அக்னிப்புரட்சி இன்றைய (13.01.2021) முக்கிய செய்திகள்.
* போகிப் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்:
தமிழகத்தில் போகிப் பண்டிகையையொட்டி, அதிகாலையில் வீட்டில் இருந்த பயனற்ற பொருட்களை எரித்தும், மேளங்களை அடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப, பொங்கலுக்கு முந்தைய நாள் தமிழகமெங்கும் போகிப் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
* சென்னையில் பெட்ரோல் விலை விட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ.87.18 க்கு விற்பனை; டீசல் விலை லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து ரூ.79.95 க்கு விற்பனை.
* வெளியானது மாஸ்டர்!
ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்குகள் திருவிழா கோலம் பூண்டது!
தளபதி விஜய் ரசிகர்களின் ஆரவாரம் விண்ணை பிளக்க, எங்கும் உற்சாகம் கரை புரள கொராணோவை மறந்து இயல்பு நிலைக்கு திரும்பியது திரையரங்குகள்!
இதை பார்க்கும் போது கொரணாவை காரணம் காட்டி மெரினா பீச், சிறுவர் பூங்கா, வண்டலூர் மிருக காட்சி சாலைகளுக்கு மக்கள் செல்வதை தமிழக அரசு ஏன் தடுக்க வேண்டும்? என்ற கேள்வி எழுவது இயல்பே!
* சமத்துவ பொங்கல் விழா- தி.மு.க தலைவர் ஸ்டாலின் பங்கேற்பு.
மனைவி துர்காவுடன் பொங்கல் விழாவில் பங்கேற்றுள்ளார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.
குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார் துர்கா ஸ்டாலின்.
* பள்ளிக்கு வரும் மாணவர்கள், பெற்றோரிடம் கடிதம் பெற்று வரவேண்டும் - பள்ளிக் கல்வித்துறை.
தனியார் பள்ளிகள் திறப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும்.
பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
வகுப்பறைக்கு உள்ளே, வெளியே முகக்கவசம் அணிவது கட்டாயம்.
வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு.
ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் - பள்ளிக் கல்வித்துறை.
* தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்த ரூ.621 கோடி செலவாகும் என கணக்கீடு - தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தகவல்.
கொரோனா பயத்தால் பூத்துகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் கூடுதல் செலவு.
* சேலம், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும்"-அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
ஜல்லிக்கட்டு போட்டியை ஜன.15 முதல் ஜன.31 வரை நடத்த அனுமதி.
* யூ டியூப் சேனல்களுக்கு சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை-ஆபாசமான வீடியோக்களை நீக்கவும் உத்தரவு.
ஆபாசமான பேட்டிகளை ஒளிபரப்பினால் கடுமையான நடவடிக்கை - சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை.
ஆபாசமான பேட்டியை ஒளிபரப்பியதாக யூ டியூப் சேனல் ஒன்றின் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அதிரடி.
* தஞ்சாவூர் பேருந்து விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்-முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.
பேருந்து விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000.
லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 வழங்க முதலமைச்சர் உத்தரவு.
* சென்னை கோயம்பேடு சந்தையில் கரும்பு மற்றும் மஞ்சள் குலை விற்பனை விறுவிறுப்பு!
நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் கரும்பு மற்றும் மஞ்சள் குலை விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டைவிட, இந்தாண்டு கரும்பு வரத்து குறைந்துள்ளதால் 20 கரும்புகள் கொண்ட பண்ருட்டி கரும்பு ஒரு கட்டு 400 ரூபாய்க்கும், மதுரை மேலூர் கரும்பு 600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
மேலும் மஞ்சள் குலை ஒரு கட்டு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சராசரியாக 1000 லாரிகள் கரும்பு வரும் நிலையில் தற்போது 300 லாரிகளில் மட்டுமே கரும்பு வந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
* 28 நாளைக்கு மது அருந்தக்கூடாது!
தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்கள் 2வது டோஸ் போடும் வரை மது அருந்தக் கூடாது - அமைச்சர் விஜயபாஸ்கர்!
* கர்நாடக மாநிலத்தில் ராஜநாகத்தைப் பிடிக்கும்போது, தன்னை கடிக்க வந்த பாம்பிடம் இருந்து நூலிழையில் ஒருவர் உயிர் தப்பிய வீடியோ வெளியாகி உள்ளது.
சிவ்மோகா என்ற இடத்தில் வனப்பகுதியில் மரத்தின் கீழ் பதுங்கியிருந்த ராஜநாகத்தை, பாம்பு பிடிப்பவர் பிடிக்க முயற்சி செய்தார். அப்போது அவரின் உதவியாளர் பாம்பின் வாலைப் பிடித்து தூக்கவே, சீறிய பாம்பு அந்த நபரைக் கடிக்க முயன்றது.
அதிலிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிய அந்த நபரை மீண்டும் பாம்பு கடிக்க எத்தனிக்கவே, 2ம் முறையாகவும் அந்த நபர் உயிர் தப்பினார்.
* Kasi Theatre in Chennai has been booked under Sec 188 , 269 and fined ₹5000 for allowing more than 50% occupancy for MasterFilm!
கொராணோ கட்டுபாடுகளை காற்றில் பறக்க விட்ட காசி திரையரங்கம்!
* டொனால்ட் ட்ரம்ப் பதவி நீக்கம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது. விவாதத்துக்கு பிறகு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறும்.
No comments:
Post a Comment