அக்னிப்புரட்சி இன்றைய (23.01.2021) முக்கிய செய்திகள்.
* யானைக்கு தீ வைத்த மசினகுடி சொகுசு விடுதிக்கு சீல் வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு.
உரிமம் புதுபிக்காமலேயே விடுதியை நடத்தி வந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
* சென்னையில் பெட்ரோல் விலை விட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ.88.29 க்கு விற்பனை; டீசல் விலை லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ரூ.81.14 க்கு விற்பனை.
* திமுக-வின் மக்கள் சபையிலோ, பரப்புரை கூட்டங்களிலோ, மு.க.ஸ்டாலினுக்கோ மற்ற முன்னணியினருக்கோ ஏதாவது அசாம்பாவிதம் நடந்தால் அதன் விளைவுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும்
திமுகவினர் வெளியில் நடமாட முடியாது என முதல்வர் பேசியது தொடர்பாக முரசொலி எச்சரிக்கை
* ஒரு வாரத்தில் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக பால் தினகரனுக்கு நோட்டீஸ்.
4வது நாட்களாக தமிழகத்தில் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு தொடர்கிறது.
காருண்யா வளாகத்தில் நடந்த சோதனையில் 5 கிலோ தங்கம் கை பற்றப்பட்டது- வருமான வரித்துறை.
* தீ விபத்தால் ரூ 1000 கோடி இழப்பீடு ஏற்பட்டதாக சீரம் நிறுவனம் தகவல்.
புனேவில் உள்ள கோவிஷீல்டு தடுப்பு மருந்து தயாரித்த சீரம் நிறுவனத்தில் தீ விபத்து. புனே தீவிபத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர்.
சீரம் நிறுவன தீ விபத்தால் 1000 கோடி இழப்பீடு ஏற்பட்டதாக நிறுவனத் தலைவர் தகவல்.
* ஓசூர் முத்தூட் நிதி நிறுவன கொள்ளை - மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 6 பேர் கைது.
ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.12 கோடி நகைகளை கொள்ளையடித்த 6 பேர் கைது.
கைது செய்யப்பட்ட மத்திய பிரதேசத்தை சேர்ந்த 6 பேரிடமிருந்து ரூ.12 கோடி நகைகள், 7 துப்பாக்கிகள், 2 கத்தி பறிமுதல் என காவல்துறை தகவல்.
* நாடு முழுவதும் உள்ள 3-ம் பாலினத்தவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்.
* தமிழகம் வந்தார் ராகுல் காந்தி:
சட்டப்பேரவை தேர்தல் பரப்புரைக்காக 3 நாள் பயணமாக தமிழகம் வந்த ராகுல் காந்தி எம்.பி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்கிறார்.
“ராகுலின் தமிழ் வணக்கம்" எனும் பெயரில் 3 நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வந்தடைந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி.
கோவை விமான நிலையத்தில் ராகுல்காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு.
* காவல்துறையினரின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்-முதலமைச்சர்.
ஓசூர் முத்தூட் பைனான்ஸ் கொள்ளையர்களை 18 மணி நேரத்தில் பிடித்த போலீசாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் முத்தூட் நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற கொள்ளையில் திருடு போன 25 கிலோ தங்கத்தையும், கொள்ளையர்களையும் துரிதமாக செயல்பட்டு, 18 மணி நேரத்தில் பிடித்த தமிழ்நாடு காவல்துறையினருக்கு, குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறைக்கு தன்னுடைய மனமார்ந்த பாராட்டுகள் என ட்விட்டரில் முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.
இது, தமிழ்நாடு காவல்துறையினரின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம் என்றும் முதலமைச்சர் பாராட்டியுள்ளார்.
*:அனைத்து மொழிகளையும் சமமாக கருத வேண்டும் கோவையில் பிரசாரத்தை தொடங்கிய ராகுல்காந்தி பேச்சு.
வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளை வஞ்சிக்கிறார் பிரதமர் மோடி தமிழக மக்களிடம் இருந்து இந்தியாவின் பிற பகுதி மக்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
தமிழகத்திடம் எனக்கு உள்ள உறவு, அரசியல் ரீதியான உறவு அல்ல.
நான் தமிழகத்திற்கு எந்தவித சுயநலத்துடனும் வரவில்லை - ராகுல்காந்தி.
* சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா.
சிகிச்சைக்காக பெங்களூர் அரசு மருத்துவமனையில் அனுமதி.
*:திண்டுக்கல் அருகே அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி:
சின்னகாந்திபுரம் அரசுபள்ளியின் 10ம்வகுப்பு ஆசிரியைக்கு கொரோனா தொற்று.
பள்ளியில் பணிபுரியும் 9 ஆசிரியர்கள் மற்றும் 20 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை.
பரிசோதனையை தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்டது பள்ளி.
* நாகை அருகே ரயில் முன் பாய்ந்து விவசாயி தற்கொலை;
ஆவராணி கிராமத்தை சேர்ந்த ரமேஷ்பாபு என்ற விவசாயி தற்கொலை.
மழை நீரில் மூழ்கி நெற்பயிர்கள் பாதித்ததால் விபரீத முடிவு - உறவினர்கள். வாங்கிய கடனை கட்ட முடியாமல் மன உளைச்சலில் இருந்தார் என உறவினர்கள் கூறினார்.
விவசாயி உடலை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரணை.
* பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேச மம்தா மறுப்பு:
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் நேதாஜியின் பிறந்த நாள் விழாவில் உரையாற்ற முதல்வர் மம்தா பானர்ஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.
நேதாஜி பிறந்த நாள் விழாவில் மோடியும் மேற்கு வங்க ஆளுநரும் பங்கேற்றுள்ள நிலையில் உரையாற்ற மறுத்து வெளியேறினார்.
நேதாஜி பிறந்த நாளை பராக்கிரம தினமாக பின்பற்றப்படும் என்று அண்மையில் மத்திய அரசு அறிவித்திருந்தது.
தன்னுடன் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு முடிவு எடுத்துவிட்டதாக மம்தா குற்றம் சாடினார்.
*:டில்லி: திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி.
டிராக்டர் பேரணி குறித்து போலீசாருக்கும், விவசாய பிரதிநிதிகளுக்கும் இடையே உடன்பாடு
திட்டமிட்டபடி குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவிப்பு.
* 22 ஆயிரம் கிராமசபை கூட்டம்:
கிராமசபை கூட்டத்தில் 1.25 கோடி பேர் கலந்துகொண்டு, அதிமுகவை நிராகரிக்கிறோம் என கையொப்பமிட்டுள்ளனர்.
திமுக சார்பில் இதுவரை 22 ஆயிரம் கிராமசபை கூட்டங்களை நடத்தி முடித்திருக்கிறோம் - மு.க ஸ்டாலின்.
No comments:
Post a Comment