அக்னிப்புரட்சி இன்றைய (16.02.2021) முக்கிய செய்திகள்.
* நாடு முழுவதும் பாஸ்டேக் அமலுக்கு வந்தது:
நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு பாஸ்டேக் என்பது அமலுக்கு வந்தது.
சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூல். பாஸ்டேக் முறைக்கு மாறுவதற்கான அவகாசம் நள்ளிரவுடன் முடிந்தது.
* சென்னையில் பெட்ரோல் விலை விட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ரூ.91.45 க்கு விற்பனை; டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து ரூ.84.77 க்கு விற்பனை.
* அபராதமின்றி வருமானவரி கணக்கு தாக்கல் செய்யும் கால அவகாசம் நிறைவடைந்தது-வருமான வரித்துறை.
கொரோனா தொற்று காரணமாக 2019-2020 நிதியாண்டு, அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த நவம்பர் வரை வழங்கப்பட்டு இருந்தது.
இந்த அவகாசம், டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து தணிக்கை செய்ய வேண்டிய கணக்குகள் தாக்கல் செய்ய பிப்ரவரி 15-ம்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
வரி செலுத்துவோரின் கோரிக்கையை ஏற்று, அபராதமின்றி, தணிக்கை செய்யக்கூடிய கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது.
கணக்கு தாக்கல் செய்யாத 5 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோர் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தி, இன்று முதல் கணக்கு தாக்கல் செய்யலாம்.
அடுத்த மாதம் 31-ம் தேதிக்கு பின் கணக்கு தாக்கல் செய்ய முடியாது.
* புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஏற்கெனவே புதுச்சேரியில் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர்
பதவியை ராஜினாமா செய்தனர்.
* தூத்துக்குடி: மணியாச்சி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 5 பெண் தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
நெல்லையிலிருந்து விவசாய பணிக்காக சென்றபோது விவசாய பெண் தொழிலாளர்கள் உயிரிழப்பு.
* 2009ல் சிவகங்கை மக்களவை தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ராஜகண்ணப்பன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
* புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா.
புதுவை முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கூண்டோடு ராஜினாமா திட்டம்- அமைச்சர் கந்தசாமி
காங். எம்.எல்.ஏக்களை பாஜக மிரட்டி ராஜினாமா செய்ய வைப்பதாக குற்றச்சாட்டு.
* இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி...
சென்னை 2வது டெஸ்ட் : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி.
முதல் இன்னிங்சில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் முறையே 329 ரன்கள் மற்றும் 134 ரன்கள் எடுத்தனர்.
2வது இன்னிங்சில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் முறையே 286 ரன்கள் மற்றும் 164 ரன்கள் எடுத்தனர்.
2வது இன்னிங்சில் இந்திய அணியின் அக்சர் படேல் - 5, அஷ்வின் - 3, குல்தீப் யாதவ் - 2 விக்கெட் வீழ்த்தினர்.
* தமிழக இடைக்கால பட்ஜெட் வரும் 23ஆம் தேதி தாக்கல்.
தமிழக நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை யொட்டி இடைக்கால பட்ஜெட் தாக்கல்.
* காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.
"விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆளும் காங்கிரஸ் கட்சி செயல்படும்"
நான்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், நாராயணசாமி விளக்கம்.
* எம்.டெக். படிப்புகளில் இந்த ஆண்டு மாநில அரசின் இட ஒதுக்கீட்டையும், அடுத்த ஆண்டு மத்திய அரசு இட ஒதுக்கீட்டையும் பின்பற்றலாம்.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை.
மாணவர்களின் நலன் சார்ந்த விவகாரத்தில் எவ்வாறு தீர்வு காணப்போகிறீர்கள்? - மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி.
மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை பின்பற்றினால், பல்கலைகழகத்திற்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தும் - நீதிபதி.
* புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து கிரண் பேடி நீக்கம்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜனுக்கு, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு.
No comments:
Post a Comment