அக்னிப்புரட்சி இன்றைய (13.02.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (13.02.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (13.02.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் விலை விட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ரூ.90.70 க்கு விற்பனை; டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து ரூ.83.86 க்கு விற்பனை.

* விருதுநகர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழப்பு 19ஆக உயர்ந்துள்ளது.

பட்டாசு ஆலை விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 5 தனிப்படையினர் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வரும் 29 பேரில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்.

* அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை ரூ 1,511 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது - அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி தகவல்.

* விருதுநகர்: சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பாக மேலும் 3 பேர் மீது வழக்குப்பதிவு.

வெடிவிபத்து தொடர்பாக இதுவரை உரிமையாளர், குத்தகைதாரர்கள் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு.

* உலக வானொலி தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து:

அனைத்து வானொலி பயன்பாட்டாளர்கள் மற்றும் அதனை உயிர்ப்புடன் வைத்திருப்பவர்களுக்கு பாராட்டுகள்.

தனிப்பட்ட முறையில் 'மான் கி பாத்' மூலமாக வானொலியின் நேர்மறையான தாக்கத்தை நான் உணர்கிறேன் - பிரதமர்.

* சிவகாசி அருகே மீண்டும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து.

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து அதிர்ச்சி விலகாத நிலையில், இன்று சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து.

* நிவர் புயல் பாதிப்புக்கு ரூ.63.14 கோடியும், புரவி புயல் பாதிப்புக்கு ரூ.223.77 கோடியும் தமிழகத்திற்கு ஒதுக்கீடு;

மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்த உயர்மட்டக் குழு கூட்டத்தில்  நிதி ஒதுக்கீடு.

* தமிழக அரசின் உதவியை பெற 1100 சேவை எண் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்;

அனைத்து குறைதீர்க்கும் அமைப்புகளும் முதல்வரின் 1100 உதவி மையம் மூலம் ஒருங்கிணைக்கப்படும்.

* ஸ்டாலின் சொல்கிறார், முதலமைச்சர் பழனிசாமி செய்கிறார் - கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு.

‘ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் முடிக்கிறான்' என்ற ரஜினியின் வசனத்தை கூறி திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு.

திமுக ஆட்சியில் விருத்தாசலம் தனி மாவட்டம் ஆக்கப்படும் -ஸ்டாலின்.

* சென்னை : தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இடைக்கால பட்ஜெட் குறித்து அமைச்சர்களுடன் ஆலோசனை.

* தமிழகத்தில் நிதி வசூலிக்கும் ஒரே கட்சி மதிமுக:

தமிழகத்தில் மற்ற கட்சிகளுக்கு நிதி தேவையில்லை, அவர்களிடம் பணம் குவிந்துள்ளது.

சட்டமன்ற தேர்தலில் குறைந்த இடங்களே நமக்கு கிடைக்க கூடும், அதைபற்றி தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம்.

பொதுத்தேர்தல் முடிந்ததும் கட்சியின் பொதுக்குழுவை கூட்டி முக்கிய முடிவை அறிவிக்க இருக்கிறேன் - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

* தொழிலாளர்களின் பாதுகாப்பை நாம் எப்போது உறுதி செய்யப்போகிறோம்? 

சாத்தூர் வெடி விபத்து சம்பவம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவீட்.

உயிரிழந்தோர் ஓலம் தேர்தல் பிரசார இரைச்சலில் அடங்கி விடக்கூடாது - கமல்.

* அனுபவம் மிகுந்த நிர்வாகிகளையும் விட Technologyயால் கட்சியை ஆட்சி கட்டிலில் அமர்த்த முடியும் என்பது வீண் கனவு

இதே நிலை தொடர்ந்தால், ஒரு கூட்டத்துக்கு நீங்களும் பிரசாந்த் கிஷோரும் ஒரே நேரத்தில் வந்தால், கழகத்தினர் உங்களை விட்டுவிட்டு அவரோடு செல்பி எடுத்துக் கொள்வார்கள் - தினமலர்

* சாதி மறுப்பு திருமணங்கள் சாதி மத மோதல் பதட்டங்களை பெருமளவில் குறைக்கும்.. : உச்ச நீதிமன்றம் கருத்து

* கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுப்படி செய்யப்பட்டதற்கான சான்றிதழை முதலமைச்சர் இன்று வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சீனுவாசன் என்பவர் பெற்ற ₹1,06,047 கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

* பட்டியல் இனத்தில் உள்ள தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவுகளை சார்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்கும் வகையில் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தில் சட்டதிருத்ததை அறிமுகம் செய்தது நடுவண் அரசு

* உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" நிகழ்ச்சி - சிதம்பரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு:

தகுதி இல்லாத ஒருவர் தமிழகத்தின் முதலமைச்சர் ஆகி உள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் கையை விட்டு ஆட்சி நழுவ போகிறது. திமுக கையில் தான் ஆட்சி வரப்போகிறது.

கருணாநிதி இல்லை என்றாலும், அவரின் எண்ணம், உணர்வு நம்முடன் இருக்கும். - திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு:

* வீடு புகுந்து குரங்குகள் தூக்கிச் சென்ற 2 பச்சிளங் குழந்தைகள்: 8 நாள் பெண் சிசு சடலமாக மீட்பு.

தஞ்சையில் குரங்குகளால் தூக்கிச் செல்லப்பட்ட, பிறந்து 8 நாட்களே ஆன  இரட்டைப் பெண் குழந்தைகளில் ஒரு குழந்தை ஓட்டின் மேல் இருந்து மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு குழந்தை அகழியில் இருந்த சடலமாக மீட்கப்பட்டது.

குழந்தையை பறிகொடுத்த பெற்றோர் கதறி அழுதது  காண்போரை கலங்கச் செய்தது.

தஞ்சை மேல அலங்கத்தில், ராஜராஜ சோழன் காலத்தில் வெட்டப்பட்ட அகழியை ஒட்டிய பகுதிகளில் நெருக்கமாக வீடுகள் அமைந்துள்ளன.
இந்த பகுதியில் குரங்குகள் தொல்லை பெருகி வருவதாகவும், வீடுகளில் உள்ள பொருட்களை தூக்கிச் சென்று விடுவதாகவும் ஏற்கெனவே புகார்கள் உள்ளன.

இந்நிலையில், ராஜா-புவனேஸ்வரி தம்பதி 8 நாட்களுக்கு முன்னர் பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகளுடன் வீட்டில் இருந்துள்ளனர். திடீரென வீட்டிற்குள் புகுந்த இரண்டு குரங்குகள் பெற்றோர் சுதாரிப்பதற்குள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 2 பச்சிளங் குழந்தைகளையும் தூக்கிச் சென்றுள்ளன. பதறிப்போய் பெற்றோர் குரங்கை பின்தொடர்ந்த நிலையில், ஒரு குரங்கு வீட்டின் ஓட்டுக்கூரை மீது ஒரு குழந்தையை போட்டுவிட்டு ஓடிவிட்டது. மற்றொரு குரங்கு குழந்தையுடன் ஓடிவிட்ட நிலையில், அது சென்ற பகுதியில் தேடியுள்ளனர். இதில், மற்றொரு பெண் குழந்தை அருகே இருந்த அகழியில் சடலமாக மீட்கப்பட்டது. நடந்த சம்பவம் குறித்து, குழந்தைகளின் தாயார் கண்ணீருடன் விவரித்தது மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாக இருந்தது.

* சென்னை: இந்தியா இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன் எடுத்துள்ளனர். 

அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 161 ரன்களில் ஆட்டமிழந்தார்.

நிதானமாக ஆடி வந்த ரஹானே 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ரிசப் பண்ட் 33 ரன்னுடன் அக்சர் பட்டேல் 5 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து அணி தரப்பில் லீச், மொயின் அலி தலா 2 விக்கெட், ஓலி ஸ்டோன் ஒரு விக்கெட் எடுத்தனர்.

* குமளங்குளம் ஊராட்சி தலைவர் தேர்தல் முடிவு தொடர்பாக தனி நீதிபதி உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை.

கடலூர் மாவட்டம் குமளங்குளம் ஊராட்சி தலைவர் தேர்தல் முடிவு தொடர்பாக தனி நீதிபதி உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

குமளங்குளம் ஊராட்சி தலைவர் தேர்தலில் ஜெயலட்சுமி என்பவர் வெற்றிபெற்றதாக அறிவித்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages