சீதா பாட்டி, ராதா பாட்டி (28.01.2021) ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் அய்யாவின் சமூகநீதி மறைவதில்லை! - Agnipuratchi

சீதா பாட்டி, ராதா பாட்டி (28.01.2021) ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் அய்யாவின் சமூகநீதி மறைவதில்லை!

Share This

சீதா பாட்டி, ராதா பாட்டி (28.01.2021)
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் அய்யாவின் சமூகநீதி மறைவதில்லை!

சீதா பாட்டி:  ஏன்டி... ராதா திருட்டு முழி முழிச்சிகிட்டு இருக்கே?

ராதா பாட்டி:  அது ஒன்னுமில்ல அக்கா. ஒரு டவுட்டு. அதை கேட்டா இது கூட தெரியலையான்னு திட்டுவியோன்னு பயம். அதான் கொஞ்சம் தயக்கம்.

சீதா பாட்டி:  அட அறிவுகெட்டவளே... நமக்குள்ள என்னடி. எதுவானாலும் கேளு. ஆனா, ‘இந்த மேன்டிலு எப்படி அண்ணே பிரைட்டா எரியும்’னு கவுண்டமணிகிட்ட செந்தில் கேட்டது மாதிரி கேக்காம அர்த்தமுள்ளதா கேளு.

ராதா பாட்டி:  அது ஒன்னுமில்ல அக்கா. என் தம்பி வீட்டுக்கு போயிருந்தேன். அவன் வூட்டு மேசையில ‘‘சுக்கா... மிளகா... சமூகநீதி?’’ன்னு ஒரு புத்தகம் பார்த்தேன் அக்கா. சுக்கு, மிளகு தெரியும் அக்கா. அதுங்கல கடையில வாங்கலாம். அது என்னக்கா சமூகநீதி? அதுக்கு என்ன அர்த்தம்க்கா?

சீதா பாட்டி:  சரியான டவுட்டு தான்டி. சமூகநீதி பற்றி உனக்கு மட்டுமில்ல. நிறைய பேருக்கு முழுசா தெரியாது. ஆனா உன் தம்பி ‘‘சுக்கா... மிளகா... சமூகநீதி?’’ புத்தகத்தை படிக்கிறான்ல. அவன் புத்திசாலியாத் தான் இருப்பான். அவனுக்கு பாராட்டுகள்.

ராதா பாட்டி:  அது இருக்கட்டும்கா. அந்த புத்தகத்தை பத்தி சொல்லுக்கா?

சீதா பாட்டி:  சொல்றேன்டி. சுக்கையும், மிளகையும் பக்கத்து வீட்டில் கூட கடனா வாங்கலாம்டி. ஆனால், சமூகநீதியை அப்படி வாங்க முடியாது. அதை போராடித் தான் பெறனும். சமூகநீதின்னா இட ஒதுக்கீடு. அதுக்காகத் தான் அப்படி ஒரு புத்தகத்தை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா எழுதியிருக்காரு. அதுல தேசிய அளவிலான இட ஒதுக்கீடு, தென் மாநிலங்களில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு ஆகியவை குறித்த வரலாறுகளும், வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்ட வரலாறும் விரிவா சொல்லப்பட்டு இருக்குடி. அது எல்லாரும் படிக்க வேண்டிய ஆவணப் புத்தகம்டி.

ராதா பாட்டி:  அப்படியா அக்கா. தமிழ்நாட்டுல இட ஒதுக்கீடுன்னு ராமதாசு அய்யா தானேக்கா. அப்ப அது படிக்கப்பட வேண்டிய வரலாறாத் தான் இருக்கும்க்கா. அது சரி அக்கா.... இப்ப வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கனும்னு பா.ம.க போராட்டம் நடத்துறாங்க. ஆனா, தேர்தலுக்காகத் தான் அப்படி செய்றாங்கனு சில பேரு பேசறாங்களே அக்கா.

சீதா பாட்டி:  அடியேய்.... திருடனுக்கு திருட்டு புத்தி தான் இருக்கும். பேரம் பேசுற தரகர்களுக்கு அதைப் பத்தின நினைப்பு தான் இருக்கும். அதனால் நீ சொல்ற சின்னபுத்தி கொண்ட சில பேரோட புத்தி அப்படித் தான் இருக்கும். ஆனால், ராமதாசு அய்யா சமூகநீதிப் போராளி. அவருடைய எண்ணம் சமூகநீதியை வென்றெடுப்பதில் தான் இருக்கும்.

நீ கேட்குற டவுட்டையே சில பத்திரிகையாளர்கள் சில பேரு அய்யாகிட்ட கேட்டாங்க. அதுக்கு பதில் சொன்ன அய்யா வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக 40 வருஷமா போராடிகிட்டு  இருப்பதையும், இப்ப பதவியில் இருக்கிற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசிடம் 2019 மக்களவைத் தேர்தலுக்கு கூட்டணி சேர்ந்த நாளில் இருந்து வலியுறுத்தி வருவதையும், பலமுறை நேரில் சந்தித்தும், கடிதங்கள் மூலமாகவும் வலியுறுத்தியதையும் அய்யா புட்டு புட்டு வெச்சிட்டாருடி.
ராதா பாட்டி:  அப்புறம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாம வன்னியர்களுக்கு இடப்பங்கீடு வழங்க முடியாதுன்னு சில பேர் சொல்றாங்க அக்கா.

சீதா பாட்டி:  அப்படி யாராவது சொன்னா அவங்க அரைவேக்காடுன்னு தான் அர்த்தம்.  இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 1951-ஆம் வருசத்துலேயிருந்து இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் 69% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதில் எதுவுமே மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி தரப்பட்டதில்லை. 1931-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடைசியாக நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் விவரங்களைத் திரட்டி தான் இட ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி தமிழ்நாட்டில் இப்போது வன்னியர்களின் மக்கள்தொகை குறித்த விவரம் அரசிடம் உள்ளது. அதனடிப்படையில் வன்னியர்களுக்கு தாரளமாக இடப்பங்கீடு கொடுக்கலாம்டி.

ராதா பாட்டி:  ஒரு சாதிக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்க அரசியல் சட்டத்தில் இடமில்லைன்னு இன்னொரு குரூப்பு சொல்லிகிட்டு திரியுதே அக்கா?

சீதா பாட்டி: மகாத்மா காந்தி 3 குரங்கு பொம்மைகளை வைத்திருந்தார். தீயவற்றை பார்க்காதே, கேட்காதே, பேசாதே என்பது தான் அந்த பொம்மைகள் சொல்லும் பாடம். ஆனால், இந்த குரூப்புகள் நல்லதை பார்க்காதே, கேட்காதே, பேசாதே என்ற பாடத்தை சொல்லும் கெட்ட குரங்குகள். அப்படிப்பட்ட அரைவேக்காடுகளுக்கு பதில் சொல்லும் வகையில் தான் ராமதாசு அய்யா சுக்கா..மிளகா... சமூகநீதி? புத்தகத்தை மருத்துவர் அய்யா எழுதினாரு.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு ஆந்திராவில் 6 தொகுப்பாகவும், கர்நாடகத்தில்  5 தொகுப்பாகவும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. கேரளத்தில் அதையும் தாண்டி 8 தொகுப்பாக சாதிவாரியாக இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஈழவர்களுக்கு 14%, நாடார்களுக்கு 2%, விஸ்வகர்மாக்களுக்கு 3%, தீரவர்களுக்கு 1% என சாதிவாரியாகவே அங்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஒரு பிற்படுத்தப்பட்ட சாதிக்கு ஒரு விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் அளவுக்கு மக்கள்தொகை இருந்தால், அவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அப்படியிருக்கும் போது தமிழகத்தில் மட்டும் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க என்ன தடை?

ராதா பாட்டி:  எப்படிக்கா இப்படி. எல்லா கேள்விகளுக்கு பட்டுப் பட்டுனு பதில் சொல்ற?

சீதா பாட்டி:  நாம் பேசும் விஷயத்தில் நியாயம் இருந்தால், பதில் தானா வரும்டி. அதுமட்டுமில்லாம.... இது எல்லாம் பா.ம.க. நிறுவனரு அய்யா சொன்ன பதில்கள் தாண்டி. அது இருக்கட்டும் உன் டவுட்டு எல்லாம் தீர்ந்துடிச்சா.... இன்னும் இருக்கா?

ராதா பாட்டி:  கடைசி கேள்வி அக்கா. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தா மத்த சமுதாயங்கள் எதிர்ப்பாங்கனு சொல்றாங்களே அக்கா?

சீதா பாட்டி:  அதுவும் தவறான பிரச்சாரம் தான்டி. நீ ஒரு நீதிபதியாக இருக்கிறதா வெச்சிக்குவோம். இரு வழக்கை விசாரிக்கிறாய். சட்டத்தின்படி யார் பக்கம் நியாயம் இருக்கிறதோ, அவருக்கு ஆதரவாகத் தானே தீர்ப்பளிப்பாய். அப்படி தீர்ப்பளித்தால் தவறு செய்தவர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்பதற்காக குற்றவாளிக்கு ஆதரவாகத் தீர்ப்பு சொல்ல மாட்டாய் அல்லவா? அதேபோல் தான் வன்னியர்களின் இட ஒதுக்கீட்டுக்  கோரிக்கையில் நியாயம் உள்ளதா என்பதை மட்டும் தான் அரசு பார்க்க வேண்டும்.
அதையெல்லாம் தாண்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. அதனால் யாரும் இந்த இட ஒதுக்கீட்டை எதிர்க்கப் போவதில்லைடி.

ராதா பாட்டி:  அக்கா எனது எல்லா ஐயங்களும் தீர்ந்து விட்டன அக்கா. தீர்த்த உனக்கு நன்றிகள் அக்கா.

சீதா பாட்டி:  ஓகேடி... ஏற்கனவே நான் சொன்னதுதான்டி. நீ எப்படி உண்மையை புரிஞ்சிகிட்டியோ, அதேபோல் மத்தவங்களுக்கும் புரிய வை. நானும் அதைத் தான்டி  செய்யறேன். நான் பா.ம.க.வோ, வன்னியரோ இல்லை. அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஒருவனுக்கு சமூகநீதியில் அக்கறையும், அனைவரும் ஒருதாய் மக்கள் என்ற உணர்வும் இருந்தால்  அவனும் வன்னியர் தோழனே!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages