தேவேந்திரர் குல வேளாளர்களும் நானும்!தென் மாவட்ட கலவரங்களும், அமைதியை ஏற்படுத்த - மருத்துவர் இராமதாசு அய்யா மேற்கொண்ட முயற்சியும்!! - Agnipuratchi

தேவேந்திரர் குல வேளாளர்களும் நானும்!தென் மாவட்ட கலவரங்களும், அமைதியை ஏற்படுத்த - மருத்துவர் இராமதாசு அய்யா மேற்கொண்ட முயற்சியும்!!

Share This

தேவேந்திரர் குல வேளாளர்களும் நானும்!தென் மாவட்ட கலவரங்களும், அமைதியை ஏற்படுத்த - மருத்துவர் இராமதாசு அய்யா மேற்கொண்ட முயற்சியும்!!

1990-களின் பிற்பகுதியில் தென் மாவட்டங்கள் கலவரக்காடாகவே காட்சியளித்தன.  1997-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தென் மாவட்டங்கள் பற்றியெரியத் தொடங்கின. அந்த ஆண்டின் ஏப்ரல் 23-ஆம் தேதி கண்டமனூரில் தேவர் சிலை அவமதிக்கப்பட்டதைக் காரணம் காட்டி எழுந்த கலவரங்கள் பல மாதங்கள் நீடித்தன. பல இடங்களில் வடிவங்களில் கலவரங்கள் வெடித்தன. கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல்  தமிழக அரசு தடுமாறியது.

அப்போது பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பாட்டாளி மக்கள் கட்சியின் பெரியாரிய அம்பேத்கரிய மார்க்சிய தத்துவ அணி மாநிலத் தலைவரான வள்ளிநாயகம்  ஏற்பாட்டில் மதுரையில் பல்வேறு சமுதாயத்தலைவர்கள் கலந்து கொண்ட சமாதானப் பேச்சுவார்த்தை  நடைபெற்றது.

எனது தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தேவர் பேரவையின் தலைவர் மருத்துவர் ந. சேதுராமன், அப்போது மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த தலித் பேந்தர்ஸ் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன், சென்னை கமலா திரையரங்க உரிமையாளரும், செட்டியார் சமுதாய பிரமுகர்களில் ஒருவருமான வி.என். சிதம்பரம் செட்டியார், பாட்டாளி மக்கள் கட்சியின்  நிர்வாகிகளும், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுமான வடிவேல் இராவணன், இரும்பொறை குணசேகரன், முருகவேல் இராசன் உள்ளிட்டோரும், தேவக்கோட்டை மருத்துவர் சுப்பிரமணியன், சிவமணி போன்ற தென்மாவட்ட பிரமுகர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தென் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழும்  தேவேந்திரர்கள், தேவர்கள், சவுராஷ்டிரர்கள், பிள்ளைமார்கள், யாதவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த அமைப்புகளின் தலைவர்கள் சமாதானக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் பேசிய பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் தென் மாவட்டங்களில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

நிறைவாகப் பேசிய நான், ‘‘ தென் மாவட்டங்களில் வாழும் பல்வேறு சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான இந்த நடவடிக்கையை தமிழக முதலமைச்சர் கலைஞரும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் தான் மேற்கொண்டிருக்க வேண்டும். அவர்கள் செய்யாத நிலையில் நாம் செய்து கொண்டிருக்கிறோம். தென் மாவட்டங்களில் அமைதி திரும்ப வேண்டும். நமக்குள் நல்லிணக்கம் மலர வேண்டும். அதற்காக அனைத்து சமுதாயங்களும்  கசப்புகளை மறந்து ஒன்றுபட்டு வாழ வேண்டும்’’ என்று  நான் வலியுறுத்தினேன். எனது கருத்துகளை அனைத்து சமுதாய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் ஏற்றுக் கொண்டனர்.

அந்த சமாதானக் கூட்டத்தைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் படிப்படியாக அமைதி திரும்பத் தொடங்கியது. வட தமிழகத்தைச் சேர்ந்த நான், தென் தமிழகத்திற்குச் சென்று கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டது  இன்று வரை என் மனதுக்கு நிம்மதியளிக்கும் நிகழ்வாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages