த.மா.கா மூத்த துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்- பாமக தலைவர் ஜி.கே.மணி இரங்கல். - Agnipuratchi

த.மா.கா மூத்த துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்- பாமக தலைவர் ஜி.கே.மணி இரங்கல்.

Share This

த.மா.கா மூத்த துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்- பாமக தலைவர் ஜி.கே.மணி இரங்கல்.                      

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான பி.எஸ்.ஞானதேசிகன் இறப்புச் செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அரசியலைக் கடந்து மருத்துவர் அய்யா அவர்கள்மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தவர். எனது நெருங்கிய நண்பர். நாங்கள் அழைத்தபோ தெல்லாம் எங்களுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர். பல நிகழ்ச்சிகளில் சந்திக்கின்ற நேரங்களிலும் அடிக்கடி தொலைபேசியிலும் மிகுந்த பாசத்துடன் பேசுபவர். அரசியல் பொது வாழ்வில் தான் ஏற்றுக்கொண்ட தலைமைக்கு மிக மிக விசுவாசமாகவும் உண்மையாகவும் இருந்தவர்.      
       
அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். அவரை இழந்து மீளாத் துயரில் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், த.மா.காவினர், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் M.P உள்ளிட்ட அனைவருக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். த.மா.கா தலைவர் திரு ஜி.கே.வாசன் அவர்களிடம் கைபேசியில் தொடர்புகொண்டு துக்கம் விசாரித்து குடும்பத்தினர்க்கு தெரிவித்தேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages