அக்னிப்புரட்சி இன்றைய (21.01.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (21.01.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (21.01.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் லிட்டர் ரூ.87.85 க்கு விற்பனை; டீசல் லிட்டர் ரூ.80.67 க்கு விற்பனை.

* நிதி ஆயோக் வெளியிட்டுள்ள  India Innovation Index-2020 தரவிரிசையில் 3 வது இடத்திற்கு சென்ற தமிழ்நாடு

கடந்த ஆண்டு 2வது இடத்தை பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது

தமிழக மீனவர்கள் இருவரின் உடல்கள் இலங்கை கடல் பகுதியில் மீட்பு:

புதுக்கோட்டை கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடந்த 18ம் தேதி மீன்பிடிக்கச் சென்றபோது விசைப்படகு மீது இலங்கை கடற்படை படகு மோதியதில் கடலில் விழந்த 4 மீனவர்களில் 2 பேர் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டது.

* பெங்களூரில் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு:

சசிகலா உடல் நிலை சீராக உள்ளது.
சசிகலாவுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சசிகலாவுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிடி ஸ்கேன் மூலமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. சசிகலாவின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளது.

சசிகலாவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க விரும்புகிறோம்.

சசிகலா உடல்நிலையில் கவலைப்படும்படி எதுவும் இல்லை என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.

* ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிக் கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் வரலாற்று சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மும்பை வந்த நிலையில் மாலை சூடி வரவேற்பு அளித்துள்ளனர்.

கிரிக்கெட் போட்டியை முடித்துவிட்டு அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.37,528-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.40 அதிகரித்து ரூ.4,691-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.72.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.72,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* விசிக தனி சின்னத்தில்தான் போட்டி:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிடுவது உறுதி. உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட எங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை - திருமாவளவன்.

* “சசிகலா நலம் பெற வேண்டும்“

சசிகலா பூரண நலம் பெற வேண்டும் என்பதே மனிதாபிமானம் உள்ள அனைவரின் விருப்பம்.

அதிமுக கூட்டணியில் இழுபறி இல்லை., பாமக மற்றும் தேமுதிக, எங்களுடன் தான் கூட்டணியில் உள்ளன - ஜெயக்குமார்.

* 10-ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா:

ஆத்தூர் அருகே 10-ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* ராஜா முத்தையா கல்லூரி மூடல்:
கடலூர்: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி காலவரையின்றி மூடல்.

அரசு மருத்துவ கல்லூரிக்கு இணையான கட்டணம் கேட்டு 43 நாட்களாக போராட்டம் நடைபெறும் நிலையில் மூடல்.

மாலை 4 மணிக்குள் மாணவர்கள் விடுதிகளை விட்டு வெளியேற உத்தரவு.

* தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அரசு மருத்துவமனையில் அனுமதி.

* புதுச்சேரியில் மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு தந்தால் நீட் தேர்வின் தகுதி நீர்த்துப்போகும்.

10% இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு. புதுச்சேரி அரசின் சட்டம் குறித்து முடிவு செய்ய 6 வாரம் அவகாசம் வேண்டும்- மத்திய அரசு.

* கொரோனா உறுதியான மாணவருக்கு பள்ளியில் இருந்து பரவவில்லை;

கொரோனா பரிசோதனை கொடுத்த பிறகு சம்பந்தப்பட்ட மாணவர் பள்ளிக்கு வந்துள்ளார்- சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன்.

* ஆந்திராவில் வீடுவீடாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

13 மாவட்டங்களில் உள்ள கிராம பணியாளர்கள் மூலம் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க ஆந்திர அரசு திட்டம்.

* தடுப்பூசியை செலுத்தாமல் உடலின் மீது வைத்துப் பொய்யாகப் படம்பிடித்த அதிகாரிகள்.

கர்நாடகத்தின் தும்கூரில் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகப் பொய்யாகப் படம்பிடித்துக் கொண்ட மாவட்ட நலவாழ்வு அதிகாரி, செவிலியர் கல்லூரி முதல்வர் ஆகியோரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

* தும்கூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது.

அப்போது மாவட்ட நலவாழ்வு அதிகாரி நாகேந்திரப்பா, அரசு செவிலியர் கல்லூரி முதல்வர் ரஜனி ஆகியோர் உடலில் தடுப்பூசி போட்டுக்கொண்டது போல் படம் பிடித்தனர்.

ஊசியை உடலில் படும்படி வைத்துக் கொண்டு அதைக் குத்தாமல் பொய்யாகப் படம் பிடித்து வெளியிடப்பட்டதற்குச் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தடுப்பூசி போட்டுக்கொண்டதாகக் கூறும் படங்களும் வீடியோக்களும் மட்டுமே மருந்தின் செயல்திறனை மெய்ப்பிக்கும் சான்றாகி விடாது எனப் பலரும் தெரிவித்துள்ளனர்.

மக்களை ஏமாற்றிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

* மதுபானங்களுக்கு ரசீது வழங்க உத்தரவு:

மதுபான கடைகளில் விற்கப்படும் மதுபானங்களுக்கு உரிய ரசீது கொடுக்க வேண்டும்.

மதுபானங்களை, அதிக விலைக்கு விற்கும் விற்பனை பிரதிநிதிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

* பேரறிவாளன் விடுதலை தொடர்பாக 3 நாட்களில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா தகவல்.

* பெங்களூரு சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலியில் இருந்தபடி சசிகலா உற்சாகத்துடன் கையசைத்தார்.

சி.டி.ஸ்கேன் எடுக்க பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு சசிகலா அழைத்து செல்லப்பட்டார்.

* நிவர் புயல் பாதிப்பு; ரூ.26.5 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு.

மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.16 கோடியும், மாநில நிதியாக ரூ.10 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

* அடுத்த மாதம் கல்லூரிகள் திறப்பு?

தமிழகத்தில் முதலாமாண்டு மற்றும் 2-ம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் நேரடி வகுப்புகள் தொடங்க உயர்கல்வித்துறை திட்டம்.

மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தபிறகு விடுதிகளில் அனுமதிக்க பரிசீலனை.

* கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு, சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு.

தனது முதல் கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியாவில் முடித்து கொண்டு சொந்த கிராமத்திற்கு வருகை.

செண்டை மேளம் முழங்க, சாரட் வண்டியில் ஏறி, ஊர்வலம்.

* தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் 2ஆம் தேதி கூடுகிறது-சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன்
அறிவிப்பு.

ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கும்.

கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்யும் - சீனிவாசன்.

* ஜனவரி 30ஆம் தேதி மதுரை வருகிறார் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா:

234 தொகுதிகளின் அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்துகொள்ளும் கூட்டத்தில் பங்கேற்கிறார் ஜே.பி.நட்டா.

* 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்:

3 வேளாண் சட்டங்களையும் ஒன்றரை ஆண்டுக்கு நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு கூறியதை ஏற்க மறுப்பு.

டெல்லியில் திட்டமிட்டப்படி ஜனவரி 26ல் டிராக்டர் பேரணி நடைபெறும் - விவசாய சங்கங்கள் அறிவிப்பு.

நாளை மத்திய அரசுடன் நடைபெறும் 11ஆம் சுற்று பேச்சுவார்த்தையில் நிச்சயம் பங்கேற்போம் - விவசாய சங்கங்கள் அறிவிப்பு.

* சசிகலா உடல்நிலை சீராக உள்ளது-
மருத்துவமனை அறிக்கை வெளியீடு.

தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.

விக்டோரியா அரசு மருத்துவமனையில் தற்போது சசிகலா சிகிச்சை பெற்று வருகிறார்.

சசிகலா உடலில் சர்க்கரையின் அளவு சற்று அதிகமாக உள்ளது - மருத்துவர்கள்.

நுரையீரல் தொற்று மேலும் பரவாமல் தடுக்க சசிகலாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை.

* சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி.

விக்டோரியா அரசு மருத்துவமனையில் சசிகலாவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரானா தொற்று உறுதியானது.

காய்ச்சல், நுரையீரல் தொற்று இருந்ததால் சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

27ம் தேதி விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு.

* மீன் பிடிக்க சென்று உயிரிழந்த, புதுக்கோட்டையை சேர்ந்த 4 மீனவர் 
குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.

மீன் பிடிக்க சென்ற 4 மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதலால் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது.

தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இலங்கை கடற்படையின் செயலை கண்டிக்கிறேன்.

சம்பவம் குறித்து தூதரகம் மூலம் உரிய விசாரணை மேற்கொள்ள பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன் - முதல்வர்.

இலங்கை கடற்படை கப்பல் மோதி மீனவர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.

இதுபோன்று மீண்டும் நிகழாமல் இருப்பதை இலங்கை உறுதி செய்ய வேண்டும்.

இலங்கை வெளியுறவு அமைச்சரிடம் கண்டனத்தை பதிவு செய்தது இந்திய துணை தூதரகம்.

தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்களை இந்தியாவில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.

இந்தியாவில் பிரேத பரிசோதனை செய்தால் உண்மைத் தன்மை தெரியும்.

இலங்கை அரசுக்கு அந்நாட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages