அக்னிப்புரட்சி இன்றைய (26.01.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் விலை விட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.88.60 க்கு விற்பனை; டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து ரூ.81.47 க்கு விற்பனை.
* தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அலுவலர்கள், உதவி அலுவலர்களை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு.
சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அலுவலர்களை நியமித்து அரசிதழில் வெளியானது.
* சென்னை: மெரினா கடற்கரை சாலையில் 72வது குடியரசு தின விழா தொடங்கியது.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடி ஏற்றினார்.
ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
* நாட்டின் 72-வது குடியரசு தினத்தையொட்டி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து:
குடியரசு தின விழாவில் பங்கேற்க ஆவலாக இருந்தேன், ஆனால் கொரோனா காரணமாக பங்கேற்க முடியவில்லை - போரிஸ் ஜான்சன்.
* தமிழக அரசின் வீரதீர செயலுக்கான 'அண்ணா பதக்கம்' ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஆசிரியை முல்லைக்கு வழங்கப்பட்டது
* கல்வான் பள்ளத்தாக்கில் சீன படையினருடன் நடைபெற்ற சண்டையின் போது வீரமரணம் அடைந்த கர்னல் சந்தோஷ் பாபுவிற்கு மகாவீர் சக்ரா விருது அறிவிப்பு
* திருப்பூர் மாவட்டம் முத்தூர் அரசு பள்ளிக்கு சென்ற பிளஸ்-2 மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று.
கொரோனா உறுதியான நிலையில் 2 மாணவர்கள், ஒரு மாணவி திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதி.
* டெல்லியை நோக்கி டிராக்டர்களில் படையெடுக்கும் விவசாயிகள்......
டெல்லியை நோக்கி படையெடுக்கும் டிராக்டர்கள்: பிரம்மாண்ட பேரணியை தொடங்கிய விவசாயிகள்.
* விவசாயிகள் - போலீசார் மோதல்!
டெல்லிக்குள் விவசாயிகளை அனுமதிக்க மறுத்த போலீசாருடன் தள்ளுமுள்ளு!
போலீசார் அமைத்த தடுப்புகளை ஆவேசமாக அகற்றிவிட்டு விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்தனர்!
* “டிராக்டர் பேரணியில் கண்ணீர் புகை குண்டு வீச்சு”
விவசாயிகள் டிராக்டர் பேரணியில் கண்ணீர் புகை குண்டு வீசிய டெல்லி காவல் துறை; விவசாயிகளுக்கும் போலீஸுக்கும் இடையே தள்ளுமுள்ளு!
* கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பொதுத்தேர்வில் மாற்றங்கள் இருக்கும்.
இந்தாண்டு பொதுத்தேர்வு எளிமையாகவே இருக்கும்.
பொதுத்தேர்வு மாற்றங்கள் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்கோட்டையன்.
* டெல்லி செங்கோட்டையில் ஏறி விவசாயிகள் போராட்டம்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தல்.
தடைகளை தாண்டி டெல்லி செங்கோட்டையை தொட்ட விவசாயிகள்.
* டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு;
போலீசார் சுட்டதால் ஒரு விவசாயி இறந்ததாக விவசாய சங்கங்கள் குற்றச்சாட்டு.
விவசாயிகள் குற்றச்சாட்டுக்கு, டெல்லி போலீசார் மறுப்பு.
விவசாயிகள் தடுப்புகளை தாண்டி அத்துமீறிய போது, டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்ததாக போலீசார் விளக்கம்.
* குடியரசு தினமான இன்று விவசாயிகள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சை மத்திய அரசு நடத்தி இருக்கிறது.
இந்த அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவிக்கின்றேன்.
பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதம் பிடித்து, விவசாயிகளை ஒடுக்க நினைத்தால் விபரீத முடிவே ஏற்படும் - வைகோ.
* விவசாயிகளை நேரடியாக அழைத்து பிரதமரே பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின்
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவசாயிகள் உணர வேண்டும்.
2 மாதங்களுக்கும் மேலாக அமைதி வழியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் மத்திய அரசு உதாசீனம் செய்து வருகின்றது.
மத்திய அரசின் பின்னடைவான அணுகுமுறையின் விளைவுதான், குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் நடந்த போராட்டக் காட்சிகள்.
வன்முறை தவிர்க்கப்பட வேண்டும், ஜனநாயக நெறிக்கு உட்பட்டு அமைதி வழியில் தீர்வு காண இருதரப்பினரும் முயற்சி செய்ய வேண்டும் -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
* புதுச்சேரியில் அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை ராஜினாமா செய்த நமச்சிவாயம் ஆதரவாளர்களுடன் டெல்லி புறப்பட்டு சென்றார்.
நாளை பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா, ஜே.பி. நட்டா ஆகியோரை நமச்சிவாயம் சந்திக்க உள்ளதாக தகவல்.
No comments:
Post a Comment