அக்னிப்புரட்சி இன்றைய (08.03.2021) முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய (08.03.2021) முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய (08.03.2021) முக்கிய செய்திகள்.

* சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் 9 வது நாளாக மாற்றம் இன்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.93.11  க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.86.45 க்கும் விற்பனை.

* ஸ்டாலின் அப்படியே காப்பியடித்துவிட்டார்-கமல்ஹாசன்.

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 கொடுக்கும் திமுகவின் அறிவிப்பிற்கு கமல் விமர்சனம்.

என்னுடைய திட்டத்தை ஸ்டாலின் காப்பி அடித்துவிட்டார் - மநீம தலைவர் கமல்ஹாசன்.

இல்லதரசிக்கு ஊக்க தொகை வழங்குவோம் என்று கூறியதை திமுக காப்பியடித்துவிட்டது.

ஸ்டாலினுக்கு நாங்கள் தான் டயலாக் சொல்லி கொடுத்துள்ளது போல் பேசுகிறார்  - கமல்.

* பல்வேறு துறைகளில் இந்திய பெண்கள் சாதனை புரிந்து வருகின்றனர்.

பாலின வேறுபாடுகள் மற்றும் சமத்துவமின்மையை களைவதற்கு தொடர்ந்து பாடுபடுவோம்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து.

* தேமுதிக மாவட்டச் செயலாளர்களின் அவசர கூட்டம்:

அதிமுக உடனான தொகுதிப்பங்கீடு இன்னும் முடிவடையாத நிலையில், நாளை மாவட்ட செயலாளர்களின் கூட்டம் விஜயகாந்த் தலைமையில் நடக்கும் என்று தேமுதிக அறிவிப்பு.

* பிற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் - மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை.

பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குரல் - மாநிலங்களவை ஒத்திவைப்பு.

* திமுக கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு.

* தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்து வருகிறார் அஜீத் : ஓபிஎஸ் புகழாரம்.

பைக் ரேஸ், கார் ரேஸ் ஆகியவற்றில் ஆர்வம் கொண்ட அஜித், சமீபமாகத் துப்பாக்கி சுடுதல் போட்டியின் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.

46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை ரைஃபிள் கிளப்பின் உறுப்பினரான நடிகர் அஜித் 6 பதக்கங்களை வென்றார்.

* ரெப்கோவை வங்கியாகவே கருத முடியாது-உயர்நீதிமன்றம்.

ரிசர்வ் வங்கியிடம் உரிமம் பெறாததால் ரெப்கோவை வங்கியாகவே கருத முடியாது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கடன் செலுத்தாததால் ரெப்கோ வங்கி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து சென்னையை சேர்ந்த கணேசன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மனுதாரருக்கு ரெப்கோ வங்கி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரெப்கோ, ரிசர்வ் வங்கியின் உரிமம் பெறாமல் வங்கியை போல் செயல்படுவது சட்ட விரோதம் என மனுதாரர் தெரிவித்துள்ளார்.

உரிமம் பெற ரெப்கோ கொடுத்த மனு மீது ரிசர்வ் வங்கி இதுவரை முடிவெடுக்கவில்லை என்று மனுதாரர் தகவல் அளித்துள்ளார்.

* திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

* அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி - டி.டி.வி.தினகரன் தலைமையிலான அமமுகவுடன் கூட்டணி வைத்து தமிழகத்தில் போட்டி.

வாணியம்பாடி, சங்கராபுரம், கிருஷ்ணகிரி ஆகிய 3 தொகுதிகளில் போட்டி.

திமுக கூட்டணியில் அதியமானின் ஆதித்தமிழர் பேரவைக்கு ஒரு சீட் ஒதுக்கீடு. திமுக கூட்டணியில் மக்கள் விடுதலை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு.

*:அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டிற்கு 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் - முதல்வர் பழனிசாமி.

மாதம்தோறும் குடும்ப தலைவிக்கு ரூபாய் 1500 வழங்கப்படும் - முதல்வர் பழனிசாமி.

மார்ச் -12ம் தேதிக்குள் அதிமுக வேட்பாளர் பட்டியல் முழுமையாக வெளியிடப்படும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages