அக்னிப்புரட்சி இன்றைய (20.02.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து ரூ.92.59 க்கு விற்பனை; டீசல் விலை லிட்டருக்கு 35 காசுகள் அதிகரித்து ரூ.85.98 க்கு விற்பனை.
* ராமர் பெயரை சொல்லி ஆன்மீக ஊழல் என கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி சொன்ன கருத்தை திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி வெளியிட்டிருக்கிறது
* அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய குடியுரிமை திருத்த மசோதா தாக்கல்.
புதிய குடியுரிமை திருத்த மசோதாவை அதிபர் ஜோ பைடன் தாக்கல் செய்தார்.
ஆவணங்களின்றி பணியாற்றும் 1.1 கோடி பேருக்கு குடியுரிமை வழங்க புதிய மசோதா வழிவகுக்கிறது.
எச்1 பி விசா வைத்திருப்போரின் மனைவிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க மசோதா வழிவகை செய்கிறது.
* சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
சென்னை மெட்ரோ ரயில் கட்டணங்களை குறைத்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அதிகபட்ச கட்டணம் 70 ரூபாயில் இருந்து 50 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2 கிலோமீட்டர் வரை 10 ரூபாய் கட்டணம் என்பதில் மாற்றமில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 முதல் 4 கிலோமீட்டர் வரை 20 ரூபாய் கட்டணம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி அந்த கட்டணத்தில் 5 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம்.
4 முதல் 6 கிலோமீட்டர் வரை 30 ரூபாயும், 6 முதல் 12 கிலோமீட்டர் வரை 40 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 30 ரூபாய் கட்டணத்தில் 12 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம்.
12 முதல் 18 கிலோமீட்டர் வரை 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 21 கிலோமீட்டர் வரை 40 ரூபாய் கட்டணத்திலேயே பயணிக்கலாம்.
* பெண்கள் பாதுகாப்பு - ஸ்டாலின் உறுதி:
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயலுக்கு முடிவு கட்டுவோம் - திமுக தலைவர் ஸ்டாலின்.
பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்.
* கலையரசன் குழுவுக்கு மேலும் 3 மாதம் அவகாசம்" - உயர்கல்வித்துறை உத்தரவு:
துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்கும் கலையரசன் குழு.
கடந்த 11 ஆம் தேதியுடன் கால அவகாசம் முடிந்த நிலையில் மேலும் 3 மாத கால அவகாசம் நீட்டிப்பு.
* நடிகர் ரஜினியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு:
போயஸ்தோட்டத்தில் உள்ள ரஜினி வீட்டில் இருவரும் சந்திப்பு.
சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம்
போட்டியிடும் நிலையில், முக்கிய ஆலோசனை.
ரஜினி கட்சி தொடங்காத நிலையில், ஆதரவு கேட்பதாக கூறியிருந்தார் கமல்ஹாசன்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழா நாளை நடைபெற உள்ளது.
* புதுச்சேரி ஆளுநர் மாளிகை அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்:
கிரண்பேடியின் பதவிக்காலத்தில் பணியாற்றிய அதிகாரிகள் அனைவரும் இடமாற்றம்.
துணை நிலை ஆளுநர் அலுவலக சிறப்பு அதிகாரி தேவநிதிதாஸ் நீக்கம்.
* சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புவோர் வருகின்ற 23-ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை விருப்பமனுவை, திநகர் அலுவலகத்தில் அளிக்கலாம் - பா.ம.க
* இங்கிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு:
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ராகுல் திவேதியா ஆகியோர் முதல் முறையாக இடம்பெற்றுள்ளனர்.
தமிழக வீரர்கள் நடராஜன், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட இருபது ஓவர் கிரிக்கெட் தொடர், மார்ச் 12-ஆம் தேதி தொடங்குகிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இருபது ஓவர் போட்டிகள் அனைத்தும் அகமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் மைதானத்திலேயே நடைபெற உள்ளது.
* தமிழகத்தில் 7,000 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு.
சட்டமன்ற தேர்தலையொட்டி கடலூர் மாவட்டத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார்.
இதுவரை தமிழகத்தில் 21 லட்சத்திற்கும் மேற்பட்ட இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அப்போது அவர் கூறினார்.
* புதுச்சேரியில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவு:
புதுச்சேரியில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பிப்.22-ம் தேதி நாராயணசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்ட நிலையில் எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment