கோயம்பேட்டில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல பயணிகள் ஏராளமானோர் பேருந்துக்காக பல மணி நேரம் காத்திருந்தனர்!
தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடப்படும் நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு குடும்பத்தினரோடு கொண்டாடுவதற்காக நேற்று மாலை முதல் புறப்பட்டனர். போதிய பேருந்துகள் இல்லாததால் பல மணி நேரம் காத்திருப்பதாக புகார் தெரிவித்தனர்.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் உள்ளவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதற்காக சென்னையில் 5 முக்கிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டதாகக் பயணிகள் கூறினர். போதிய பேருந்துகள் இல்லாமல் விடிய விடிய காத்திருந்ததாக தெரிவித்தனர். அதிகாரிகளிடம் முறையிட்டதை தொடர்ந்து கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment