மாட்டு வண்டியிலிருந்து விமானத்திற்கு... குக்கிராமத்திலிருந்து லண்டனில் சொந்த வீடு: இடப்பங்கீடு குறித்து பாட்டாளியின் பெருமிதம்! - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

மாட்டு வண்டியிலிருந்து விமானத்திற்கு... குக்கிராமத்திலிருந்து லண்டனில் சொந்த வீடு: இடப்பங்கீடு குறித்து பாட்டாளியின் பெருமிதம்! - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

மாட்டு வண்டியிலிருந்து விமானத்திற்கு...
குக்கிராமத்திலிருந்து லண்டனில் சொந்த வீடு: இடப்பங்கீடு குறித்து பாட்டாளியின் பெருமிதம்! - மருத்துவர் இராமதாசு அய்யா

சேலம் மாவட்டத்தில் பிறந்து லண்டனில் மென்பொருள் வல்லுனராக பணியாற்றி வரும் சீனிவாசன் விநாயகம்  இன்று என்னை தொலைபேசி மூலம் பணியாற்றி  10.50% இடப்பங்கீடு வென்றெடுத்ததற்காக வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.

அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல்:

சீனிவாசன் விநாயகம்: அய்யா வணக்கம்!!! அய்யா முதலில் உங்கள் பாதம் தொட்டு வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக்கொள்கிறேன்.

நான்  : எங்கிருந்துப்பா பேசற, என்ன பெயர்

சீனிவாசன் விநாயகம்: அய்யா எனது பெயர் சீனிவாசன் விநாயகம். பிறந்தது சேலம் மாவட்டம். பள்ளி பயின்றது தருமபுரி மாவட்டம். இட ஒதுக்கீட்டில் இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் பயின்றேன் அய்யா சென்னையில். மாட்டு வண்டியில் தொடங்கிய எனது பயணம் இன்று விமானத்தில். கிராமத்தில் பிறந்த எனக்கு இன்று இங்கிலாந்து தலைநகரில் குடியிருப்பு. இதற்கு மூல காரணம் எங்கள் அய்யாவாகிய நீங்கள் தான். எனது தலைமுறைக்கு விடி வெள்ளியாக இருந்த நீங்கள் எனது அடுத்த தலைமுறைக்கும் 10.5%  உள் ஒதுக்கீடு பெற்று தந்து உள்ளீங்க அய்யா.

நான் : ரொம்ப சந்தோசம் என்ன வேலை பார்க்குற

சீனிவாசன் விநாயகம்: நான் இங்கு மென்பொருள் வல்லுநராக வேலை பார்க்கிறேன் அய்யா. உங்களுக்கு நன்றி சொல்லுவது மிகையாகாது. என் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டு உள்ளேன் அய்யா.

அய்யா அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் கலந்தாய்வில் ME - Engineering Design departmentக்கு மொத்தம் 20 இடம் அதில் 4 இடம் MBCக்கு அதில் இறுதியில் நான்காவது இடமாக நான் எடுத்தேன்.  அய்யா எனக்கு முன் எடுத்த மூவரும் 108 சமூகத்தில் உள்ள வன்னியர் அல்லாத வேறு சமூகம். அன்று இந்த 10.5 % இருந்து இருந்தால் என்னுடன் சேர்ந்து என்னை போல இன்னொருவர் குடும்பமும் இன்று தலைதுக்கி இருக்கும் அய்யா

நான் : ஓ சரியா உள் ஒதுக்கீடு பற்றி தெரிஞ்ச வைத்து இருக்கப்பா

சீனிவாசன் விநாயகம்: அய்யா காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியார் பற்றி இந்த உலகம் பேசும்போது எனக்கு பொறாமையாக இருக்கும் நம்ம ஐயா பற்றி பேசவில்லை என்று. அய்யா இன்று பெருமைப்படுகிறேன். இன்றைய தலைமுறை உங்களை  சமூக நீதியின் தந்தை என பாராட்டுவதையும் நன்றி தெரிவிப்பதையும் பார்த்து மகிழ்கிறேன், மக்களிடம் உங்கள் 40 வருட கடின உழைப்பையும் புகழையும் கொண்டு சேர்ப்பேன் அய்யா..,

நான் : சரிப்பா குடும்பத்துடன் ஜாக்கிரதையா பாதுப்பாக இருக்கங்கா லண்டன்ல.., இந்தியா வந்தால் குடும்படுத்துடன் வந்து பாருங்க..,

சீனிவாசன் விநாயகம்:  கடந்த ஆண்டு லண்டன் வருகை தந்த அண்ணன் அன்புமணி அவர்களையும்  மற்றும் அண்ணன் ஏ கே மூர்த்தி அவர்களையும் சந்தித்து உரையாடியாது மிக்க மகிழ்ச்சியை தந்தது அய்யா.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages