அக்னிப்புரட்சி இன்றைய (18.01.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (18.01.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (18.01.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் விலை விட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து ரூ.87.63 க்கு விற்பனை; டீசல் விலை லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ரூ.80.43 க்கு விற்பனை.

* தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத்தொகுப்பு விடுபட்டவர்களுக்கு இன்று முதல் வழங்கப்படும்.

ஜன. 4 முதல் 13 வரை 2.02 கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் விடுபட்டவர்களுக்கு இன்று முதல் வழங்கப்படும்.

* முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர் மோடியை அவர் நாளை காலை சந்தித்துப் பேசுகிறார்.

இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டுக்கு தேவையான பல்வேறு திட்டங்கள், நிதியுதவி தொடர்பான கோரிக்கை மனுவை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிவர் புயல், புரெவி புயல் மற்றும் கடந்த வாரம் பெய்த கனமழையினால் ஏற்பட்ட சேதங்களுக்காக நிவாரண உதவி கோர இருப்பதாகக் கூறப்படுகிறது.

* இன்று இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசுகிறார்.

அமித்ஷாவுடனான சந்திப்பு, கூட்டணி குறித்து ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையை தொடங்குவதாக அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க முதலமைச்சர் கோரிக்கை விடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

* தமிழகத்தில் புக்கிங் செய்த 30 நிமிடத்தில் காஸ் சிலிண்டர் வழங்கப்படும்.

பிப்ரவரி 1ம் தேதி முதல் தட்கல் முறையில் சிலிண்டர் டெலிவரி திட்டம்.

இந்தியன் ஆயில் நிறுவனம் இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவருகிறது.

* "தினமலர்" இதழ் பற்றி திமுக நாளேடான முரசொலி கடும் விமர்சனம்

நம் இனத்தை காக்க இவர் வரமாட்டாரா ? அவர் வரமாட்டாரா ? என்று ஏங்கித் தவித்த மலட்டு மூளைகள், இப்போது சாக்கடைத் தண்ணீரைப் பன்னீராக்கி தெளிக்கவும், அதையே கலக்கிக் குடிக்கும் முடிவுக்கும் வந்துவிட்ட ஜடங்கள் இவை எனவும் கடும் காட்டம்

* வரும் தேர்தலில் புதுச்சேரியில் திமுக தலைமையில்தான் கூட்டணி என திமுகவினர் பேசிவரும் நிலையில், காங்கிரஸ் தலைமையிலேயே அங்கு கூட்டணி தொடரும் தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தல் பார்வையாளராக காங்கிரஸ் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வீரப்ப மொய்லி கருத்து

* 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் சீருடை, பழைய பஸ் பாஸ் மூலம் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.

10, 12ஆம் வகுப்புகளுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்.

* ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்:

மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் இணையலாம் - ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அறிக்கை.

எந்த கட்சியில் இணைந்தாலும், ரஜினி ரசிகர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற இந்திய அணிக்கு 328 ரன்கள் இலக்கு.

பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 294 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியா அணி சார்பில் சிராஜ் 5 விக்கெட்களையும், தாக்கூர் 4 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

* சென்னையில் ஜன.21-ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:

தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 21ஆம் தேதி நடைபெறுகிறது- தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.

ஸ்டாலின் தலைமையில் அண்ணா
அறிவாலயத்தில் 21ஆம் தேதி ஆலோசனை. தி.மு.க மாவட்ட செயலாளர்கள் தவறாமல் பங்கேற்க அழைப்பு.

* வடகிழக்குப் பருவமழை நாளையுடன் விடைபெறுகிறது - வானிலை மையம்

வடகிழக்குப் பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

அக்டோபரில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை ஜன.19ஆம் தேதியுடன் விடை பெறுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் - வானிலை ஆய்வு மையம்.

20, 21 ஆகிய தேதிகளில் தென்தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.

* 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி:

பிரதமர் மோடியை நாளை காலை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.

நதிநீர் இணைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரி பிரதமரிடம் வலியுறுத்த உள்ளதாக தகவல். அரசியல் குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு.

* அதிமுகவில் புதிய நிர்வாகிகளை நியமிக்க தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்.

அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தும் வரை, புதிய நிர்வாகிகள் நியமனத்துக்கு தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி.

* புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் - சட்டப் பேரவையில் தீர்மானம்.

சிறப்பு சட்டமன்ற கூட்டம் இன்று கூடிய நிலையில் தீர்மானம் நிறைவேற்றம்.

* புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் திமுக போட்டியிடும், 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறவில்லை என்றால் இந்த மேடையிலேயே தற்கொலை செய்வேன் - ஜெகத்ரட்சகன்.

புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறவில்லை எனில் மேடையிலே தற்கொலை செய்து கொள்வேன் என அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் ஜகத்ரட்சகன் ஆவேசமாகக் கூறியுள்ளார்.

கடந்த தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்த நிலையில், கடந்த 6 மாதங்களாக, இரு கட்சியினர் இடையே இணக்கமற்ற போக்கு நிலவுகிறது.

இந்நிலையில், திமுக தலைமையில் புதுச்சேரியில் ஆட்சி அமைப்போம் என்ற முழக்கத்தோடு, அக்கட்சியினரின் செயல்வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி திமுக மேலிட பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், காங்கிரஸ் ஆட்சி குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

* சசிகலா வருகை- அமமுக விற்கு மறைமுக அழைப்பு.

ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் இயக்கத்தில் அண்ணன் தம்பி பிரச்சனை இருந்தால் பேசித் தீர்ப்போம் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பேச்சு

* மருத்துவ படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் 20-ஆம் தேதி முதல் கல்லூரிகளுக்கு வரவேண்டும்.

அனைத்து மாணவர்களும் மருத்துவ
பரிசோதனைக்கு பிறகே கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்" -மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு, இயக்குனரகம் உத்தரவு.

* நீட் மதிப்பெண் சான்றிதழ் மோசடியில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கைது:

கடந்த ஒன்றாம் தேதி பெங்களூரில் பதுங்கி இருந்த மாணவியின் தந்தையை போலீசார் கைது செய்திருந்தனர்.

மாணவியின் தந்தையை 5 நாள் விசாரித்த போலீசார் சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

* தூர்தர்ஷனில் சமஸ்கிருத செய்தி அறிக்கை ஒளிபரப்ப தடை கோரி வழக்கு:

மனுதாரருக்கு சமஸ்கிருத செய்தி அறிக்கை தேவையில்லை எனில் தொலைக்காட்சியை அணைத்து வைத்து கொள்ளலாம்.

அல்லது வேறு சேனலை மாற்றி கொள்ளலாம், இதைவிட முக்கிய பிரச்சினைகள் பல உள்ளன - சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து.

* புதுச்சேரி சட்டப்பேரவையில் இரண்டு தீர்மானங்கள்  நிறைவேற்றம்!

மாநில தகுதி  வேண்டும், வேளாண்சட்டங்களை திரும்ப பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம்.

* வரும் 05.02.2021 அன்று சிறையில் இருந்து விடுதலை ஆகிறார் இளவரசி

வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக உள்ள நிலையில் ஒரு வாரம் கழித்து இளவரசியும் விடுதலையாகிறார்

சிறையில் உள்ள மற்றொரு குற்றவாளியான சுதாகரன் இன்னும் தண்டத் தொகை ரூ.10 கோடி செலுத்தாததால் விடுதலை ஆவதில் தாமதம்

* பத்ம விபூஷண் விருதை திருப்பியளிக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவலுக்கு இளையராஜா மறுப்பு

* டெல்லியில் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பேசுவதாக தகவல். தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம் குறித்தும் இருவரும் ஆலோசிப்பதாக தகவல்.

* நீதிபதிகள் நியமனத்தை விமர்சித்த புகாரில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அரசு தலைமை வழக்கறிஞர் அனுமதி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages