அக்னிப்புரட்சி இன்றைய (16.01.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (16.01.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (16.01.2021)
முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் விட்டர் ரூ.87.40 க்கு விற்பனை; டீசல் லிட்டர் ரூ.80.19 க்கு விற்பனை.

* நாடு முழுக்க இன்று தொடங்குகிறது கொரோனா தடுப்பூசி போடும் பணி - டெல்லியில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.

இந்தியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி தரப்பில் நடராஜன், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகமது சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினார்.

* அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடக்கம்:

தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உடல்நலக் குறைவால் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதி!

* தமிழ்நாட்டில், கொரோனா தொற்று பரவல், வெகுவேகமாக குறைந்து வருகிறது.

புதிதாக, 621 பேருக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. 805 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், சென்னை உள்பட 3 மாவட்டங்களில் மட்டும் 5 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

சென்னையில் ஒரே நாளில் 180 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 18 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவாகியுள்ளது.

பெரம்பலூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி ஆக, அரியலூர், கொரோனா இல்லாதமாவட்டமாக மாறி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

* தேர்தல் செலவிற்கு ₹500 கோடியை ஒதுக்கி வைத்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர்

மனைவியை தேர்தலில் நிற்க வைக்கத் திட்டம். தில்லியிலிருந்து வெளியாகும் Independent ஆங்கில இதழ் திகைப்பூட்டும் கட்டுரை

* நாடு முழுவதும் 3000 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

சரியான நேரத்தில் நமக்கு கொரோனா தடுப்பூசி கிடைத்திருக்கிறது.

தடுப்பூசியை உருவாக்கியிருப்பது இந்தியாவின் அறிவாற்றலை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது
-பிரதமர் மோடி.

* தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி மதுரையில் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் முதல் தடுப்பூசி
தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர் செந்திலுக்கு செலுத்தப்பட்டது.

* கொரோனா தடுப்பூசி பிரதமரின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி - முதலமைச்சர் பழனிசாமி

தடுப்பூசி போட்ட 28 நாட்களுக்கு பிறகு 2வது டோஸை எடுத்துக்கொள்ள வேண்டும். மாநில முழுவதும் முதற்கட்ட பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்.

கொரோனா தடுப்பூசியை நானும் போட்டுக்கொள்வேன். மக்கள் அனைவரும் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

* குருமூர்த்தி தரம் தாழ்ந்து போனது வருத்தமளிக்கிறது
-டிடிவி தினகரன்.

கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது? என்பதையெல்லாம்  முடிவு செய்ய வேண்டியது தமிழக மக்கள்தான்.

கங்கை புத்திரன் பீஷ்மராகவே பாவித்துக்கொள்ளும் குருமூர்த்தி போன்ற மனநிலை கொண்டவர்கள் அல்ல

அடுத்தவர்கள் விமர்சிக்கும் அளவுக்கு துக்ளக் ஆசிரியர் தரம் தாழ்ந்து போனது வருத்தமளிக்கிறது.

சோ பெயருக்கே களங்கம் ஏற்படுத்தும் வகையில் குருமூர்த்தியின் வார்த்தைகள் இருக்கின்றன - டிடிவி தினகரன்.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி : 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் எடுத்துள்ளது.

மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்களுக்கு ஆட்டமிழப்பு.

* தேனி : வைகை அணையிலிருந்து 58 கால்வாய் பாசனத்திற்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் தண்ணீர் திறந்துள்ளார்.

வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டிய நிலையில் மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

* தடுப்பூசி போடுவது முதல் நாள் என்பதால் சில சிக்கல் இருந்தது.

மத்திய சுகாதார அமைச்சருடன் காணொலி மூலம் ஆலோசனை நடைபெறும்.

தமிழகத்தில் 10 பிரபல மருத்துவர்கள், தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

நாளையில் இருந்து முழு வீச்சில் தடுப்பூசி பணிகள் நடைபெறும்.

தேவைப்பட்டால் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages