அக்னிப்புரட்சி இன்றைய (06.03.2021)
முக்கிய செய்திகள்.
* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் 7 வது நாளாக மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.93.11 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.86.45 க்கும் விற்பனை.
* அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு.
கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலிலும் பாஜக போட்டி.
அதிமுக - பாஜக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
* தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று பேச்சுவார்த்தை. திமுக-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி பங்கீடு நேற்று இறுதியானது.
* தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.33,728-க்கு விற்பனை; ஒரு கிராம் தங்கம் ரூ.4,216-க்கு விற்பனை.
* திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. இடையேயான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நிறைவு:
திமுக ஒதுக்குவதாக கூறும் தொகுதிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை.
இன்று மாலை நடைபெறும் மார்க்சிஸ்ட் செயற்குழு கூட்டத்திற்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை - கே.பாலகிருஷ்ணன்.
* 365 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை விட 160 ரன்கள் முன்னிலை.
* அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக கருணாஸ் அறிவிப்பு.
முக்குலத்தோர் சமுதாயத்தை அதிமுக அரசு புறந்தள்ளிவிட்டதாக கருணாஸ் குற்றச்சாட்டு.
* இனி அதிமுக செய்த துரோகத்தை முன்னிருத்தி 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்வோம்” -கூட்டணியில் இருந்து விலகிய கருணாஸ் அதிரடி பேட்டி.
* குமரி மக்களவைத் தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டி - பாஜக தலைமை அறிவிப்பு.
* 20 தொகுதிகளில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது:
திமுகவுக்கு 20 தொகுதிகளை விட்டுக்கொடுத்துள்ளது அதிமுக.
மார்ச் 10-ம் தேதி விசிக வேட்பாளர் நேர்காணல் நடைபெறும்.
எந்தெந்த தொகுதியில் போட்டி என்பது ஓரிரு நாட்களில் இறுதிசெய்யப்படும் - திருமாவளவன்.
* சென்னை, தலைமை அலுவலகத்தில் மதிமுக உயர்நிலை குழு கூட்டம் தொடங்கியது.
அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் மதிமுக நிர்வாகிகள் ஆலோசனை.
பொதுச்செயலாளர் வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் பங்கேற்பு.
* இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி:
இறுதி டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி.
4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி:
இங்கிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியஷிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி.
* பாமக வுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு:
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பாமகவிற்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம்.
* முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் சந்திப்பு.
அதிமுக கூட்டணியில் த.மா.கா.வுக்கு 3 தொகுதிகள் வரையில் ஒதுக்கப்படலாம் எனத் தகவல்.
* சட்டப்பேரவை தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக - தேமுதிக பேச்சுவார்த்தை.
சென்னையில் உள்ள தனியார் விடுதியில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
* மீண்டும் உயரும் கொரோனா தாக்கம்:
தமிழகத்தில் இன்று (மார்ச் 6) 562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 560 பேர் டிஸ்சார்ஜ், 4 பேர் உயிரிழப்பு.
மொத்த பாதிப்பு: 8,54,554
உயிரிழப்பு: 12,517
டிஸ்சார்ஜ்: 8,38,085
சிகிச்சையில்: 3,952
* திமுக - மதிமுக இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் வைகோ தலைமையிலான மதிமுக நிர்வாகிகள் பங்கேற்பு.
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு.
மு.க.ஸ்டாலின் - வைகோ இருவரும் இணைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக சம்மதம்.
* 23 தொகுதிகள் வரை தற்போது நாங்கள் இறங்கி வந்துள்ளோம்;
தொகுதிப் பங்கீட்டில் இழுபறி ஏதுமில்லை, எங்கள் தரப்பில் பேச்சுவார்த்தை மட்டுமே உள்ளது- தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி.
* திமுக தோன்றியது காலத்தின் கட்டாயம்; அதே திமுக அகற்றப்பட வேண்டியதும் காலத்தின் கட்டாயம்;
தமிழகம் வெற்றி நடைபோடுகிறது என்கிறார்கள், எங்கே வெற்றி நடைபோடுகிறது என நான் கேட்கிறேன்- ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்.
No comments:
Post a Comment