அக்னிப்புரட்சி இன்றைய (02.03.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (02.03.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (02.03.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் 3 வது நாளாக மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.93.11  க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.86.45 க்கும் விற்பனை.

* கூட்டணி பேச்சு முதல் சுற்றில் காங்கிரஸ் கட்சிக்கு 18, விசிக வுக்கு 4 தொகுதிகள் திமுக கூட்டணியில்  அளிக்கப்பட்டிருப்பதாக தகவல்

* சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியது.

திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் நேர்காணாலை நடத்துகின்றனர்.

* மக்கள் நீதி மய்யம் சார்பில் 2-வது நாளாக இன்று வேட்பாளர் நேர்காணல்:

கமல்ஹாசன் தலைமையிலான குழு நேர்காணல் நடத்துகிறது.

திருச்சி, புதுக்கோட்டை, நெல்லை, உள்பட 7 மாவட்டத்தினரிடம் இன்று நேர்காணல்.

மார்ச் 7ல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.

நாளை தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் கமல்.
சென்னை ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட கமல் முடிவு?

* அதிமுக - தேமுதிக கட்சிகள் இன்று மாலை பேச்சுவார்த்தை.

சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில் இன்று மீண்டும் ஆலோசனை.

* தமிழகத்தில் நுழைவுத்தேர்வு மூலம் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்த கல்வித் துறை திட்டம்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மாணவர் சேர்க்கைக்கு புதிய ஏற்பாடு.

* புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை:

* கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்காத என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக.

கட்சிகளுக்கு இடையே முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதில் போட்டி என தகவல்.

முதல்வர் வேட்பாளர் சிக்கலால் பேச்சுவார்த்தை தாமதம் என தகவல்.
ஓரிரு நாளில் பேச்சுவார்த்தை தொடங்க வாய்ப்பு.

முதல்வர் வேட்பாளர் சிக்கல் நீடித்தால் என்.ஆர்.காங்கிரஸ் தனித்து போட்டியிடவும் திட்டம்.

* கடலூர் : சின்னகங்கனாங்குப்பம் பகுதியில் ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.51 லட்சம் பணம் பறிமுதல்-தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை.

தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட பணம் பறிமுதல்.

* சென்னையில் மதியம் 1 மணிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவுடன் தொகுதி பங்கீடு விவகாரத்தில் இழுபறி நீடிக்கும் நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி ஆலோசிக்க உள்ளது.

* அண்ணா பல்கலைகழகத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் துணை பதிவாளர் பார்த்சாரதி கைது.

ரூ.3.28 கோடி மோசடி செய்த வழக்கில் துணை பதிவாளரை கைது செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

25 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணி நியமன ஆணை வழங்கியது விசாரணையில் அம்பலமானது.

* சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 சரிந்து ரூ.34,128-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கம் விலை கிராமிற்கு ரூ.76 குறைந்து ஒரு கிராம் ரூ.4,266-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.60 காசு குறைந்து ரூ.72-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகள் வழக்கம் போல முழு நேரமும் இயங்கும்-பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

* அ.தி.மு.க-பா.ஜ.க இடையே இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை:

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு 25 முதல் 30 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு.

தொகுதி பங்கீடு விவரங்கள் நாளை வெளியாகும் என தகவல்.

* தி.மு.க உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி:

மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்தனியாக ஆலோசனை.

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், இரட்டை இலக்கத்தில் தொகுதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை.

* இறந்த தலைவர்களின் சிலைகளை மூடக்கூடாது - தேர்தல் ஆணையம் திட்டவட்டம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடத்தும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன - சத்யபிரதா சாகு.

* செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை'படத்துக்கு இடைக்கால தடை -ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனம்,ரேடியன்ஸ் மீடியாவிடம் ₨1.24 கோடி கடன் நிலுவையில் உள்ளதாக மனுவில் புகார்.

* தேர்தல் பரப்புரைக்காக மார்ச் 7-ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் தமிழகம் வருகை.

நாகர்கோவிலில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

* மார்ச் 10-ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வருகிறார்.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்பது குறித்து ஆலோசனை - சென்னை தனியார் ஹோட்டலில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன், பாமக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளன.

* சட்டப்பேரவை தேர்தலில் கணக்கில் வராத பணம் பிடிபடும் விவகாரம்:

புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை தொடக்கம்.

தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் படி, கட்டுப்பாட்டு அறை என வருமான வரித்துறை அறிவிப்பு.

1800 425 6669 என்ற இலவச தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் - வருமான வரித்துறை.

94453 94453 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் புகார்களை தெரிவிக்கலாம் - வருமான வரித்துறை.

* புதிய கட்சிகளை பதிவு செய்வதற்கான பொது அறிவிப்பு காலம் 30 நாட்களில் இருந்து 7 நாட்களாக குறைப்பு - இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

இந்த உத்தரவு தேர்தல் நடைபெறும் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும் விளக்கம்.

* வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பான சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

தற்காலிக சட்டத்தின் அடிப்படையில், எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என தென் நாடு மக்கள் கட்சி வழக்கு.

எம்.பி.சி பிரிவில் உள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும் -
மனுதாரர்.

தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் லாபத்திற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டு உள்ளது - மனுதாரர்.

மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்ப்பு.

* சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை.

காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாகத் தகவல்.

* தபால் வாக்களிக்கும் நபர்கள் குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

80 வயது நிறைவடைந்தவர்கள் யார் என எப்படி தெரியும்?

* திமுக மீது பாஜக தேவையற்ற குற்றச்சாட்டுகளை  சுமத்துகிறது" - கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்கள் சந்திப்பு.

* தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது - கே.எஸ்.அழகிரி.

பேச்சுவார்த்தையில் இரு கட்சிகள் இடையே பெருமளவுக்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

தொகுதி பங்கீடு தொடர்பாக, திமுகவுடனான பேச்சுவார்த்தை வெற்றி - கே.எஸ்.அழகிரி விளக்கம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages