அக்னிப்புரட்சி இன்றைய (25.02.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (25.02.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (25.02.2021) முக்கிய செய்திகள்.

*;அரசுப்பேருந்துகள் ஸ்டிரைக் தொடங்கியது:

கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.92.90  க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.86.31 க்கும் விற்பனை.

* கேஸ் சிலிண்டர் விலை ரூ.810ஆக அதிகரிப்பு பிப்ரவரியில் 3ஆம் முறையாக ரூ.25 விலை உயர்ந்து ஒரு சிலிண்டரின் விலை ரூ.785லிருந்து ரூ.810ஆக அதிகரிப்பு.

* டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் மோடி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக - காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியது. சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை.

* ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கம்யூ. கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நிலையில் பின்னடைவு.

* கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணை வெளியீடு.

கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர் 7 நாட்கள் வீட்டுத்தனிமையில் இருக்க அறிவுறுத்தல்.

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு அறிகுறி இருந்தால், கொரோனா பரிசோதனை கட்டாயம்.

பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானால் கோவிட் கேர் மையத்தில் தங்கவைக்கப்படுவர்.

* சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.35,144-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.20 குறைந்து ரூ.4,393-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசு உயர்ந்து ரூ.75.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு - முதல்வர் அறிவிப்பு;

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 வயதில் இருந்து  60 வயதாக உயர்த்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவிப்பு.

* புதுச்சேரியில் பிரதமர் மோடி: 4 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

விழுப்புரம்-நாகை இடையே 4 வழிச்சாலை பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

காரைக்காலில் ரூ 491 கோடி செலவில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களால் சாலைப் போக்குவரத்து வசதிகள் மேம்படும்: பிரதமர் மோடி.

திருநள்ளாறு, வேளாங்கண்ணி, நாகூர் ஆன்மீகத் தலங்களுக்கு சென்று வர பொதுமக்களுக்கு உதவும் சாலைகள்.

சாலைகள் மேம்பாட்டின் மூலம் தொழில் வளம், வேலைவாய்ப்புகள் பெருகும்.

கேடில் விழுச்செல்வம் திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி உரை:

புதுச்சேரி அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

சாகர் மாலா திட்டத்தின் கீழ் புதுச்சேரி துறைமுகம் மேம்படுத்தப்படும்- பிரதமர் மோடி.

💥 பா.ஜ.க வின் சூழ்ச்சி வலையால் இதுரை 10 ஆட்சிகள் கலைப்பு.

ஒரு இடங்களில் கூட வெற்றி பெறதா நிலையிலும் ஆட்சியை கையகபடுத்துகிறது பா.ஜ.க

* கோவையில் நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு;

முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் பங்கேற்பு.

அரசு விழாவுக்கு பிறகு கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பாஜக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

* 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி - முதலமைச்சர் அறிவிப்பு.

9 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிகளுக்கு வர வேண்டாம்.

தமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என அறிவிப்பு வெளியான நிலையில், ஆசிரியர்கள் அறிவுறுத்தல்.

* இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில்  இந்திய அணி முதல் இன்னிங்சில் 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களை இழந்து ஆட்டமிழந்தது.

இதில் அதிகபட்சமாக, ரோஹித் ஷர்மா 66 ரன்களும், கேப்டன் விராட் கோலி, 27 ரன்களில் அவுட் ஆனார்.

* நாளை பள்ளிகளுக்கு போலாமா, வேண்டாமா? மாறி மாறி இரு அறிவிப்பால் மாணவர்கள் குழப்பம்.

9, 10,11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார்.

அதனை தொடர்ந்து நாளை முதல் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டது.

தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் 9,10 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்.

பொதுத்தேர்வின்றி மாணவர்கள் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்துள்ளதாக, கற்பித்தல் அறிவு மாணவர்களுக்கு அவசியம் வேண்டும் என்பதால் மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்பட்டுள்ளது.

நாளை பள்ளிகளுக்கு  போலாமா, வேண்டாமா? என்று குழப்பத்தில் தமிழக மாணவர்களில் மனநிலை உள்ளது.

* கோவையில் ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

நெய்வேலியில் ரூ.8,000 கோடி மதிப்பிலான அனல்மின் திட்டம் நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது.

மேலும், கீழ் பவானி திட்டத்தை விரிவுபடுத்துதல், புதுப்பித்தல் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

* விருதுநகர் மாவட்டத்தில் மீண்டும் பட்டாசு ஆலை விபத்து:  3 பேர் பலி.

சிவகாசி அருகே காளையார்குறிச்சி பட்டாசு ஆலை வெடி விபத்தில் சம்பவ இடத்தில் மூன்று பேர் உயிரிழப்பு; விபத்தில் பெண்கள் உட்பட பத்து பேர் படுகாயம்.

* சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்களை வீழ்த்தி அஷ்வின் அபாரம்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 400வது விக்கெட்டை கைப்பற்றினார் இந்திய வீரர் அஸ்வின்.

* சுருண்டது இங்கிலாந்து:
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 81 ரன்களில் சுருண்டது.

அக்சர் பட்டேல் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்திய அணி வெற்றி பெற 49 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

* புதுச்சேரியில் அமலானது குடியரசுத் தலைவர் ஆட்சி.

புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல் - குடியரசுத்தலைவர் அறிவிப்பு.

புதுச்சேரியில் அரசு கலைக்கப்படுவதாகவும் அறிவிப்பு.
குடியரசுத்தலைவர் ஆட்சி அமல் என அரசிதழில் வெளியீடு.

* அகமதாபாத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இந்திய அணி.

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி:

நிர்ணயித்த இலக்கை எட்டி இந்தியா அபார வெற்றி - ரசிகர்கள் உற்சாகம்.

தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது இந்தியா.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில், முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா.

* திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மார்ச் 7ம் தேதி கூடுகிறது திமுக பொதுக்குழு.

காலை 10 மணிக்கு கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் நடைபெறுகிறது.

பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages