நிறுவனங்களுக்கு பகிரப்படமாட்டாது என வாட்ஸ்-அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

தனிநபர் தகவல்கல் முகநூல் நிறுவனத்துக்கு தரப்பட மாட்டாது  என்று வாட்ஸ்-அப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

* கடலூர் மாவட்டத்தில் அடுத்த சில மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும்.

புதுச்சேரி, விழுப்புரத்தில் மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்.

* மின் கம்பியில் உரசிய பேருந்து 3 பேர் உயிரிழப்பு:

தஞ்சை மாவட்டம் வரகூர் அருகே சாலையோரம் இருந்த மின்கம்பி மீது தனியார் பேருந்து உரசியதில் 3 பேர் உயிரிழப்பு.

தனியார் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல்.

* நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணை முழு கொள்ளளவை எட்டியது அணையில் உள்ள ஏழு மதகுகளும் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

* வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை - உச்சநீதிமன்றம் உத்தரவு.

விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வுகாணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் குழு அமைக்கப்படும்.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக உள்ள நிறை, குறைகளை குழுவிடம் தெரிவிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்.

* பொங்கல் விடுமுறை நாட்களான 15, 16, 17ஆம் தேதிகளில், சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட தடை.

வண்டலூர், மாமல்லபுரம், சென்னை கிண்டி பூங்கா ஆகிய இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தமிழக அரசு தடை விதிப்பு.

சென்னை மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும், பொங்கல் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிப்பு.

ஏற்கனவே காணும் பொங்கலன்று மட்டும் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது 3 நாட்களுக்கு தடை விதிப்பு.

கொரோனா தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால், பொங்கல் விடுமுறை நாட்களான 15, 16, 17ஆம் தேதிகளில், சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages