அக்னிப்புரட்சி இன்றைய (30.012021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (30.012021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (30.012021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் விட்டர் ரூ.88.82 க்கு விற்பனை; டீசல் லிட்டர் ரூ.81.71 க்கு விற்பனை.

* பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்.

புதுடில்லி: பார்லி., பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று துவங்கிய நிலையில், இன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

பார்லி., தொடரின் அலுவல்கள் குறித்தும், தொடரை சுமூகமாக நடத்துவது குறித்தும் ஆலோசனை செய்வதற்காக, பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் கூடுகிறது.

பார்லி., கூட்டத்தொடர் துவங்கும் முன்பே அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

ஆனால் இந்த முறை தொடர் துவங்கிய பின், அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

* 2009-2010-ஆம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை தேவையில்லை. முறையான நியமனம் செய்யப்பட்டவர்களாக கருதப்படுவர் என தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

* கோயில்களில் நடைபெறும் கட்டுமான பணிகளை கவனிக்க அறநிலையத்துறையில் தலைமை பொறியாளர் நியமனம்

* நாகப்பட்டினம் ஏடிஎஸ்பி முருகேசன் மாரடைப்பால் உயிரிழப்பு:

அதிகாலை நடைபயிற்சி மேற்கொண்டு வீடு திரும்பும் பொழுது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

* சசிகலா உடல்நிலை சீராக உள்ளது:
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை.

ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக உள்ளது ; கடந்த 4 நாட்களாக, செயற்கை சுவாசம் இன்றி, இயல்பாக சுவாசிக்கிறார் - மருத்துவமனை அறிக்கை.

* மகாத்மா காந்தியை பின்பற்றுவோம்:
மகாத்மா காந்தியின் அமைதி, அகிம்சை, எளிமை உள்ளிட்ட கொள்கைகளை நாம் பின்பற்ற வேண்டும்.

மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டர் பதிவு.

* சீரக சம்பா அரிசியில் காளான் பிரியாணி - தயிர் வெங்காயம் சமைத்து சாப்பிட்ட ராகுல் காந்தி!

Youtube channel ஒன்றுக்காக இணைந்த புதிய நிகழ்வு!!
https://youtu.be/5LHyK9zMhMM

* சசிகலா தலைமையில் அதிமுக மீட்டெடுக்கப் போவதை இனி எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது…

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர் கருத்து அதிமுக - அமமுக இணைப்பிற்கும் மறைமுக அழைப்பு

எத்தனை தீயசக்திகளோடு சேர்ந்து துரோகக் கூட்டங்கள் தீட்டினாலும் அவை புஸ்வாணம் ஆகிவிடும் என்றும்,  பதவிக்கு வரும் வரை மண்டியிட்டு, கைகட்டி, சரணாகதி அடைந்து நிற்பதும், பதவி கிடைத்து விட்டதும் பச்சை சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் துரோகிகளுக்கு நாவடக்கம் வேண்டும்!

சீண்டுவார் இன்றி கிடந்தவரை சிம்மாசனத்தில் அமர வைத்த தியாகத் தலைவிக்கு காட்டும் விசுவாசும் இது தானா ?

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கு 100% வாய்ப்பில்லை என மனசாட்சியை விற்று, நன்றி கெட்ட மனிதராக வலம் வருபவர்கள் சரித்திரத்தில் நம்பிக்கை துரோகிகள், பச்சோந்திகள்  என்றே அடையாளப்படுத்தப்படுவார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடாமல் கடும் விமர்சனம்.

* புதுச்சேரி சட்டப்பேரவைக்கு நியமன எம்.எல்.ஏவாக பாரதிய ஜனதாவைச் சேர்ந்த விக்ரமனை நியமனம்.

புதுச்சேரி யூனியனில் 30 சட்டப்பேரவை உறுப்பினர்களும், 3 நியமன எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.

நியமன எம்.எல்.ஏக்களாக பாரதிய ஜனதாவைச் சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர்களுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் நியமன எம்.எல்.ஏ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானதையடுத்து தற்போது விக்ரமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

* உங்கள் KYC ஐப் புதுப்பிக்க ஏதாவது எண்ணை அழைக்கும்படியோ அல்லது இலவச மொபைல் டேட்டா தருவதாக வரும் மோசடி செய்திகளில் ஜாக்கிரதையாக இருக்கவும். இந்த செய்திகளில் கொடுக்கப்பட்ட எந்த எண்ணையும் அழைக்க வேண்டாம் அல்லது லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். தெரியாத / சந்தேகத்திற்கிடமான எண்களிலிருந்து வரும் அழைப்புகளுக்கு உங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பகிர வேண்டாம். பாதுகாப்பாக இருங்கள்.
- டீம் ஜியோ

* சட்டமன்ற தேர்தல் - தேமுதிக ஆலோசனை.

கோயம்பேட்டில் தேமுதிக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

234 தொகுதி பொறுப்பாளர்கள், 39 மாவட்ட பொறுப்பாளர்கள், 6 மண்டல பொறுப்பாளர்கள் பங்கேற்பு.

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்பு.

* ஜெயலலிதாவிற்கு கோவில் திறப்பு:
மதுரையில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் கட்டப்பட்டுள்ள, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கான கோவில் திறப்பு.

முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கோவிலை திறந்து வைத்தனர்.

* அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்:
அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியிலும் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.

தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்.

* சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீட்டுப் பிரச்சினை காரணமாக இரண்டு முதுநிலைத் தொழில்நுட்பப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்து பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய நுழைவுத் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்பட்டு பல நாட்கள் கடந்துள்ள நிலையில், மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் 50 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றுவதா அல்லது மாநில அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடு முறையை பின்பற்றுவதா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனால்  M.Tech.,பயோடெக்னாலஜி மற்றும் M.Tech., கம்புடேஷனல்  பயாலஜி ஆகிய படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படவில்லை.

* திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உள்ளாட்சி தேர்தல் முறையாக முழுமையாக நடத்தப்படும் -மு.க.ஸ்டாலின்.

"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற நிகழ்ச்சியில் மக்களின் கோரிக்கைகளை கேட்டு மனுக்களை பெறும் நிகழ்ச்சி, வேலூர் மாவட்டம் கந்தனேரி பள்ளிகொண்டா கோல்கேட் அருகே நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட ஸ்டாலின் தகவல் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி கடன்கள், விவசாய கடன்கள், 5 சவரன் அளவுக்கு வைக்கப்பட்ட தங்க நகைக் கடன்கள் ரத்து செய்யப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் அளித்தார்.

மக்கள் கோரிக்கைகளை, தன் முதுகில் ஏற்றி இருக்கிறார்கள் என்றும், அதை 100 நாட்களுக்குள் நிறைவேற்றுவது நிச்சயம் என்றும் கூறினார்.

இதற்காக, தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் தனி இலாகா ஏற்படுத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், மக்கள் தன்னை கேள்விகேட்கலாம் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

💥மக்கள் நீதி மய்யம் உடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி?!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தில்லி ஆளும் கட்சியான  அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆதரவு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆதரவு மட்டுமில்லாமல் தொகுதிகளையும் கேட்டு போட்டியிட கேட்க முடிவு. ஆம் ஆத்மி கட்சி தென் மாவட்டம் / கொங்கு மண்டலத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்.

பரப்புரை செய்ய தில்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முதற்கட்ட தலைவர்கள்  தமிழகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

* 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயார் - பிரேமலதா விஜயகாந்த்.

கூட்டணியில் உரிய மதிப்பளிக்காவிடில் தனித்துப்போட்டியிட தயாராக இருக்க வேண்டும்.

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து நாளை முக்கிய முடிவை விஜயகாந்த் அறிவிப்பார்.

சென்னையில் தேமுதிக தலைமையகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் தகவல்.

சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் போட்டியிட தயார்.
கூட்டணி என்றால் பாமக இல்லாத கட்சியுடன் மட்டுமே கூட்டணி.

தேமுதிக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாக தகவல்.

* நாளை போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்

* சசிகலா நாளை டிஸ்சார்ஜ்:
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா நாளை டிஸ்சார்ஜ்.

சசிகலா நாளை காலை 10 மணி அளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை தரப்பில் தகவல்.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து கடந்த 27ந் தேதி விடுதலை செய்யப்பட்ட சசிகலா உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார்.

உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் சசிகலா நாளை காலை 10 மணிக்கு டிஸ்சார்ஜ் என பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை தகவல்.

* தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா உடன் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் ஆலோசனை.

பாமக நிர்வாகக் குழு கூட்டம் நாளை நடைபெறவிருக்கும் நிலையில் ஆலோசனை .

வன்னியர் உள்ஒதுக்கீடு தொடர்பாகவும், கூட்டணி குறித்தும் நாளை முக்கிய முடிவு எடுக்கப்படும் என பாமக அறிவித்திருந்த நிலையில் ஆலோசனை.

* திமுகவிடம் கேட்டால்தான் அரசின் காதுகளில் விழுகிறது, நாளை அமையும் திமுக அரசு கேட்காமலும் உதவும்.

திருவண்ணாமலையில், தாயை இழந்த பெண் ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்வில் மனு கொடுத்திருந்தார்.

*பெண்ணின் மனுவிற்கு உடனடியாக திமுக உதவும் என உறுதியளித்த நிலையில் பதறிய அரசு ரூபாய் 2 லட்சம் வழங்கியுள்ளது - ஸ்டாலின்.

தமிழக அரசு, யானைப் புத்துணர்ச்சி முகாம் நடத்துகிறது. இதே ஆட்சியில் 6 ஆண்டுகளில் 561 யானைகள் பலி ஆகியிருக்கின்றன.

கோயில் யானைக்கான அக்கறையைக் காட்டுயானைக்குக் காட்டக்கூடாதா? - ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் கேள்வி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages