அக்னிப்புரட்சி இன்றைய (22.01.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் விலை விட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ.88.07 க்கு விற்பனை; டீசல் விலை லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து ரூ.80.90 க்கு விற்பனை.
* சென்னை மாநகரில் கடும் பனி மூட்டம்! வாகன ஓட்டிகள் அவதி!
* இயேசு அழைக்கிறார் என்ற மத பிரச்சார கூட்டங்களை நடத்தி வரும் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் 3-வது நாளாக ஐ.டி சோதனை.
* கர்நாடகா: சக்திவாய்ந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழப்பு.
கர்நாடகா மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் பயங்கர சத்தத்துடன் வெடிபொருட்கள் வெடித்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.
டைனமைட் என்ற வெடிபொருளை ஏற்றி சென்ற வாகனம் வெடித்து சிதறி உள்ளது. நேற்று இரவு நிகழ்ந்த இந்த வெடி விபத்தால் 15 முதல் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு நில அதிர்வு உணரப்பட்டது.
* கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சசிகலா, தீவிர நுரையீரல் தொற்றால் பாதிப்பு - விக்டோரியா மருத்துவமனை.
தீவிர நுரையீரல் தொற்றால் அவருக்கு கடுமையான நிமோனியா காய்ச்சலும் உள்ளது.
சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது - மருத்துவமனை நிர்வாகம்.
* கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர்:
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயங்க வேண்டாம் -சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
* யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படாது - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.
கொரோனா தொற்று காரணமாக யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு எழுத மற்றொரு வாய்ப்பு அளிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய அரசு தகவல்.
* சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கு
கொரோனா பரிசோதனை:
சசிகலாவுக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து, கர்நாடகா சிறைத்துறை முடிவு. 2 பெண் கைதிகள், அதிகாரிகள் உள்பட 8 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
பரிசோதனை முடிவு வரும் வரை 8 பேரை தனிமைப்படுத்தவும் சிறைத்துறை திட்டம்.
* பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம்:
பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு மேலும் ஒரு வாரம் அவகாசம் - உச்சநீதிமன்றம்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு.
துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* துப்பாக்கி முனையில் 7 கோடி கொள்ளை.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை.
ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள முத்தூட் நிறுவனத்திற்குள் 5 பேர் துப்பாக்கிகளுடன் நுழைந்து கொள்ளை.
ஓசூர் முத்தூட் நிறுவனத்தில் இருந்து துப்பாக்கி முனையில் ரூ.7கோடி மதிப்பு தங்க நகைகள், பணம் கொள்ளை.
மருத்துவக் கல்வி கற்க வேண்டும் என்ற கிராமப்புற, நகர்ப்புற மாணவர்கள் மீது இருக்கும் வெறுப்புணர்வை மத்திய அரசு கைவிட வேண்டும்.
புதுச்சேரி மாணவர்களின் மருத்துவ கல்வி இடஒதுக்கீடு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்.
* குடியரசுத் தினத்தன்று கிராம சபை கூட்டங்களை நடத்துவது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை - தமிழக அரசு.
திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில்.
* இந்திய அணியின் 'கம்பேக்' வெற்றி நமக்கான வாழ்க்கைப் பாடம் - பிரதமர் மோடி:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய அணி பெற்ற வெற்றி இளைஞர்களுக்கான மிகப்பெரிய வாழ்க்கைப் பாடம் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியக் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்டில் படுதோல்வியடைந்த பின்னும் மீண்டெழுந்து டெஸ்ட் தொடரை வென்றது.
இந்நிலையில் அசாமின் தேஸ்பூர் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் காணொலியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அணி வென்றதை விளையாட்டாக மட்டும் பார்க்கக் கூடாது என்றும், அதை வாழ்க்கைப் பாடமாகக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நம் திறமையில் நம்பிக்கை கொள்வது, நேர்மறை எண்ணம் கொள்வது, கடினமான வெற்றியைப் பெற முயல்வது ஆகிய பாடங்களை இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
எதிலும் அச்சமின்றித் துணிந்து செயல்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
* உலகிலேயே மிகப்பெரிய அளவில் தடுப்பூசி போடும் பணி இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது.
2021-ம் ஆண்டு புதிய நம்பிக்கைகளுடன் தொடங்கியுள்ளது.
உலக நாடுகளுக்கும் இந்தியா தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது - பிரதமர்.
* ஜூன் மாதத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் தேர்வு.
சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு.
செயற்குழு கூட்டத்தின் தீர்மானம் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் விளக்கம்.
* மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம் ஜன.28ல் மக்கள் பார்வைக்கு திறப்பு:
வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி முதல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் மக்கள் பார்வைக்காக திறக்கப்படவுள்ளது- அமைச்சர் பாண்டியராஜன்.
* வேளாண் சட்டம் தொடர்பாக, விவசாயிகளுடனான 11வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி.
கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாமல், பேச்சுவார்த்தை நிறைவு. புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என விவசாய சங்கங்கள் மீண்டும் வலியுறுத்தல்.
* நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்; முதற்கட்டமாக 35 வேட்பாளர்கள் அறிவிப்பு.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி, நாம் தமிழர் மட்டுமே.
அடிப்படை மாற்றத்தையும், தூய அரசியலையுமே விரும்புகிறோம் - சீமான்.
* எமது மீனவர்கள் உயிரிழக்க காரணமான இலங்கை கடற்படையின் ஈவிரக்கமற்ற செயலை கண்டிக்கிறேன் - கமல்ஹாசன்.
பாரம்பரிய கடல் பகுதியில் எமது மீனவர்கள் நிம்மதியாக தொழில் செய்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - கமல்.
* தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு பனி மூட்டம் காணப்படும் - சென்னை வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு பனி மூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், இது கூறப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை நகரில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், காலை நேரத்தில் லேசான பனி மூட்டம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* சுங்கச் சாவடிகளில் உள்ளூர் மொழி பேசுவோரை நியமிக்க வேண்டும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் எழுதிய கடிதத்திற்கு உரிய பதில் இல்லாத "பதில் கடிதம்" அனுப்பிய நடுவண் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி
* சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்- மருத்துவ அறிக்கை
* நாட்டு மக்கள் எந்த தயக்கமும் இன்றி தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும்
சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்...
*ஊடக நிறுவனங்களின் செய்தி contents பயன்படுத்துவதற்கு பணம் வழங்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தால், ஆஸ்திரேலியாவில் Search Engine பயன்பாட்டை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என கூகுள் எச்சரித்துள்ளது.
💥பாரீஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா இணைத்துக் கொள்ளப்பட்டதாக UNFCCC அறிவிப்பு.
* ஜனவரி 26ஆம் தேதி திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம்.
நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்.
No comments:
Post a Comment