29-ஆம் தேதி இட ஒதுக்கீட்டுப் போராட்டம் சத்திரிய இளைஞர்களே.... சீக்கியர்களின் போராட்ட உறுதி நமக்கும் தேவை! தொண்டர்களுக்கு - மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல். - Agnipuratchi

29-ஆம் தேதி இட ஒதுக்கீட்டுப் போராட்டம் சத்திரிய இளைஞர்களே.... சீக்கியர்களின் போராட்ட உறுதி நமக்கும் தேவை! தொண்டர்களுக்கு - மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்.

Share This

29-ஆம் தேதி இட ஒதுக்கீட்டுப் போராட்டம் சத்திரிய இளைஞர்களே.... சீக்கியர்களின் போராட்ட உறுதி நமக்கும் தேவை! தொண்டர்களுக்கு - மருத்துவர் இராமதாசு அய்யா வலியுறுத்தல்.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 29-ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு முன்பாகவும் மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் இணைந்து நடத்தவுள்ளன.

நமது போராட்டத்தைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தான் நினைவுக்கு வருகிறது. நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி 59-ஆவது நாளாக மிகவும் அமைதியான முறையில், மிகவும் உறுதியான வகையில் அறப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 11 கட்டங்களாக மத்திய அரசு பேச்சு நடத்தியும் உழவர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர். வேளாண் சட்டங்களைக் கைவிடும் வரை போராட்டம் தொடரும் என்று உழவர் அமைப்புகள் திட்டவட்டமாக அறிவித்து விட்டன.

உழவர்கள் போராட்டம் நடத்தப்படும் தில்லியில் கடும் குளிர் நிலவுகிறது. அதனால் இதுவரை 135  உழவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகள் அவர்களின் போராட்ட உறுதியை எந்த வகையிலும் குலைக்கவில்லை. அவர்களின் இந்த உறுதி மிகவும் பாராட்டத்தக்கது.

போராட்டம் என்று வந்து விட்டால் நமது சத்திரிய இளைஞர்கள் பஞ்சாப் சீக்கியர்களுக்கு எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல. இதை நாம் பலமுறை நிரூபித்திருக்கிறோம். இப்போது மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

29-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறவிருக்கும் போராட்டத்தில் சத்திரியர்களின் குடும்பங்களில் இருந்து குறைந்தது ஒருவராவது இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். அவ்வாறு கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் இன்னொருவரை இந்தப் போராட்டத்திற்கு அழைத்து வர வேண்டும்.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று நினைத்திருந்தாலும் கூட, நமது போராட்ட வலிமையைக் கண்டு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி ஆணையிட அரசு முன்வர வேண்டும். அந்த அளவுக்கு சத்திரிய இளைஞர்கள் 29-ஆம் தேதி போரட்டத்தில் நமது வலிமையைக் காட்ட வேண்டும்.

போராட்டக் களத்திற்கு புறப்படுங்கள் சத்திரியர்களே!
                          ***********

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages