அக்னிப்புரட்சி இன்றைய (21.02.2021) முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.59 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.85.98 க்கும் விற்பனை.
* மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் 88வது நாளாக விவசாயிகள் போராட்டம்
* கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை:
1 முதல் 9ஆம் வகுப்பு வரை விடுமுறை-புதுச்சேரி கல்வித்துறை அறிவிப்பு.
புதுச்சேரியில் இன்று 19 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
* காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்:
புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூரில் முதல்கட்ட திட்ட பணிகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்பு.
ரூ 14,000 கோடி மதிப்பீட்டில் காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்த முடிவு.
முதற்கட்டமாக ரூ 6,941 கோடி மதிப்பில் 118.45 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வெட்டும் பணிகள் நடைபெறும்.
* தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நெல்லை, சேலம், தேனி, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
* புதுச்சேரியில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜினாமா ஒரு திமுக எம்எல்ஏ ராஜினாமா
காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா.
புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா.
ஏற்கெனவே 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
லட்சுமி நாராயணனின் தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமாவால் காங்கிரஸின் பலம் 12ஆக குறைந்தது.
சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
இதனால் நாராயணசாமிக்கு நெருக்கடி:
* பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம்.
* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் செர்பியாவின் ஜோகோவிச்.
ரஷ்யாவின் டேனில் மெட்வடேவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார்.
இறுதிப்போட்டியில் 7-5, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.
No comments:
Post a Comment