அக்னிப்புரட்சி இன்றைய (17.01.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (17.01.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (17.01.2021) முக்கிய செய்திகள்.

* பெட்ரோல்-டீசல் விலை:
சென்னையில் பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் விட்டர் ரூ.87.40 க்கு விற்பனை; டீசல் லிட்டர் ரூ.80.19 க்கு விற்பனை.

* புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ. சங்கர் (வயது 70) மாரடைப்பால் காலமானார்.

சங்கர் மறைவால் புதுச்சேரி சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 3லிருந்து 2ஆக குறைவு .

* எம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாள் இன்று கொண்டாட்டம்:

அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை.

முதலமைச்சர், துணை முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை.

பாரதரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் - பிரதமர் மோடி.

எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது, வறுமையை ஒழிக்கவும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பல முயற்சிகளைத் தொடங்கினார் - பிரதமர் மோடி தமிழில் ட்வீட்.

* தெலுங்கானா ஆளுநர் தமிழிசை
சௌந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு:

தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்.

பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகே தடுப்பூசிக்கு அனுமதி.

தடுப்பூசியின் அவசியத்தை உணர வேண்டும்.

பல நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசிகளை வழங்குகிறது.

தடுப்பூசிகளும் பாதுகாப்பானது தான் என்பதை உறுதியாக கூறுகிறேன்.

தடுப்பூசி தயார் செய்யும் இடத்திற்கு நான் நேரில் சென்று பார்த்துள்ளேன் - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

சிட்னி டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியை விட 33 ரக்னள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி உள்ளது.

இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட ஷர்துல் தாக்கூர் 67 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 62 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

* தமிழகத்தில் தவறான பரப்புரை செய்தாலும் அதிமுக எதிர்கட்சியாக கூட வராது- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

திமுக 200 தொகுதி அல்ல, 234 தொகுதியிலும் வெல்லும் நிலை உள்ளது - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

" 10, 12ம் வகுப்பு பாடத்திட்டம் 40 விழுக்காடு குறைப்பு:

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாட திட்டங்கள் குறைப்பு - 40 விழுக்காடு அளவிற்கு பாட திட்டங்கள் குறைப்பு.

நாளை மறுநாள் 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பாடத்திட்டம் குறைப்பு- பள்ளிக் கல்வித் துறை தகவல்.

* ரஜினி மக்கள் மன்றத்தின் 4 மாவட்ட செயலாளர்கள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர்.

*;குரூப்- 1 தேர்வு வினா-விடை தவறு குறித்து நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது;

தவறுகள் இருந்தால் சரிசெய்யப்பட்டு பிப்ரவரி முதல் வாரத்திற்குள் முடிவுகள் வெளியிடப்படும் -டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் தகவல்.

* கமலுக்கு அறுவை சிகிச்சை!
காலில் ஒரு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் சில நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது;

சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் என் பணிகளைப் புதிய விசையுடன் தொடர்வேன்! - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages