அக்னிப்புரட்சி இன்றைய (19.01.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (19.01.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (19.01.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் விலை விட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ.87.85 க்கு விற்பனை; டீசல் விலை லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ரூ.80.67 க்கு விற்பனை.

* தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: ஏபிபி கருத்து கணிப்பு!

திமுக அணிக்கு 158 முதல் 166 இடங்கள் கிடைக்கும்; அதிமுக அணிக்கு 60 முதல் 68 இடங்கள் கிடைக்க வாய்ப்பு!

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 0 முதல் 4 ; அமமுகவுக்கு 2 முதல் 6 இடங்கள் கிடைக்கும்- ஏபிபி!

இதர கட்சிகளுக்கு 0 முதல் 4 இடங்கள் கிடைக்க வாய்ப்பு- ஏபிபி கருத்து கணிப்பு!

* தமிழகம் முழுவதும் 10 ,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு.

300 நாட்கள் இடைவெளிக்கு பின் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன.

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறுகின்றன.

முகக் கவசம் அணிந்த மாணவர்கள், சமூக இடைவெளியுடன் உள்ளே அனுமதி.

* மருத்துவர் சாந்தாவின் இறுதி சடங்குகளின் போது காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

* இராமச்சந்திரா மருத்துவமனையில் கமல்ஹாசனுக்கு காலில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்றது.

அறுவை சிகிச்சைக்கு பின் கமல் நலமுடன் உள்ளதாகவும், சில நாட்களில் வீடு திரும்புவார் என குடும்பத்தினர் தகவல்.

* அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டம், பேரணிகளுக்கு தடை விதிக்க முடியாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை:

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு போதிய கவனம் செலுத்தி, நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.

எனவே பொதுக்கூட்டங்களுக்கு தடைவிதிப்பது குறித்து உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது - உயர்நீதிமன்றம்.

* முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 22ம் தேதி அமைச்சர்களுடன் ஆலோசனை:

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்க
உள்ளதாக தகவல்.

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு, சட்டமன்ற பொதுத்தேர்தல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் பேச வாய்ப்பு.

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உடனான சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை.

தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் விவசாய நிவாரணம் தொடர்பாகவே பேசினேன்.

சசிகலா வெளியே வந்தாலும், அதிமுக உடன் இணைய 100% வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

நிறைவேற்றப்பட்டுள்ள  திட்டங்களை திறந்து வைக்க பிரதமருக்கு அழைப்பு விடுத்தோம். அழைப்பை ஏற்றுக் கொண்டு தமிழகம் வருவதாக பிரதமர் தெரிவித்தார் - முதல்வர் பழனிசாமி.

* புதுவையில் ஆளுநர் கிரண்பேடியின் ஒப்புதலுக்காக நிலுவையிலுள்ள 15-க்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தி, புதுவை சட்டசபையில் கடந்த 10 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய அமைச்சர் கந்தசாமி, இன்று ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

* விடை பெற்றது வடகிழக்கு பருவமழை! தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களில் இருந்து வட கிழக்கு பருவமழை இன்று விடைபெற்றது!

* சசிகலாவிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே பிரதமர் மோடி, அமித்ஷாவை முதல்வர் பழனிசாமி சந்தித்துள்ளார் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி, விவசாயிகள் பிரச்னையை தீர்க்க டில்லிக்கு செல்லவில்லை.

வரும் 27 ம் தேதி சசிகலா வெளியே வரும் போது அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும். இதனால், ஆட்சியை தக்க வைக்கவே முதல்வர் டில்லி சென்றுள்ளார்.

சசிகலாவிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே பிரதமர் மோடி, அமித்ஷாவை முதல்வர் பழனிசாமி சந்தித்துள்ளார்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு தேவையான அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும்- மு.க.ஸ்டாலின்.

* நாடாளுமன்ற உணவகங்களில் எம்.பி.க்களுக்கு மானிய விலையில் உணவு வழங்குவது இனி நிறுத்தம்.

எம்.பி.க்கள் மட்டுமன்றி நாடாளுமன்ற ஊழியர்களுக்கும் இனி இலவசமாக உணவு வழங்கப்படாது  -சபாநாயகர் ஓம் பிர்லா.

* பெங்களூரில், சென்னை சுங்கத்துறை அதிகாரியிடம் இருந்து ரூ.74 லட்சம் பணம் பறிமுதல்.

அதிகாரிகளின் சோதனையை பார்த்து, விமான நிலைய கழிவறையில் 10 லட்ச ரூபாயை வீசியெறிந்து, தப்பிக்க முயற்சி.

தப்ப முயன்ற சுங்க அதிகாரி மற்றும் அவரது மனைவியிடம் விமான நிலைய போலீசார் விசாரணை.

* வரும் 27 ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படுகிறது. முதன்மை அமைச்சர் நரேந்திர மோதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில் முதல்வர் தலைமையேற்று துணை முதல்வர் முன்னிலையில் திறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* அமைச்சர் காமராஜ்க்கு தீவிர சிகிச்சை; கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.

* குட்கா வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை.

முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா, அரசு ஊழியர்கள் 7 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

குட்கா ஆலை உரிமையாளர் விக்னேஷ், அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

* ஜனவரி 27ம் தேதி பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆவது உறுதி - அலுவல்பூர்வ கடிதம் கிடைத்துவிட்டதாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்.

ஜனவரி 27-ம் தேதி காலை சசிகலா விடுதலை செய்யப்படுகிறார்.
பிப்ரவரி 5-ம் தேதி இளவரசி விடுதலையாவது உறுதியாகியுள்ளது -ராஜா செந்தூர்பாண்டியன்.

சுதாகரன் விடுதலை குறித்த எந்த விவரத்தையும் சிறைத்துறை நிர்வாகம் வழங்கவில்லை.

* அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்:

வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சித் தலைமை அறிவிப்பு.

* 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் மருத்துவர் சாந்தா அவர்களின் உடல் தகனம்

* இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை.

கோலி, ரோகித், மயங்க் அகர்வால், சுப்மான் கில், புஜாரா, ரகானே, ராகுல், ஹர்டிக் பாண்ட்யா, ரிஷப் பண்ட், சஹா, அஷ்வின்,குல்தீப், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, பும்ரா, சிராஜ், ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

* அமைச்சர் காமராஜ்-ன் உடல் நலம் குறித்து விசாரிக்க சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு முதல்வர் பழனிசாமி,  துணை முதல்வர் ஓ.பி.எஸ் வருகை.

அமைச்சருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages