அக்னிப்புரட்சி இன்றைய (14.02.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் விலை விட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ரூ.90.96 க்கு விற்பனை; டீசல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.84.16 க்கு விற்பனை.
* வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட கண்டன தீர்மான வழக்கில் இருந்து டிரம்ப் விடுவிப்பு:
அமெரிக்க நாடாளுமன்றத் தாக்குதலுக்கு காரணமாக வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட கண்டன தீர்மான வழக்கில் இருந்து முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு செனட் சபையின் வாக்கெடுப்பில் 57 பேரின் ஆதரவைப் பெற்று டிரம்ப் விடுவிக்கப்பட்டார். எதிரணிக்கு 43 வாக்குகள் பதிவாகின.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அமெரிக்க வரலாற்றில் ஒரு அதிபருக்கு எதிராக இப்படி ஒரு சூன்ய வேட்டை நடந்தது இல்லை என்றார்.
* சென்னை மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணி வரை இலவசமாக பயணம் செய்யலாம்.
வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோநகர் இடையிலான, மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி, இன்று துவக்கி வைக்க உள்ளார்.
இதையொட்டி, இன்று மதியம், 2:00 மணியில் இருந்து, இரவு, 11:00 மணிவரை, மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் செய்ய, நிர்வாகம் அனுமதித்துள்ளது.
இதன்வாயிலாக, விமான நிலையம் - திருவொற்றியூர் விம்கோநகர், பரங்கிமலை - சென்ட்ரல் இடையே மெட்ரோ ரயிலில், பொதுமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.
* ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் மடப்புரம் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் ஒரு குழந்தை, 8 பெண்கள் உள்பட 14 பேர் உயிரிழப்பு; 2 பேர் படுகாயம்.
* புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி; இந்த நாடே உங்களுக்கு கடன்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதல் நடைபெற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ராகுல் காந்தி டுவீட்.
* சென்னை டெஸ்ட் : முதல் இன்னிங்ஸ் இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு ஆல் அவுட்.
இன்று காலை மற்ற பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்தியா 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 29-வது முறையாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அஸ்வின் அபாரம்.
200 இடது கை ஆட்டக்காரர்களை அவுட் ஆக்கி அஸ்வின் சாதனை.
*;ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் திரும்பிய போது சேப்பாக்கம் மைதானத்தை படம்பிடித்த பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
💥நாளை நல்லிரவு முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் அனைத்து வழித் தடங்களும் (Lane) FASTAG வழித் தடங்களாக மாற்றப்படும் - நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு
💥காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை தொடங்குவதில் சிக்கல் ஏன்?
No comments:
Post a Comment