தை பிறக்கிறது.... புதிய வழிகளும், புதிய மகிழ்ச்சியும் பிறக்கட்டும்!- மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் பொங்கல் வாழ்த்து - Agnipuratchi

தை பிறக்கிறது.... புதிய வழிகளும், புதிய மகிழ்ச்சியும் பிறக்கட்டும்!- மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் பொங்கல் வாழ்த்து

Share This

தை பிறக்கிறது.... புதிய வழிகளும்,
புதிய மகிழ்ச்சியும் பிறக்கட்டும்!- மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் பொங்கல் வாழ்த்து

தமிழர்களின் அறுவடைத் திருநாளான பொங்கல் விழாவையும், தமிழ் புத்தாண்டு நாளையும் கொண்டாடும்  உலககெங்கும் உள்ள தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருவிழாக்களின் திருவிழா என்பது பொங்கல் திருவிழா தான். தமிழர்களின் வாழ்வு, வாழ்வாதாரம், கலாச்சாரம், இயற்கை வழிபாடு, உழவுத் தொழிலுக்கு உதவிய இயற்கை தொடங்கி கால்நடைகள் வரை அனைத்துக்கும் நன்றி தெரிவிக்கும் பண்பாடு, வீரத்தை வெளிப்படுத்தும் ஜல்லிக்கட்டு, நண்பர்கள் முதல் உறவுகள் வரை அனைவரும் ஒன்று கூடல் உள்ளிட்ட அத்தனை அம்சங்களையும் கொண்டிருப்பது தான் தமிழர் திருநாளின் சிறப்பு ஆகும். பொதுவாகவே திருவிழாக்கள் கடந்த கால நிகழ்வுகளையும், வெற்றிகளையும் நினைவு கூறவும், தெய்வங்களை வணங்கவும் கொண்டாடப்படுவவை ஆகும். ஆனால், பொங்கல் திருநாள் மட்டும் இயற்கையை வணங்கவும், நன்றி தெரிவிக்கவும் கொண்டாடப்படுகிறது.

தைப்பொங்கலும், தமிழ்ப் புத்தாண்டும் இரட்டைத் திருநாள்கள் ஆகும். தைப்பொங்கலின் சிறப்பே  அறுவடைத் திருநாள் என்பது தான். அறுவடைத் திருநாள் என்பது பருவம் முழுவதும் நாம் கொடுத்த உழைப்புக்கான பயன்களைப் பெறும் நாள் ஆகும். ஒரு பருவத்திற்கான உழைப்புக்கு அறுவடைத் திருநாளில் பயன்கள் கிடைப்பதைப் போல, ஆண்டுக்கணக்காக நாம் அளித்த உழைப்புக்கான பயன்கள் இன்று பிறக்கும் தமிழ்ப்புத்தாண்டில் கிடைக்கும் என்பது உறுதி. அவற்றை அனுபவிக்க மகிழ்ச்சியுடன் தயாராவோம்.

பொங்கல் திருநாளில் பொங்கல் பானையில் புத்தரிசியும், பாலும் கலந்து பொங்குவதைப் போன்று, நமது வாழ்க்கையில் வளங்களும், நலங்களும், மகிழ்ச்சியும், வளர்ச்சியும் பொங்க தைத்திருநாள் வகை செய்யும். தைத் திருநாளில் நமது வாழ்வில் புதிய வழிகளும், புதிய மகிழ்ச்சிகளும் பிறக்கும்; அவை மலர்ச்சியை அளிக்கும் என்று கூறி அனைவருக்கும் மீண்டும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages