திருவள்ளுவரின் அடையாளத்தை மாற்றி சிறுமைப்படுத்தக் கூடாது - மருத்துவர் இராமதாசு அய்யா தனது டுவிட்டர் பதிவு
1.சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படியான எட்டாம் வகுப்பு இந்தி பாடநூலில் திருவள்ளுவரை தலையில் குடுமி வைத்து பூனூல் அணிந்தவராக அடையாளப்படுத்தியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும். திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர். அவரை ஒரு தரப்புக்கு சொந்தமானவராக சிறுமைப்படுத்தக்கூடாது!
2. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின். (குறள் 280, கூடாவொழுக்கம்). பொருள்:உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டாம். இப்படி கூறிய வள்ளுவரை அதற்கு எதிராக சித்தரிப்பது குரூரமானது!
No comments:
Post a Comment